ரன்ஜித் சியம்பலாபிடிய

மதுபானம் மற்றும் புகையிலை வரிகள் தொடர்பில் பா.உ சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2021ம் ஆண்டில் மொத்த வரி வருமானத்தில் 19% புகையிலை மற்றும் மதுபானம் மூலம் பெறப்பட்டுள்ளது.

டெய்லி நியூஸ் | செப்டம்பர் 21, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

புகையிலை மற்றும் மதுபானத்திற்கு கலால் வரியும் பெறுமதி சேர் வரியும் அரசாங்கத்தால் தற்போது விதிக்கப்படுகிறது.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, சிகரட்டுகள் மற்றும் மதுபானம் மீதான கலால் வரி தொடர்பான தகவல்களைப் பெற இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையையும் சிகரட்டுகள் மீது செலுத்தப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பான தரவுகளைப் பெற இலங்கை புகையிலை நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் FactCheck.lk ஆராய்ந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆண்டறிக்கையில், மதுபானத்திற்குச் சேகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி வருமானம் தொடர்பான தகவல்கள் 2018ம் ஆண்டு வரை மட்டுமே கிடைக்கின்றன. ஆகவே தொழிற்துறையின் மொத்த விற்பனை வளர்ச்சியை மதிப்பிட்டதுடன் பெறுமதி சேர் வரி 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டதையும் கணக்கில் கொண்டு 2021ம் ஆண்டுக்கான வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2021ம் ஆண்டில் சிகரட்டுகள் மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்கான கலால் வரி மூலம் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் முறையே ரூ.88.6 பில்லியன் மற்றும் ரூ. 138.6 பில்லியன் ஆகும். சிகரட்டுகள், மதுபானம் ஆகியவை மூலம் சேகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி வருமானம் 2021ம் ஆண்டில் ரூ.22.4 பில்லியன் என மதிப்பிடப்படுகிறது. இது இந்தப் பொருட்கள் மீதான ஒட்டுமொத்த நுகர்வு வரியை ரூ.249.6 பில்லியனாக அதிகரிக்கிறது.

2021ம் ஆண்டில் அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியன். எனவே 2021ம் ஆண்டில் புகையிலை மற்றும் மதுபானம் மூலம் சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த நுகர்வு வரிகள் மொத்த வரி வருமானத்தில் 19.2% ஆகும். இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்துகிறது.

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிக குறிப்பு 1: புகையிலை மற்றும் மதுபானம் மூலம் சேகரிக்கப்பட்ட வரி வருமானத்தின் பங்கு 2017ம் ஆண்டில் 14.2 சதவீதத்தில் இருந்து 2021ம் ஆண்டில் 19.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் புகையிலை மற்றும் மதுபானம் மீதான உண்மையான வரிகள் 5.3 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளன. அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 22 சதவீதத்தால் குறைவடைந்ததே இந்த அதிகரிப்பிற்குக் காரணமாகும். மொ.உ.உற்பத்தியுடனும் புகையிலை மற்றும் மதுபானம் மீதான நுகர்வுச் செலவுடனும் ஒப்பிடும்போது புகையிலை மற்றும் மதுபானம் மூலம் சேகரிக்கப்பட்ட வரிகள் குறைந்துள்ளதை தரவு காட்டுகிறது. இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையின் பிரகாரம், மொ.உ.உற்பத்தியின் பங்காக புகையிலை மற்றும் மதுபானம் மூலம் சேகரிக்கப்படும் வரி 2017ம் ஆண்டில் 1.8 சதவீதத்தில் இருந்து 2021ம் ஆண்டில் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் மீதான மொத்த தனிநபர் நுகர்வுச் செலவினத்தின் பங்காக, அவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட வரி 2017ம் ஆண்டில் 78.0 சதவீதத்தில் இருந்து 2021ம் ஆண்டில் 62.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலதிக குறிப்பு 2: புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் வருமான வரியைச் செலுத்தினாலும் இந்த உண்மைச் சரிபார்ப்பில் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவை பொருட்களின் விற்பனையில் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை. மேலும் புகையிலை உற்பத்தியாளர்களும் புகையிலை வரியை (ரூ.15 மில்லியன்) செலுத்துகிறார்கள். எனினும் இந்த ஆய்வின் நோக்கத்திற்கு அது முக்கியமற்றது.

அட்டவணை 1: அரசாங்க வரி வருமானம் (ரூ. மில்லியன்களில்)

மூலம்: மத்திய வங்கி ஆண்டறிக்கை, இலங்கை புகையிலைக் கம்பனி ஆண்டறிக்கை, உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆண்டறிக்கைமூலம்

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2021), பார்வையிட:
https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [இறுதியாக அணுகியது: 30 செப்டம்பர் 2022]

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஆண்டறிக்கை (பல்வேறு ஆண்டுகள்), பார்வையிட: http://www.ird.gov.lk/en/publications/sitepages/Annual%20Performance%20Report.aspx?menuid=1501 [இறுதியாக அணுகியது: 30 செப்டம்பர் 2022]

இலங்கை புகையிலைக் கம்பனி, ஆண்டறிக்கை (பல்வேறு ஆண்டுகள்), பார்வையிட: https://www.ceylontobaccocompany.com/group/sites/SRI_9PMJN9.nsf/vwPagesWebLive/DOBJBG7K?opendocument [இறுதியாக அணுகியது: 30 செப்டம்பர் 2022]

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன