BudgetCheck 2023

வெரிட்டே ரிசர்ச் இனால் நிர்வகிக்கப்படும் #BudgetCheck by FactCheck.lk, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வரவு-செலவுத் திட்ட உரைகளை சரிபார்த்துவருகின்றது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழங்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையை 14 நவம்பர் 2022 அன்று சரிபார்த்தோம்.


எமது குழு வரவு-செலவுத் திட்ட உரையில் இருந்து மொத்தம் ஏழு கூற்றுக்களைச் சரிபார்த்தது. இதில், நான்கு கூற்றுக்கள் சரியாதென்றும், மூன்று பகுதியளவு சரியாதென்றும் தரப்படுத்தப்பட்டன. அவற்றின் விவரிப்பு, தீர்ப்புகள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களுடன் சரிபார்க்கப்பட்ட கூற்றுகளைக் கீழே பார்க்கவும்.
இலக்கம்

இலக்கம் 1

சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அரசின் செலவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே, சுகாதாரம் மற்றும் கல்விக்கான குறைந்த செலவினமானது, குறைவான முன்னுரிமை வழங்கல் கொள்கையை பிரதிபலிப்பதுடன் குறைந்த வருவாயை மட்டுமே காரணமாகக் கொள்ள முடியாது.

இலக்கம் 2

Sri Lanka மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2021 இறுதியில் 3.1 பில். அ.டொலராகவும், 2022 ஒக். இறுதியில் 1.7 பில். அ. டொலராகவும் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த அறிக்கையானது சர்வதேச வரையறைக்கு பொருந்தாத முன்பதாக இருந்த மீளவகைப்படுத்தப்பட்ட1.4 பில். அ. டொலர் பெறுமதியான சீன யுவான் (¥10bn) பரிமாற்றத்தையும் உள்ளடக்கியது.

இலக்கம் 3

2021 இல், 52 முக்கிய அரச நிறுவனங்களின் நிகர இழப்பு 86 பில்லியன் ரூபாவாகும். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், இவ் அரச உடைமை நிறுவனங்கள் (SOEs) முறையே ரூபா 4 பில்லியன் மற்றும் 34 பில்லியன் நிகர இலாபத்தைப் பெற்றன. 2022 இன் முதல் நான்கு மாதங்களில், அவை 859 பில்லியன் ரூபா நிகர இழப்பைச் சந்தித்தன.

இலக்கம் 4

இலங்கை மத்திய வங்கியின்படி, 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதமாக 8.3% அல்ல, அது 8.7% ஆகும். எவ்வாறாயினும், #IMF இன் படி, 2021 ஆம் ஆண்டில், 190 நாடுகளிற்கிடையில் 7 வது மிகக் குறைந்த மொ.உ. உ. இற்கு எதிரான வருமானத்தை ஈட்டும் நாடாக இலங்கை காணப்படுகின்றது.

இலக்கம் 5

செலவினங்களான அரச சம்பளம் மற்றும் ஊதியங்கள், மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்களில் பெரும் விகிதமாக உள்ளன: இவை, 2021 இல் 57.8 வீதமாக காணப்பட்டதுடன் 2022 இல் 47.5வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இலக்கம் 6

சமீபத்திய கிடைக்கக்கூடிய தரவுகளிப்படி (2019), பழங்கள் மற்றும் காய்கறிகளில் அறுவடைக்குப் பின்னரான இழப்பானது, 30 – 35% வரை உள்ளது. போக்குவரத்தின் போது பொருத்தமற்ற பொதியிடல் இவ்விழப்பிற்கு அதிக பங்களிக்கிறது.

இலக்கம் 7

மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டவை. (சிறைச்சாலைத் திணைக்களத்தில் கிடைக்கக்கூடிய சமீபத்திய விபரங்கள்) சிறைச்சாலைகளின் மொத்த கொள்ளளவு 13,241 ஆக இருந்தது, அதேவேளை, தண்டனை பெற்ற மற்றும் தண்டனை விதிக்கப்படாத நபர்களின் தினசரி சராசரி எண்ணிக்கை 25,991 ஆக இருந்தது.

This post is also available in: English සිංහල தமிழ்