உதய கம்மன்பில

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் மத்திய வங்கியின் பாரபட்ச செயல்பாடு குறித்து பா.உ கம்மன்பில குறிப்பிடுகிறார்

"

பொது மக்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்துடன் மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு தனியான சேமலாப நிதியம் ஒன்றையும் பராமரிக்கிறது […]

உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | ஜூலை 4, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி: மத்திய வங்கி அதன் நிதியை அதிக வருமானம் தரும் இடங்களில் முதலீடு செய்து [அதன்] சேமலாப நிதியத்திலிருந்து ஊழியர்களின் கணக்குகளுக்கு 29% வட்டியைச் செலுத்தியிருக்கிறது. எனினும் மக்கள் நிதியிலிருந்து [மத்திய வங்கி] இலாபம் ஈட்டிய பிறகு வெறும் 9% வட்டியை மட்டுமே வழங்கியுள்ளது.)

பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் 1) தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மத்திய வங்கி ஊழியர்களுக்கான சேமலாப நிதியம் என இலங்கை மத்திய வங்கி இரண்டைப் பராமரிக்கிறது. 2) EPF குறைந்த வட்டி வீதமான 9 சதவீதத்தைப் பெறும்போது இலங்கை மத்திய வங்கி சேமலாப நிதியம் (CBSLPF) 29 சதவீதத்தைப் பெறுகிறது எனக் குறிப்பிடுகிறார். 

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2022, EPF நிதிக்கூற்றுகள் 2022, 1958 ஆம் ஆண்டின் EPF சட்டம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. 

EPF இன் உத்தியோகப்பூர்வப் பாதுகாவலராக இலங்கை மத்திய வங்கியை EPF சட்டத்தின் பிரிவு 5 நியமிக்கிறது. மத்திய வங்கியின் தகுதிபெறும் ஊழியர்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் மத்திய வங்கி ஏழு நிர்ணயிக்கப்பட்ட நன்மைத் திட்டங்களை செயல்படுத்துவதை CBSLAR (தொகுதி II, பிரிவு II, பக்கம் 35-40) உறுதிப்படுத்துகிறது. இவை அனைத்தையும் CBSLPF எனக் குறிப்பிடலாம். எனவே இலங்கை மத்திய வங்கியால் இரண்டு ஊழியர் சேமலாப நிதியம் பராமரிக்கப்படுகிறது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகிறார்.  

2022 ஆம் ஆண்டுக்கான EPF இன் சராசரி முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் வட்டி 9.52% எனவும் CBSLPF இன் சொத்துக்கள்/முதலீட்டின் வட்டி வீதம் 19% எனவும் அட்டவணை 1 மற்றும் 2 காட்டுகிறது (மேலதிகக் குறிப்பு 2 மற்றும் 3 ஐப் பார்க்கவும்). இந்தப் பெறுமதிகள், குறிப்பாக CBSLPF இன் பெறுமதி பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 9% மற்றும் 29% எனும் பெறுமதிகளுடன் பொருந்தவில்லை.  

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று, உறுப்பினர்களின் கணக்கிற்கு செலுத்தப்பட்ட வட்டி வீதத்தைக் குறிப்பிடலாம். இதுமுதலீட்டு வட்டி வீதத்திலிருந்துவேறுபடலாம். வரி போன்ற பல்வேறு செலவினங்களைக் கழித்த பின்னரே செலுத்தப்படும் வட்டி வீதம் கணக்கிடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கிடைக்காத காரணத்தால்செலுத்தப்பட்ட வட்டி வீதம்” (9% மற்றும் 29%) தொடர்பான பாராளுமன்ற உறுப்பினரின் பெறுமதிகளை FactCheck.lk ஆல் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய நாணயச் சபை மீளாய்வில், CBSLPFக்குப் பயன்படுத்தப்படும் விசேடசூத்திரம்தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டிருந்தார். இதனைக் கருத்தில் கொள்ளும்போதுமுதலீட்டு வட்டி வீதத்தைவிடசெலுத்தப்பட்ட வட்டி வீதம்மிகவும் அதிகமாக இருக்கலாம் (கூடுதல் தகவல்களுக்கு மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). 

EPF உடன் கூடுதலாக மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு தனியான நம்பிக்கை நிதியத்தைப் பராமரிக்கிறது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியாகும். அத்துடன் EPF உறுப்பினர்களுக்கு முதலீட்டு வட்டி வீதத்தைச் செலுத்துகிறது என்பதும் சரியாகும். முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் வட்டி வீதத்தை விட பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் மத்திய வங்கி உறுப்பினர்களுக்கான வட்டி வீதம் மிகவும் அதிகமாகும். இதற்கான சாத்தியம் உள்ளது என்ற போதிலும், கிடைக்கும் தரவைக் கொண்டு இதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. எனினும், 2022 ஆம் ஆண்டில் EPF ஐக் காட்டிலும் CBSLPF வட்டி வீதம் அதிகம் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் ஒட்டுமொத்த வாதம் சரியாகும். 

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம். 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும் 

மேலதிகக் குறிப்பு 1: 

2022 ஆம் ஆண்டில் EPF 9 சதவீதத்தைப் பெற்றபோது ஏன் CBSLPF மாத்திரம் 29 சதவீதத்தைப் பெற்றது என ஜுலை 6, 2023 நடைபெற்ற நாணயச் சபை மீளாய்வில் ஊடகவியலாளர் ஒருவரினால் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் CBSLPF வட்டி வீதத்தைத் தீர்மானிக்க விசேட சூத்திரம் பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார். வெளியிடப்பட்ட அறிக்கைகள் நிதியத்தின் வளர்ச்சி 2020 ஆம் ஆண்டுக்கு 19% என்பதைக் குறிப்பிடும் போதிலும், ஆளுநரின் விளக்கமானது செலுத்தப்படும் வட்டி வீதத்தைத் தீர்மானிக்க வேறொரு முறை பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடுகிறது. மேலும் ஊடகவியலாளர் குறிப்பிட்ட 29% என்பது மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. CBSLPFக்கு வருமானத்தை வரவு வைக்கும் சூத்திரம் அசாதாரண நிலைமைகளின்போது (உதாரணம், வட்டி வீதங்கள் மிக அதிகமாக இருக்கும்போது) அதிகரிக்கிறது எனவும் மத்திய வங்கி ஆளுனர் விளக்கமளித்திருந்தார். இரண்டு ஊழியர் சேமலாப நிதியங்களுக்கும் இடையிலான வட்டி வீதத்தில் உள்ள வித்தியாசத்தை ஏற்றுக்கொண்ட அவர், இதற்காகப் பயன்படுத்தப்படும் சூத்திரங்களை மீளாய்வு செய்ய நாணயச் சபை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் 

மேலதிகக் குறிப்பு 2: 

இந்த உண்மைச் சரிபார்ப்பு எழுதப்படும்போது 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை வெளியிடப்படாத நிலையில் FactCheck.lk EPF வருமானத்தை கணக்கிட்டது. பொதுவாக மொத்த முதலீடுகள் மூலமான அனைத்து வருமானத்தையும் அந்த ஆண்டுக்கான சராசரி பங்கு முதலீட்டினால் வகுக்கப்பட்டு முதலீட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது. கடந்த காலங்களில் (2018, 2019 மற்றும் 2020) இதே முறையைப் பயன்படுத்தி கணக்கிடும்போது அறிக்கையிடப்பட்ட சராசரி முதலீட்டு வருமானத்துடன் சரியாகப் பொருந்துகிறது. (EPF சராசரி முதலீட்டு வருமானத்தின் விபரங்களுக்கு அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). 

மேலதிகக் குறிப்பு 3: 

நிதியங்கள் வழக்கமாக பௌதீக சொத்துக்களில் முதலீடு செய்வதில்லை, மாறாக அவற்றின் முதன்மை சொத்து வகுப்பில் நிதிப் பத்திரங்களே அதிகம் உள்ளன. மத்திய வங்கியின் ஐந்தொகையின் ஒரு பகுதியாக CBSLPF ஏனைய CBSL சொத்துக்களுடன் ஒப்பிடலாம். எனவே இதுசொத்துகளின் மீதான வருமானம்எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பீடானது மத்திய வங்கியின் ஒட்டுமொத்த நிதி செயல்திறனுடன் நிதியத்தின் செயல்திறனை மதிப்பிட உதவுகிறது. இதுமுதலீட்டின் மீதான வருமானம்எனும் சொல்லுக்கு சமமானதாக விளங்குகிறது.

அட்டவணை 1: சராசரி முதலீட்டில் EPF வருமானக் கணக்கீடு 

அட்டவணை 2: EPF வருமானம் vs CBSL ஊழியர் சேமலாப நிதிய வருமானம்  

 



மூலம்

கணக்குகளும் தொழிற்பாடுகளும், இலங்கை மத்திய வங்கி 2022, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2022/en/18_Part_02.pdf  

மத்திய வங்கி ஊழியர்களின் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் ஏன் அதிகமாக இருக்கிறது?, இலங்கை மத்திய வங்கி யூடியூப் பக்கம், பார்வையிட: https://www.youtube.com/watch?v=g248hjW-ELs  

நிதிக் கூற்றுகள், ஊழியர் சேம நிதியம், பார்வையிட: https://epf.lk/?page_id=2738  

1998 ஆம் ஆண்டின் ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/acts/en/epf_act.pdf  

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன