ரோஹன பண்டார

சீனாவுக்கான கடன் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்.

"

இலங்கையின் கடனில் 14% சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது…

தினமின | மே 10, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினைச் சரிபார்ப்பதற்கு, 2019 ஆம் ஆண்டு முதல் சமீபத்திய தரவு வரையிலான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் நிதியமைச்சின் ஆண்டறிக்கைகளை FactCheck ஆராய்ந்தது.

பொதுத்துறை வெளிநாட்டுக் கடன் என்பது மத்திய அரசாங்கத்தின் கணக்குகளிலும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் (SOE) கணக்குகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடன்களை உள்ளடக்கியது. இந்த இரண்டையும் கூட்டும் போது, பொதுத்துறையினால் சீனாவுக்குச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடனின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 14.8% ஆகும் (அட்டவணை 1ஐப் பார்க்கவும்).

15% என மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக 14% என பாராளுமன்ற உறுப்பினர் மட்டுப்படுத்தியுள்ளார். அவரது அறிக்கையின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினைச் ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு: வெளிநாட்டுக் கடன்களுக்கான கணக்கை மத்திய அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கணக்குக்கும் அங்கிருந்து மத்திய அரசாங்கத்தின் கணக்குக்கும் இலங்கை அடிக்கடி மாற்றிவருகிறது. எனினும் இந்தக் கடன்கள் அனைத்தையும் செலுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்குக் காணப்படுவதால், மத்திய அரசாங்கம் மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கடன்கள் மொத்த பொதுத்துறைக் கடன்களாகக் கணக்கிடப்பட்டுள்ளன. கடனின் நகர்வு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விரிவான ஆய்வுக்கு வெரிட்டே ரிசேர்ச்சின் ‘இலங்கையின் கடனை வழிநடத்துதல், சிறந்த அறிக்கையிடல் உதவும் – சீனாவின் கடன் குறித்த விடய ஆய்வு’ என்ற வெளியீட்டைப் பார்க்கவும். (https://www.veriteresearch.org/publication/briefing-note-navigating-srilankas-debt/).



மூலம்

நிதியமைச்சு, ஆண்டறிக்கை 2019, பார்வையிட: http://oldportal.treasury.gov.lk/web/guest/publications/annual-report [last accessed: 2 June 2021]

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2019 மற்றும் 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [last accessed: 2 June 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன