மங்கள சமரவீர

அமைச்சர் சமரவீரவின் கூற்று சரியானது: ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 34 இடங்கள் முன்னேறியுள்ளது.

"

ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருந்து 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

திவயின | செப்டம்பர் 28, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருந்து 131 ஆவது இடத்திற்கு முன்னேறியூள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையானது எல்லைகளற்ற ஊடகவியலாளர்களினால் (Reporters Without Borders) தொகுக்கப்படுகின்றது. சுட்டெண்ணை பார்வையிட: https://rsf.org/en/

அமைச்சரின் கூற்றின் உண்மைத்தன்மையை மதிப்பிடுவதற்குஇ நாங்கள் 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான  ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசைப் பட்டியலை ஆராய்ந்தோம்.

அமைச்சர் தெரிவித்தவாறுஇ சுட்டெண் தரவரிசையில் 2013 ஆம் ஆண்டில் (2014 ஆம் ஆண்டிலும்) 165 ஆவது இடத்தில் இருந்த இலங்கைஇ 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன் காரணமாக, நாங்கள் அமைச்சரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்

  • ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையானது எல்லைகளற்ற ஊடகவியலாளர்களினால் (Reporters Without Borders) தொகுக்கப்படுகின்றது. சுட்டெண்ணை பார்வையிட: https://rsf.org/en/