அநுர குமார திஸாநாயக்க

வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.

"

மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.

லங்காதீப | அக்டோபர் 12, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, உண்மையான தரவு கிடைக்கக்கூடிய சமீபத்திய அறிக்கையான நிதியமைச்சின் 2019 ஆண்டறிக்கையை FactCheck ஆராய்ந்தது.

2019 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் சேவைகள் (முதலீட்டுக் கொடுப்பனவுகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள்) 4,447.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது மாதாந்தம் 371 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிடும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் ஒரளவு பொருந்திப் போகின்றது.

அத்துடன், மேலே குறிப்பிடப்படும் கடன் சேவைத் தொகையானது மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன்களுக்கான சேவைகளுக்கு உரியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வெளிநாட்டுப் படுகடன் சேவைகள் கொடுப்பனவு குறித்த தகவல்கள் இலகுவில் கிடைப்பதில்லை. எனினும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வெளிநாட்டுக் கடன் சேவைகளின் செலவினங்கள், மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலுவைகளுடன் தொடர்புடைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வெளிநாட்டுப் படுகடன் நிலுவைகளின் விகிதாச்சாரமாக இருக்கும் என்பதை அனுமானிப்பதன் மூலம் மதிப்பிடுவது ஓரளவு சாத்தியம். இந்தக் கணக்கீடு பொதுத் துறைகளின் மொத்த வெளிநாட்டுப் படுகடன் சேவைகளை மாதாந்தம் 390.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும். இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட 400 மில்லியன் என்ற தொகையுடன் இன்னும் நெருங்கி வருகின்றது.

ஆகவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

1பொதுத்துறை முழுமைக்கான வெளிநாட்டுப் படுகடன் சேவைக் கொடுப்பனவுக்களுக்கான மதிப்பீடு (மத்திய அரசாங்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்), அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வெளிநாட்டுப் படுகடன்களுக்கான வெளிநாட்டுப் படுகடன் சேவை கொடுப்பனவுகளின் விகிதம் மத்திய அரசாங்கத்தின் விகிதத்தை ஒத்தது என்ற அனுமானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



மூலம்

நிதியமைச்சு ஆண்டறிக்கை 2019, அட்டவணை 5.9, பக்கம் 123, பார்வையிட: http://122.255.3.82/documents/10181/442382/Annual+Report+2019-Tamil/e6816445-72de-44dd-82cf-4bd72e178da0

மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2019, புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 91, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2019/ta/15_Appendix.pdf