எங்கள் செயல்முறை

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உண்மைச் சரிபார்ப்புக்காகக் கூற்றுக்களைத் தெரிவுசெய்யும் போதும், சரிபார்க்கும் போதும் FactCheck.lk நிலையான செயல்முறைகளை பின்பற்றுகின்றது. ஒரு சுயாதீன அமைப்பாக, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதிக கவனம் செலுத்தாமல், அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த தனிநபர்களின் கூற்றுக்களை உண்மை சரிபார்ப்புக்காக தெரிவுசெய்ய FactCheck.lk முயற்சிக்கின்றது. ஆராய்ச்சிகள் முடிவடைந்த பின்னரே முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. அனைத்து முடிவுகளும் கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவான தர்க்கங்களைக் கொண்ட விரிவான விளக்கத்துடன் வழங்கப்படுகின்றன.

கூற்றைத்  தெரிவுசெய்தல்

கூற்று  ஒன்றைத் தெரிவுசெய்யும் போது பின்வரும் நடைமுறைகளை FactCheck.lk பின்பற்றுகின்றது:

  1. இலங்கை அச்சு ஊடகத்தில் வெளியாகும் அரச அலுவலகங்களில் உள்ள உயர்மட்ட முடிவுகளை எடுப்பவர்களின் அனைத்து மெய்ந்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கூற்றுக்களும்  கண்காணிக்கப்படுகின்றன. எங்களுக்காக ஊடகங்களைக் கண்காணிப்பதற்கு FactCheck.lk வெளியக கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது.
  2. இணையத்தளத்தில் (FactCheck.lk) உள்ள “உண்மை சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கவும்” என்ற பெட்டியின் மூலமாக பொதுமக்கள் சமர்ப்பிக்கும் கூற்றுக்களையும் FactCheck.lk சேகரிக்கின்றது.
  3. அதன் பின்னர் கிடைக்கக்கூடிய தரவுகள், பொதுமக்களுக்கு பொருத்தமானவை மற்றும் முக்கியமானவை என்ற அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவதுடன், கல்வி மதிப்பினை அடிப்படையாகக் கொண்டு உண்மை சரிபார்ப்பிற்கான கூற்றுக்கள் வடிகட்டப்பட்டு தெரிவுசெய்யப்படுகின்றன.

உண்மை சரிபார்ப்பிற்காக அறிக்கைகளை தெரிவுசெய்யும் போது, மற்றைய விடயங்களுடன் கீழ்வரும் விடயங்கள் தொடர்பிலும் குழுவினர் வழிநடத்தப்படுகின்றனர்:

  1. விடயத்தின் பொருள்/அறிக்கையின் கருப்பொருள்;
  2. தற்போதைய நிலை மற்றும் விடயம் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு; அத்துடன்
  3. உண்மை சரிபார்ப்பு விவாதத்திற்கு மேலதிக வலுவைச் சேர்ப்பதற்கான சாத்தியம்.

துரதிஷ்டவசமாக, குழுவானது நேரம் மற்றும் வளங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால், மேலே குறிப்பிடப்பட்ட அளவுகோல்களை கொண்டுள்ள அனைத்து கூற்றுக்களையும் உண்மை சரிபார்ப்பிற்கு உள்ளாக்க முடியாது.

ஆராய்ச்சி மற்றும் எழுத்துருவாக்கம்

அறிக்கையானது தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், கீழ்வரும் செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன:

  1. கூற்று பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரையானது முழுமையாக வாசிக்கப்படுகின்றது.
  2. கூற்று தொடர்பான அறிக்கையிடலின் துல்லியம் சுயாதீனமாக சரிபார்க்கப்படுகின்றது
  3. கூற்று ஆங்கிலத்தில் இல்லாவிட்டால், அது மொழி பெயர்க்கப்படுவதுடன், மொழி பெயர்ப்பின் துல்லியத்தை உறுதிப்படுத்த சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றது.
  4. குறிப்பிட்ட விடயத்தில் வல்லுனரான ஆராய்ச்சியாளர் ஒருவர், பொதுவெளியில் கிடைக்கக்கூடிய உத்தியோகபூர்வ மூலங்களிலிருந்து, அதாவது இலங்கை மத்திய வங்கி அல்லது அரசாங்க அமைச்சுக்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ஆவணங்களை ஆராய்ந்து அந்த விடயம் தொடர்பில் கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் சேகரிப்பார்.
  5. பொதுவெளியில் கிடைக்கக்கூடிய சமீபத்திய தகவல்களைப் பயன்படுத்தி, முன்வைக்கப்படும் வாதங்கள் மதிப்பிடப்படும்.
  6. தரவுகள் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், உண்மை, பகுதியளவில் உண்மை, தவறானது, முற்றிலும் தவறானது என முடிவு வழங்கப்படுகின்றது. இந்த முடிவுகளுக்கான விளக்கங்கள் இங்கு பார்க்கவும். என்ற இணைப்பில் தரப்பட்டுள்ளது.
  7. வாதங்கள், கிடைக்கும் தரவுகள், பகுப்பாய்வு மற்றும் முடிவுகள் முன்வைக்கப்பட்டு விரிவான உண்மைச் சரிபார்ப்பு எழுதப்படுகின்றது.
  8. எழுதப்பட்ட உண்மைச் சரிபார்ப்பின் தரவு, தர்க்கம் மற்றும் மொழி குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவரினால் மீளாய்வு செய்யப்படுவதுடன், பின்னர் ஆலோசனைக் குழுவினால் மீளாய்வு செய்யப்படுகின்றது.
  9. அனைத்து தளங்களிலும் உண்மை சரிபார்ப்பு வெளியிடப்படுகின்றது.

மூலங்களுக்கான கொள்கை

எந்தவொரு உண்மைச் சரிபார்ப்பினையும் வாசகர்கள் தாங்களே கண்டறிய வேண்டும் என FactCheck.lk விரும்புகின்றது. அறிக்கை ஒன்றை சரிபார்க்கும் போது, பொது வெளியில் கிடைக்கும் சமீபத்திய தரவுகளை FactCheck.lk பயன்படுத்துகின்றது. உண்மை சரிபார்ப்பொன்றில் பயன்படுத்தப்பட்ட அனைத்து தரவுகளுக்குமான மூலங்கள் எழுத்திலுள்ள உண்மை சரிபார்ப்பில் குறிப்பிடப்படுவதுடன், கிடைக்கும் போதெல்லாம் இணைப்பு வழங்கப்பட்டு விரிவாக மேற்கோள் காட்டப்படுகின்றது.

மூலங்களைத் தெரிவுசெய்யும் போது, உள்ளூர் அரச மூலங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. தெரிவுசெய்யப்பட்ட உண்மை சரிபார்ப்புக்கு அரச மூலங்கள் எதுவும் கிடைக்கவில்லை அல்லது பொருத்தமாக இல்லை என்றால், FactCheck.lk மாற்று மூலங்களைத் தேடுவதுடன், ஒவ்வொரு மூலத்தையும் உள்ளடக்குவதற்கு முன்னர் தனித்தனியாக அதன் வழிமுறை மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்யும். இந்த மாற்று ஆதாரங்கள் நம்பகமான அமைப்புக்களில் இருந்து பெறப்படும் உத்தியோகபூர்வ சர்வதேச தரவுகள், நம்பகமான உள்ளூர் சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவுகள் முதலானவற்றைக் கொண்டிருக்கும்.

FactCheck.lk பொதுவெளியில் கிடைக்காத தகவல்களைப் பயன்படுத்திய சந்தர்ப்பங்களில், பொருத்தமான தரவுகள் அதன் மூலங்களுடன் அந்தந்த தளங்களில் வழங்கப்பட்டிருக்கும். அரசாங்கத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைக் கோரிக்கை மூலமாக பிற நிறுவனங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களை FactCheck.lk பயன்படுத்திய போது இது நிகழ்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் FactCheck.lk பொருத்தமான தரவுகளை, பிரசுரிக்கப்பட்ட உண்மைச் சரிபார்ப்புடன் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தது.

கூற்று ஒன்றினை உறுதிப்படுத்துவதற்கு செய்தி ஊடகங்கள் உத்தியோகபூர்வ மூலமாக எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை.

This post is also available in: English සිංහල தமிழ்