True
செஹான் சேமசிங்க வருமானம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
(புதிய NPP அரசாங்கத்திற்கு) அரச வருமானத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 13.1 சதவீதமாக அதிகரிப்பது சவாலாக இருக்கவில்லை.
Iroma TV | அக்டோபர் 21, 2024
Posted on: 16 ஜனவரி, 2025

True
பணிகள் ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு ICTயின் பங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மிகைப்படுத்துகின்றார்
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பணிகள் ஏற்றுமதி மூலம் 3.1 பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது 69% வளர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன் இதற்கு ICT, விநியோகம், போக்குவரத்து மற்றும் கட்டடவாக்கம் என்பன முக்கிய பங்கு வகித்துள்ளன.
இலங்கை வர்த்தகம் | அக்டோபர் 16, 2024
Posted on: 9 டிசம்பர், 2024

True
அரச கடன் தொடர்பில் பேராசிரியர் ஜயந்த விளக்கமளித்துள்ளார்
[...] செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி ரூ.465.1 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வழங்கியுள்ளது […] ரூ.465.1 பில்லியனில் ரூ.400 பில்லியன் கடன் தீர்ப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Daily Mirror | அக்டோபர் 17, 2024
Posted on: 1 நவம்பர், 2024

True
வருமான இலக்குகளை எட்டுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே சரியாகத் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வரி வருமானம் ரூ.1,700 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது 42.6% வளர்ச்சியாகும். ஆண்டு மதிப்பீட்டில் 44.7% வளர்ச்சியை எங்களால் பெற முடிந்தது. அத்துடன் வரியல்லாத வருமானம் 30.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆண்டு மதிப்பீட்டில் 52.7 சதவீதத்தை எட்டியுள்ளோம்.
| ஆகஸ்ட் 7, 2024
Posted on: 26 செப்டம்பர், 2024

True
அரச உத்தியோகத்தர்களின் குறைந்த சம்பளத்திற்கு பெறுமதிசேர் வரிச் சலுகைகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க காரணம் காட்டுகின்றார்
பெறுமதிசேர் வரி (VAT) சலுகையை வழங்காவிட்டிருந்தால், அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை மாதாந்தம் 30,000 ரூபாவால் அதிகரித்திருக்கலாம். அதுதான் உண்மை
பாட்டளி சம்பிக ரணவக்கவின் ஃபேஸ்புக் | ஜூலை 10, 2024
Posted on: 10 செப்டம்பர், 2024

True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: 27 ஆகஸ்ட், 2024

True
பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் வயதிலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களில் 34 சதவீதமானவர்கள் அடிப்படைக் கல்வியைக் கூடப் பெறுவதில்லை என்பதை சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகின்றது [...]. எனினும் இது 2012 ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்கள், இதுவே இறுதியான குடிசனக் கணக்கெடுப்பு ஆகும்.
இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் சனல் | ஜூன் 5, 2024
Posted on: 14 ஆகஸ்ட், 2024

True
பாராளுமன்ற உறுப்பினர் விதானகே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2023 நிதியாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் ரூ.609 பில்லியன் […] இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் […] ரூ.107,000 ஐச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மே 8, 2024
Posted on: 13 ஜூன், 2024

True
நடைமுறைக் கணக்கு மிகை தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சரியாகக் குறிப்பிடுகிறார்
“2022 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் நாங்கள் மிகையைப் பதிவுசெய்துள்ளோம். (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | பிப்ரவரி 7, 2024
Posted on: 28 மார்ச், 2024

True
பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
நமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 18 ஆம் திகதிக்கும் அக்டோபர் 18 ஆம் திகதிக்கும் இடையே நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
உதய கம்மன்பிலவின் யூடியூப் சேனல் | ஜனவரி 8, 2024
Posted on: 15 பிப்ரவரி, 2024

True
அரசாங்கத்தால் மாதாந்தக் கொடுப்பனவு பெறும் 4 மில்லியன் மக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய குறிப்பிடுகிறார்
4 மில்லியன் மக்கள் (குழு) அரசாங்கத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களில் 2 மில்லியன் ஊதியங்களில் உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒய்வூதியக்காரர்கள். மீதமுள்ள 2 மில்லியன் மக்கள் அஸ்வெசும ஊடாக சமூக நலன்புரித் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்.
ரன்ஜித் சியம்பலாபிடிய ஃபேஸ்புக் பக்கம் | நவம்பர் 8, 2023
Posted on: 8 பிப்ரவரி, 2024

True
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்ரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
பாதுகாப்பு அமைச்சைக் கருத்தில் கொள்ளும்போது, 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 7 சதவீதத்தை நாங்கள் அதற்காக (பாதுகாப்பு அமைச்சு) செலவழித்திருக்கிறோம்… அதில் 60 சதவீதமானது சம்பளங்களுக்காகச் சென்றுள்ளது… (தொடர்ச்சி)
பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 14, 2023
Posted on: 26 ஜனவரி, 2024

True
பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023

True
EPF உண்மையான வருமானங்கள் தொடர்பில் பா.உ ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
[…] (EPF) சட்டத்தில் 2.5% வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. […] அந்த நேரத்தில் பணவீக்கம் சுமார் 1 சதவீதமாக இருந்தது. 1958 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளை நீங்கள் பார்த்தால், பணவீக்கம் சராசரி 1 சதவீதமாக இருந்தது. […] (தொடர்...)
நியூஸ்லைன் | மே 22, 2023
Posted on: 29 செப்டம்பர், 2023

True
சிறைச்சாலைகளுக்கான செலவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
இன்றைய நிலவரப்படி, சிறைச்சாலைகளில் உள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 28,468. […] போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது. இன்றைய நிலவரப்படி, மொத்தக் கைதிகளில் 50.3 சதவீதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள். (தொடர்...)
ஏசியன் மிரர் | ஆகஸ்ட் 10, 2023
Posted on: 21 செப்டம்பர், 2023

True
பா.உ அமரசூரிய: பெண்கள் அதிகம் பங்களிக்கும்போதிலும் தொழிற்படையில் குறைவாகக் கணக்கிடப்படுகிறார்கள்
…தொழிற்படையில் பங்கேற்பை அளவிடும்போது சில காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை… பெண்களால் செய்யப்படும் ஊதியம் பெறப்படாத பெரும்பாலான வேலைகள் இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படுவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் முன்வைக்கப்படும் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 60 சதவீதமான பராமரிப்பு வேலைகள்,...
NPP உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் NPP ஊடக சந்திப்பு | ஜூலை 16, 2023
Posted on: 21 ஆகஸ்ட், 2023

True
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் மத்திய வங்கியின் பாரபட்ச செயல்பாடு குறித்து பா.உ கம்மன்பில குறிப்பிடுகிறார்
பொது மக்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்துடன் மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு தனியான சேமலாப நிதியம் ஒன்றையும் பராமரிக்கிறது […]
உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | ஜூலை 4, 2023
Posted on: 17 ஆகஸ்ட், 2023

True
வாகனங்களின் இறக்குமதி எண்ணிக்கை குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்
…[2015-2020] இந்தக் காலப்பகுதிக்குள் நாங்கள் 2,498,714 வாகனங்களைக் கொண்டு வந்துள்ளோம்… இவற்றின் பெறுமதி ரூ.1,331.51 பில்லியன்… நாங்கள் (அவற்றின் பெறுமதிக்கு) 991.12 பில்லியனை வரியாக விதித்துள்ளோம்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | ஜூன் 9, 2023
Posted on: 27 ஜூலை, 2023

True
பா.உ கம்மன்பில: உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க IMF நிபந்தனை விதிக்கவில்லை, ஆனால் வெளிக்கடன் வழங்குனர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனை விதிக்கவில்லை. …அவ்வாறு இருக்கும் நிலையில், அதனைச் செய்யுமாறு எங்களை மிரட்டியது யார்?
மிரர் நியூஸ் யூடியூப் பக்கம் | ஜூன் 27, 2023
Posted on: 27 ஜூலை, 2023

True
இலங்கையில் வறுமை அதிகரித்துள்ளதை பா.உ கபீர் ஹஷீம் சரியாகக் குறிப்பிடுகிறார்
“…2019ல் இந்த நாட்டின் வறுமைக் கோடு 11 சதவீதமாக இருந்தது… 2023ல் இது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை விட அதிகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். ஆனால் உலக வங்கி இதை 25 சதவீதமாகக் கணக்கிட்டுள்ளது. அதாவது இந்த நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில் 5.5 மில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளனர்.”
இலங்கை பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | மே 12, 2023
Posted on: 29 ஜூன், 2023

True
நிதி முகாமைத்துவச் சட்டங்களுடன் இணங்காமை குறித்து அமைச்சர் குணவர்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
… 2003ம் ஆண்டின் 3 ஆம் இல. அரசிறை முகாமைத்துவ பொறுப்பு சட்டத்தில்… மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன… வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கும் குறைவாகப் பேணுதல்… 10 ஆண்டுகளில் அதாவது 2013ம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 65 சதவீதமாக பொதுப் படுகடனைக் குறைத்தல்…
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் பக்கம் | மே 9, 2023
Posted on: 9 ஜூன், 2023

True
அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”
டெய்லி FT | ஏப்ரல் 20, 2023
Posted on: 25 மே, 2023

True
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றில் தெளிவில்லை
பற்றாக்குறைக்கு நிதியளிக்கும் திட்டம்: 2023-27 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடன் சேவைக் குறைப்பு, வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், 2022 ல் நிலுவைகள் உட்பட ஐ.அ.டொ 17 பில் கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | ஏப்ரல் 26, 2023
Posted on: 18 மே, 2023

True
பணவனுப்பல்களின் அதிகரிப்பு குறித்து அமைச்சர் நாணாயக்கார சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மார்ச் 2022ல் ஐ.அ.டொ 318.4 மில்லியனில் இருந்து மார்ச் 2023ல் ஐ.அ.டொ 568.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022ல் பதிவான உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் இது 78.5% (ஐ.அ.டொ 249.9 மில்லியன்) அதிகரிப்பாகும்.
மனுஷ நாணாயக்காரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஏப்ரல் 6, 2023
Posted on: 11 மே, 2023

True
பணம் அச்சிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் அச்சிடப்பட்ட மொத்த தளப் பணம் ரூ.344 பில்லியன் ஆகும். அதேவேளை 2022ல் விநியோகிக்கப்பட்ட தேறிய அடிப்படை ஒதுக்கு பணம் ரூ.40 பில்லியனுக்கும் குறைவாகும்.
டெய்லி FT | பிப்ரவரி 11, 2023
Posted on: 27 ஏப்ரல், 2023

True
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சரியாகத் தெரிவிக்கிறார்
...இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அதன் அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விலையேற்றத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது…
ManthriLK_Watch | பிப்ரவரி 24, 2023
Posted on: 23 மார்ச், 2023

True
பதிவுசெய்யப்பட்ட வரிக் கோப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து ஜனாதிபதி சரியாகக் குறிப்பிடுகிறார்
2019ம் ஆண்டில் மொத்தமாக 1.5 மில்லியன் வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன... அதாவது மொத்தமாக எங்களிடம் 1.6 மில்லியன் வரிக் கோப்புகள் காணப்பட்டன. நாங்கள் உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) இல்லாதொழித்தபோது டிசம்பர் 2021ல் எங்களிடம் 400,000 வருமான வரிக் கோப்புகள் (மட்டுமே) காணப்பட்டன.
President’s Media Division | ஜனவரி 28, 2023
Posted on: 9 மார்ச், 2023

True
நேரடி வரிகள் குறைவாக வசூலிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்
பிற நாடுகளில் அநேகமான வரிகள் கூடுதல் வருமான வரம்பிலிருந்தே சேகரிக்கப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்தியாவில் 50% நேரடி வரி.. பங்களாதேஷில் 32% நேரடி வரி.. நேபாளத்தில் 31%.. 69%.. இந்தோனேசியாவில் 40% நேரடி வரி... வியட்னாமில் 31%, தாய்லாந்தில் 37% நேரடி வரி.. மலேசியாவில் 66% நேரடி வரி..
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை | பிப்ரவரி 8, 2023
Posted on: 17 பிப்ரவரி, 2023

True
மலையகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணப்படும் இடைவெளி குறித்து பா.உ மனோ கணேசன் சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நகரப்புறங்களில் 43 சதவீதமாகவும் கிராமங்களில் 34 சதவீதமாகவும் காணப்படும் அதேவேளை, மலையகத்தில் 51% எனும் உயர்மட்டத்தில் உள்ளது. நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் மலையகத்தில் இது 53 சதவீதமாக உள்ளது என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது.
டெய்லி மிரர் | நவம்பர் 21, 2022
Posted on: 12 ஜனவரி, 2023

True
பாராளுமன்ற உறுப்பினர் அலகியவன்ன: 2018 – 2021 காலப்பகுதியில் இலங்கையில் காற்று மாசு குறைந்துள்ளது
காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 2018ம் ஆண்டு ஆசியாவில் 7வது இடத்தில் நாங்கள் இருந்தோம். தற்போது முன்னேறி 12வது இடத்தில் இருக்கிறோம் (ஆசியாவில்). உலகளவில் நாங்கள் 17வது இடத்தில் இருந்தோம் (2018ம் ஆண்டில்). தற்போது இந்த நிரல்படுத்தலில் முன்னேறி உலகளவில் 58வது இடத்தில்...
லங்காதீப | நவம்பர் 29, 2022
Posted on: 15 டிசம்பர், 2022

True
ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காணி உரிமை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
“ஏறக்குறைய 80 சதவீதமான காணிகளுக்கு அரசாங்கம் உரிமையாளர் என்ற வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்ககை எடுக்கப்படும்.”
இடைக்கால வரவு செலவுத்திட்ட உரை (2022), | ஆகஸ்ட் 30, 2022
Posted on: 27 அக்டோபர், 2022

True
மதுபானம் மற்றும் புகையிலை வரிகள் தொடர்பில் பா.உ சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் மொத்த வரி வருமானத்தில் 19% புகையிலை மற்றும் மதுபானம் மூலம் பெறப்பட்டுள்ளது.
டெய்லி நியூஸ் | செப்டம்பர் 21, 2022
Posted on: 20 அக்டோபர், 2022

True
ஏற்றுமதி குறைந்துள்ளது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2001ல் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி மூலமான வருமானம் 33 சதவீதமாகக் காணப்பட்டது. தற்போது இது 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
அணுகுவதற்கு | செப்டம்பர் 13, 2022
Posted on: 30 செப்டம்பர், 2022

True
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு கடினமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்
2025ம் ஆண்டுக்குள் ஆரம்ப கணக்கு மீதியை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கியுள்ளது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் (-6%) வீழ்ச்சியடைந்தது.
டெய்லி FT | செப்டம்பர் 5, 2022
Posted on: 22 செப்டம்பர், 2022

True
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை குறித்து ஹசீம் சரியாகத் தெரிவிக்கிறார்
2021 டிசம்பரில் அரச நிறுவனங்களால் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான தொகை கடனாகப் பெறப்பட்டுள்ளது.
திவயின | ஆகஸ்ட் 18, 2022
Posted on: 15 செப்டம்பர், 2022

True
அமைச்சர் குணவர்தன புகையிரத சேவைகள் குறித்து சரியாகத் தெரிவிக்கிறார்
2021ம் ஆண்டில் இலங்கை புகையிரத சேவைகள் ரூ.2.6 பில்லியனை வருமானமாக ஈட்டியிருந்தாலும் சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக மட்டும் ரூ.7.8 பில்லியனைச் செலுத்த வேண்டியிருந்தது.
மவ்பிம | ஜூலை 27, 2022
Posted on: 8 செப்டம்பர், 2022

True
ஜனாதிபதி விக்கிரமசிங்க: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2020-2021ம் ஆண்டில் மட்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் ரூ.45 பில்லியன். மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்த நட்டம் ரூ.372 பில்லியன்
லங்காதீப | மே 17, 2022
Posted on: 2 செப்டம்பர், 2022

True
பெற்றோல் விலையைக் குறைப்பதற்கான சாத்தியத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்
நேற்றிரவு பெற்றோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 150 ரூபாவால் குறைக்க முடியும் என நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியிருந்தேன்.
PUCSL Press Release | ஜூலை 18, 2022
Posted on: 4 ஆகஸ்ட், 2022

True
கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் கூறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே நாங்கள் பெற்றுக்கொண்ட கடன்களில் 80% பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 27, 2022
Posted on: 28 ஜூலை, 2022

True
இலங்கைக்கு EFF பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் சரியாக மதிப்பிடுகிறார்
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கக்கூடிய நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதி (EFF – Extended Fund Facility) நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இதற்குப் பொதுவாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 19, 2022
Posted on: 16 ஜூன், 2022

True
எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து அமைச்சர் விஜேசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்
எரிபொருள் விலை இன்று அதிகாலை 3 மணி முதல் திருத்தம் செய்யப்படவுள்ளது. அமைச்சரவையினால் ஒப்புக்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி விலைகள் திருத்தப்படவுள்ளன.
கஞ்சன விஜேசேகரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 24, 2022
Posted on: 2 ஜூன், 2022

True
தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
லங்காதீப | மார்ச் 7, 2022
Posted on: 5 மே, 2022

True
எரிபொருள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில சரியாகக் குறிப்பிடுகிறார்
ஒரு லீற்றர் 92-ஒக்டெய்ன் பெற்றோல் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) ரூ.19 நட்டம் ஏற்படுகிறது… ஒரு லீற்றர் டீசலில் இருந்து ரூ.52 நட்டம் ஏற்படுகிறது… ஒரு லீற்றர் 92-ஒக்டெய்ன் பெற்றோலுக்கு அரசாங்கம் ரூ.42 வரி அறவிடுகிறது… மற்றும் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.17 அறவிடுகிறது.
டெய்லி நியூஸ் | பிப்ரவரி 21, 2022
Posted on: 10 மார்ச், 2022

True
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
”இப்போது ஆசியாவிலேயே நாங்கள் தான் (இலங்கை) உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கிறோம்”
அத தெரண | பிப்ரவரி 1, 2022
Posted on: 3 மார்ச், 2022

True
இலங்கையின் ஒதுக்குகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானது
2019 மற்றும் 2021ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 80% ஆகும். ஆனால் (தெற்காசியா) பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளில் ஒதுக்குகளில் அதிகரிப்பு காணப்படுகிறது.
டெய்லி FT | ஜனவரி 25, 2022
Posted on: 24 பிப்ரவரி, 2022

True
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பயணம் குறித்து அமைச்சர் அழகப்பெரும சரியாகக் குறிப்பிடுகிறார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) உறுப்புரிமையைப் பெறுவதற்காக 1950 ஆம் ஆண்டில் நாங்கள் நிதியத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். உறுப்புரிமை பெற்ற நாடாக, 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 16 தடவைகள் கடன்களைப் பெற்றுள்ளோம்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 19, 2022
Posted on: 17 பிப்ரவரி, 2022

True
அமைச்சர் பசில் ராஜபக்ஷ முட்டை மற்றும் கோழி இறைச்சியில் தன்னிறைவு பெற்றுள்ளதைச் சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை ஏற்கனவே முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றில் தன்னிறைவு இலக்கை அண்மித்துள்ளது.
2022 வரவு செலவுத் திட்ட உரை | நவம்பர் 12, 2021
Posted on: 8 டிசம்பர், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்க இயற்கை விவசாயம் குறித்த புள்ளிவிபரங்களைச் சரியாகக் குறிப்பிடுகிறார்
”உலகில் 16 நாடுகள் மட்டுமே குறைந்தது 10% இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அந்த 16 நாடுகளில் எந்த ஆசிய நாடும் இடம்பெறவில்லை”.
ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 26, 2021
Posted on: 17 நவம்பர், 2021

True
எரிபொருள் இறக்குமதி செலவினம் குறித்து எரிசக்தி அமைச்சர் கம்மன்பில சரியாகத் தெரிவிக்கிறார்
மொத்த இறக்குமதி செலவினத்தில் எரிபொருள் முதன்மையானதாக இருப்பதுடன் அதற்காக 20 சதவீதத்திற்கும் அதிகமாகச் செலவிடப்படுகிறது.
தினமின | அக்டோபர் 1, 2021
Posted on: 4 நவம்பர், 2021

True
எரிவாயு பைப்லைன் ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கவின் எதிர்ப்பு சரியானது
…பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து டெண்டர் செயல்முறையில் இடம்பெற்றிருக்காத அமெரிக்க நிறுவனத்திற்கு (நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி) இந்தக் கட்டுமானத்தை (யுகதனவி மின்நிலையத்தை LNG நிலையமாக மாற்றுவதற்கு) கையளித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 19, 2021
Posted on: 28 அக்டோபர், 2021

True
வரிக்கான மன்னிப்பு என்பது பண மோசடிக்கான மன்னிப்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்
”…. [2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இல. நிதிச் சட்டம்] நாட்டிலுள்ள பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் அல்லது வேறு எந்த நிதிச் சட்டத்தையும் செல்லுபடியற்றதாக்க முடியாது என்ற உண்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.”
திவயின | செப்டம்பர் 10, 2021
Posted on: 21 அக்டோபர், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன இலங்கையின் வட்டிக் கொடுப்பனவு குறித்துச் சரியாகத் தெரிவிக்கிறார்
கடன் மீள்கொடுப்பனவு வட்டிக்காக அரசாங்க வருமானத்தில் 70% செலவிடப்படுகிறது. தேசிய வருமானத்தின் சதவீதமாக வட்டியைக் கணக்கிடும் போது இலங்கையை விட அதிக வட்டியைச் செலுத்தும் ஒரே நாடு லெபனான்.
டெய்லி FT | ஆகஸ்ட் 5, 2021
Posted on: 30 செப்டம்பர், 2021

True
அமைச்சர் ரம்புக்வெல்ல உள்நாட்டு பால் உற்பத்தி தொடர்பில் சரியாகத் தெரிவிக்கிறார்
(உள்நாட்டு) பால் உற்பத்தி தற்போதும் மொத்தத் தேவையில் சுமார் 40 சதவீதமாகவே உள்ளது.
டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 11, 2021
Posted on: 16 செப்டம்பர், 2021

True
சீனி வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மதிப்பிடுகிறார்
சீனி தொடர்பான ஊழலினால் இலங்கை ரூ.20 பில்லியனை இழந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 27, 2021
Posted on: 9 செப்டம்பர், 2021

True
சனத்தொகையில் அதிகமானவர்கள் விவசாயத் துறையில் தங்கியிருப்பது குறித்து இராஜாங்க அமைச்சர் கொடஹேவா சரியாகக் குறிப்பிடுகிறார்
நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயத் துறையின் பங்களிப்பு 10 சதவீதத்தை விடக் குறைவாக இருந்தாலும், நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் (அதாவது) 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வருமானத்திற்காக விவசாயத்தில் தங்கியுள்ளனர்.
மவ்பிம | ஜூலை 1, 2021
Posted on: 19 ஆகஸ்ட், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க இலங்கையின் கடனில் மறைக்கப்பட்ட ஒரு அம்சத்தை குறிப்பிடுகிறார்
பொதுத்துறைக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 109.7% என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமானது. பன்னாட்டு முறிகளை அரசாங்கம் குறைமதிப்பிட்டதை நாங்கள் புறக்கணித்தால் இந்தப் பெறுமதி மொ.உ.உற்பத்தியின் 113 சதவீதத்தைத் தாண்டும்.
தினமின | ஜூன் 2, 2021
Posted on: 5 ஆகஸ்ட், 2021

True
சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தின் வீழ்ச்சி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் கோவிட் – 19 பெருந்தொற்றினாலும் சுற்றுலாத் துறை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியினால் ஆண்டொன்றுக்கு இலங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் ஐ.அ.டொலர் 5 பில்லியனை இழந்திருக்கிறோம்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜூலை 13, 2021
Posted on: 29 ஜூலை, 2021

True
எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) பேரிடரினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறை குறித்து பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கை மத்திய வங்கி 2019 அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடற்றொழில் துறை 1.1% பங்களிப்பை வழங்கியுள்ளது.
திவயின | ஜூன் 3, 2021
Posted on: 1 ஜூலை, 2021

True
சீனாவுக்கான கடன் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் கடனில் 14% சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது…
தினமின | மே 10, 2021
Posted on: 3 ஜூன், 2021

True
கைத்தொழில் உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சரியான அவதானிப்புக்களை வழங்குகின்றார்
இலங்கையின் தேசிய உற்பத்தி செயற்பாட்டில் கைத்தொழில்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 26.4% பங்களிப்பை வழங்குகின்றன. அத்துடன் சுமார் 10% என்ற மிகக்குறைந்த அளவில் மட்டுமே ஏற்றுமதிக்குப் பங்களிக்கின்றன.
டெய்லி FT | ஏப்ரல் 9, 2021
Posted on: 31 மே, 2021

True
இராஜாங்க அமைச்சர் கப்ரால்: கடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை சரியாகக் குறிப்பிடுகின்றார்
2015 முதல் 2019 வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,515,546. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,239 பில்லியன்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 6, 2021
Posted on: 20 மே, 2021

True
தேசிய கணக்கு மோசடியை பா.உ ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்துகின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 11% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது 14 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஹர்ஷ டி சில்வாவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 1, 2021
Posted on: 13 மே, 2021

True
10% பணக்காரர்கள் வருமானத்தை பங்கிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் தேசிய வருமானத்தின் 35 சதவீதம் சனத்தொகையின் 10 சதவீதத்தினால் அனுபவிக்கப்படுகின்றது.
திவயின | மார்ச் 30, 2021
Posted on: 29 ஏப்ரல், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க: இலங்கையின் சீனி மற்றும் கொழுப்பு (இறக்குமதி) உயர்ந்துள்ளதை சரியாகக் குறிப்பிடுகின்றார்.
2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனி இறக்குமதி 38 சதவீதத்தினாலும், எண்ணெய் மற்றும் கொழுப்புக்களின் இறக்குமதி 237 சதவீதத்தினாலும் உயர்ந்துள்ளன.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 11, 2021
Posted on: 1 ஏப்ரல், 2021

True
பிரதமர் ராஜபக்ஷ: விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்
ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 2019 ஆம் ஆண்டில் ரூ.63, 000 மில்லியன். ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் இதனை ரூ.73, 000 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
தினமின | மார்ச் 3, 2021
Posted on: 19 மார்ச், 2021

True
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா: தேயிலை ஏற்றுமதியிலுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றார்.
2020 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதியின் அளவு முந்தைய ஆண்டினை விட 9.2 சதவீதத்தினால் அல்லது 27 மில்லியன் கிலோவினால் குறைந்து 265.5 மில்லியன் கிலோவாகக் காணப்படுகின்றது, பெறுமதியின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.10.4 பில்லியனால் அல்லது 4.3 சதவீதத்தினால் குறைந்து ரூ.230.1 பில்லியனாக உள்ளது
டெய்லி FT | பிப்ரவரி 9, 2021
Posted on: 4 மார்ச், 2021

True
பங்கு பரிவர்த்தனையில் இருந்து வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்களை பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகின்றார்.
பங்கு பரிவர்த்தனையில் இருந்து பாரிய அளவிலான வெளிநாட்டு முதலீடு வெளியே சென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பில் ரூ.51 பில்லியன் வெளிப்பாய்ச்சல் பதிவாகியுள்ளது…
லங்கா பிசினஸ் ஒன்லைன் | ஜனவரி 18, 2021
Posted on: 25 பிப்ரவரி, 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் யாப்பா வனப்பரப்பு தொடர்பில் சரியாகத் தெரிவிக்கின்றார்
இலங்கையின் வனப்பரப்பு 29.2% சதவீதம் மாத்திரமே.
லங்காதீப | டிசம்பர் 9, 2020
Posted on: 5 பிப்ரவரி, 2021

True
இராஜாங்க அமைச்சர் கப்ரால்: ஒதுக்குகள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்.
எங்களிடம் ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஒதுக்குச் சொத்துக்கள் காணப்பட்டன... நல்லாட்சி அரசாங்கம் எங்களிடம் அரசாங்கத்தை கையளித்த போது, ஒதுக்குச் சொத்துக்களில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியன் மாத்திரமே காணப்பட்டது.
மவ்பிம | ஜனவரி 7, 2021
Posted on: 27 ஜனவரி, 2021

True
நாணயம் அச்சிடல்: பணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரையில் ரூ.130 பில்லியன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அருண | நவம்பர் 12, 2021
Posted on: 21 ஜனவரி, 2021

True
இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி: கோவிட் -19 புதைப்பது தொடர்பான கவலைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது
கோவிட் – 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் என்பன தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன… இந்த உலகளாவிய தொற்று
நியூஸ் பெர்ஸ்ட் | டிசம்பர் 31, 2020
Posted on: 14 ஜனவரி, 2021

True
வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.
லங்காதீப | அக்டோபர் 12, 2020
Posted on: 26 நவம்பர், 2020

True
ஜனாதிபதி ராஜபக்ஷ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
தினமின | செப்டம்பர் 30, 2020
Posted on: 12 நவம்பர், 2020

True
தேசிய சுதந்திர முன்னணி: முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதை சரியாகத் தெரிவித்துள்ளது
(முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில்) கம்பெனிகள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் நிறுவனங்களில், அரசாங்கம் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தால் கணக்காய்வாளர்
தேசிய சுதந்திர முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கை | அக்டோபர் 2, 2020
Posted on: 22 அக்டோபர், 2020

True
பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாக உள்ளதென குறிப்பிடுகின்றார்.
...மத்திய வங்கியின் 2009 [sic, 2019] ஆண்டறிக்கையின் பிரகாரம், இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் 34.5% ஆகும். இது ஆண்களுக்கு 73 சதவீதமாக உள்ளது... உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தை கொண்டுள்ள ஒரு நாடாக நாங்கள் இருக்கின்றோம்.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 10, 2020
Posted on: 14 அக்டோபர், 2020

True
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020

True
அமைச்சர் பீரிஸ் சரியாகத் தெரிவிக்கின்றார்: 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியிடம் தடையற்ற அதிகாரம் காணப்பட்டது
“19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, பாராளுமன்றத்தை கலைப்பதற்கும், அவரது கொள்கைகளுக்கு இணங்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் காணப்பட்டது...
லங்காதீப | ஆகஸ்ட் 10, 2020
Posted on: 16 செப்டம்பர், 2020

True
வங்கித்துறையின் வலிமை குறித்த ஆளுநரின் கூற்றினை நம்பலாம்
வங்கித்துறையின் மொத்த மூலதனப் போதுமை விகிதம் 16 சதவீதத்திற்கும் மேல், நிகர நிலையான நிதி விகிதம் 130 சதவீதத்திற்கும் மேல், பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் 175 சதவீதத்திற்கும்
டெய்லி நியூஸ் | ஜூன் 8, 2020
Posted on: 30 ஜூலை, 2020

True
கடன் சுமை தொடர்பில் உதய கம்மன்பில: புள்ளிவிபரங்கள் சரியானவை, ஆனால் அதன் மூலம் எட்டப்பட்ட முடிவு சரியில்லை
2005 ஆம் ஆண்டில் நாங்கள் நாட்டினைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, இலங்கையின் கடன் சுமை 103 சதவீதமாக இருந்தது
மவ்பிம | ஜூலை 8, 2020
Posted on: 23 ஜூலை, 2020

True
ஜப்பானின் கடன் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே தெரிவிக்கின்றார்.
ஒரு நாடாக, ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்கியுள்ளது
அருண | ஜூன் 16, 2020
Posted on: 8 ஜூலை, 2020

True
அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன: தனியார் வைப்பு பாதுகாப்பு குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்.
நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வைப்பிலிடப்படும் போது, இலங்கை மத்திய வங்கி 600,000 ரூபா வரை மாத்திரமே பொறுப்பாகின்றது.
அரச தகவல் திணைக்கள பேஸ்புக் பக்கம் | ஜூன் 4, 2020
Posted on: 25 ஜூன், 2020

True
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது குறித்து தினேஷ் குணவர்த்தன சரியாக தெரிவிக்கின்றார்.
2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைத்த வருமானம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9% ஆகும்.
திவயின | ஜூன் 9, 2020
Posted on: 18 ஜூன், 2020

True
கொவிட் – 19 சமூகத்தொற்று குறித்து ஆரோக்கியமான மதிப்பீட்டினை பவித்ரா வன்னியாராச்சி முன்வைக்கின்றார்.
நிறைவடைந்த மூன்று வார காலத்தில் (கொவிட் - 19) தொற்றாளர்கள் யாரும் சமூகத்தில் இருந்து கண்டறியப்படவில்லை, ஏனென்றால் இந்த தொற்று சமூகத்தில் இன்னும் பரவவில்லை.
அத தெரண | மே 20, 2020
Posted on: 3 ஜூன், 2020

True
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாஸ சரியாகத் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எங்களால் முடியவில்லை. இன்றும் கூட பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 சதவீதமாகவே உள்ளது
மவ்பிம | அக்டோபர் 22, 2019
Posted on: 21 ஜனவரி, 2020

True
கடந்த கால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல: சரியானது ஆனாலும் தவறாக வழி நடத்தும்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொறுப்பினை கையேற்றுக் கொண்ட போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்
தினமின | டிசம்பர் 4, 2019
Posted on: 15 ஜனவரி, 2020

True
பெண்களின் உயர்கல்வி குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சரியாகத் தெரிவித்துள்ளார்.
இன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.
திவயின | செப்டம்பர் 2, 2019
Posted on: 20 டிசம்பர், 2019

True
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க சட்டரீதியான பலாத்காரம் தொடர்பில் சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 1,600 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
திவயின | அக்டோபர் 25, 2019
Posted on: 6 நவம்பர், 2019

True
தொழிற்படையில் உள்ள பாலின இடைவெளி தொடர்பில் விக்கிரமரத்ன சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு 36 சதவீதமாகவும், ஆண்களின் பங்கேற்பு 75 சதவீதமாகவும் காணப்பட்டது. உலகளவில் தொழிற்படை பங்கேற்பில் பாரிய பாலின இடைவெளியைக் கொண்ட 14 ஆவது நாடாக இலங்கை உள்ளது.
டெய்லி FT | செப்டம்பர் 25, 2019
Posted on: 24 அக்டோபர், 2019

True
சுகாதாரத்துறை வரவு செலவுத்திட்டத்தில் ஆரோக்கியமான அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் அபேசிங்க தெரிவிக்கின்றார்.
2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்
தினமின | ஆகஸ்ட் 22, 2019
Posted on: 22 அக்டோபர், 2019

True
அமைச்சர் றிஸாட் பதியுதீன்: ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் திருப்தியாக உள்ளன.
தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்/வர்த்தக செயலாக்க முகாமைத்துவம், மின்னணு, அச்சு மற்றும் பொதிசெய்யும் சேவைகள் மாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 1.3 பில்லியன் டொலர்களை பங்களிப்புச் செய்கின்றன.
டெய்லி FT | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 9 அக்டோபர், 2019

True
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிக்கப்பட்ட சதவீதம் குறித்து சேனாதிராஜா சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இவை வட மாகாணத்தில் மாத்திரம் விடுவிக்கப்பட்டவை அல்ல.
வட மாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 75 வீதமானவை பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
தினமின | ஆகஸ்ட் 16, 2019
Posted on: 11 செப்டம்பர், 2019

True
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அபேசிங்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
தற்போது வரையில், புகையிரத வண்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 400,000… பயணிகள் போக்குவரத்தில் (பேருந்தில்) 75 வீதமானது தனியார் துறையினாலும்,
திவயின | ஜூன் 24, 2019
Posted on: 7 ஆகஸ்ட், 2019

True
நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் பண்டார சரியாக குறிப்பிடுகின்றார்
நீரில் மூழ்குவதால் வருடாந்தம் சுமார் 800 மரணங்கள் சம்பவிக்கின்றன.
தினமின | மே 15, 2020
Posted on: 25 ஜூலை, 2019

True
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு பல மில்லியன் (ரூபா) நட்டத்தை சந்திக்கின்றன.
திவயின | ஜூன் 4, 2019
Posted on: 24 ஜூலை, 2019

True
சுற்றுலாத் துறையின் வருமானத்தை அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சரியாகத் தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது.
தினமின | மே 22, 2019
Posted on: 7 ஜூலை, 2019

True
சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் சரியாக குறிப்பிடுகிறார்
2015 இல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியன், 2018 இல் இது 2.3 மில்லியனாக உயர்ந்தது.
டெய்லி நியூஸ் | மார்ச் 27, 2019
Posted on: 17 மே, 2019

True
இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளமை குறித்து அமைச்சர் மங்கள சமரவீர சரியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 2.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 13, 2019
Posted on: 11 ஏப்ரல், 2019

True
பாராளுமன்றத்தில் உரையாற்றாத உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சரியாகவே தெரிவித்துள்ளார்.
(2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில்) 95 சதவீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். 5 சதவீதமானவர்கள் மாத்திரமே பேசவில்லை.
சிலுமின | மார்ச் 3, 2019
Posted on: 1 ஏப்ரல், 2019

True
தேயிலை மற்றும் இறப்பரின் பொருளாதார பங்களிப்பினை பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இறப்பர் தொழில்துறை 0.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களிக்கின்றன.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 6 மார்ச், 2019

True
மலையகத் தொழிலாளர்களின் வறுமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சரியாகவே தெரிவித்துள்ளார்.
அவர்கள் (மலையகத் தொழிலாளர்கள்) தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தினை உணவுக்காக செலவிடுகின்றார்கள்.
டெய்லி நியூஸ் | ஜனவரி 25, 2019
Posted on: 21 பிப்ரவரி, 2019

True
அமைச்சர் சமரவீரவின் கூற்று சரியானது: ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 34 இடங்கள் முன்னேறியுள்ளது.
ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருந்து 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
திவயின | செப்டம்பர் 28, 2020
Posted on: 12 அக்டோபர், 2018

True
அமைச்சர் பெர்னான்டோ சரியாகவே தெரிவித்துள்ளார் – கடந்த 3 ஆண்டுகளில் 500,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக
“2014 ஆம் ஆண்டில் 7.7 மில்லியனான காணப்பட்ட வேலை வாய்ப்புக்கள் 2017 ஆம் ஆண்டில் 8.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.”
டெய்லி நியூஸ் | அக்டோபர் 3, 2018
Posted on: 11 அக்டோபர், 2018

True
உலகில் மக்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களின் மெர்ஸர் பட்டியலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியாக குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களில் கொழும்பு தெற்காசியாவில் முதலிடத்தில் இருந்தாலும், 231 நகரங்களில் 137 ஆவது இடத்தில் உள்ளது
டெய்லி நியூஸ் | ஜூலை 10, 2018
Posted on: 19 செப்டம்பர், 2018

True