எங்களை பற்றி

பொதுநலனுடன் தொடர்புடைய விடயங்களில் அரச அலுவலகங்களில் உயர்மட்ட தீர்மானங்களை எடுப்பவர்களின் அறிக்கைகளை கண்டறிந்து அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சு ஊடகங்களை (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) கண்காணிக்கும் பொதுச் சேவை வழங்கும் தளமாக   நாங்கள் செயற்படுகின்றோம். இலங்கையில் தகவல்களை பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம், ஊடகங்களில் வெளிவரும் உயர்மட்ட தீர்மானமெடுப்பவர்களின் அறிக்கைகளுக்கு அவர்களை பொறுப்புடையவர்கள் ஆக்குவதே FactCheck.lk இன் முக்கிய நோக்கமாகும்.

FactCheck.lk தளம் வெரிட்டே ரிசர்ச் (Verité Research) இனால் நடத்தப்படுகின்றது. ஆய்வு ரீதியான அல்லது நிதி ரீதியான பங்களிப்பினை வழங்குவதற்கு நலன்விரும்பிகள் வரவேற்கப்படுகின்றார்கள். factcheck@veriteresearch.org ஊடாக எங்களைத் தொடர்புகொள்ள முடியும். இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆண்டு, 2019 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, International Media Support (IMS) இனால் மானியம் மூலமாக நிதியுதவி கிடைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து Internews மற்றும் IMS ஆகியவை மேலதிக உதவிகளை வழங்கின. நிதி உதவிகள் கிடைக்கப்பெறாத காலப்பகுதிகளில் Verité Research இந்த தளத்தினை பராமரிப்பதுடன், FactCheck.lk இன் மதிப்பினை அறிந்த அனைவரையும் பங்களிப்புச் செய்ய அழைக்கின்றது.

Verité Research இன் ஏனைய நடவடிக்கைகளை அறிந்துகொள்ள கீழ்வருவனவற்றைப் பாருங்கள்:

Ethics Eye
https://www.facebook.com/ethicseye/
https://twitter.com/EthicsEye

Manthri.lk
http://www.manthri.lk
https://www.facebook.com/manthrilk/
https://twitter.com/ManthriLK

Public Finance.lk
https://publicfinance.lk

The Media Analysis
https://twitter.com/verite_tma

VR Law
https://twitter.com/VRlawSL

This post is also available in: English සිංහල தமிழ்