பாட்டலி சம்பிக்க ரணவக்க

நாணயம் அச்சிடல்: பணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சரியாகத் தெரிவிக்கின்றார்.

"

நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரையில் ரூ.130 பில்லியன் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அருண | நவம்பர் 12, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

நாணய அச்சடிப்பானது பற்றாக்குறை நிதியளிப்பு என பரவலாக அறியப்படுகின்றது. அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக, திறைசேரியினால் வழங்கப்படும் அரச பிணையங்களை நேரடியாக வாங்குவதற்கு மத்திய வங்கி புதிய நாணயத்தை அச்சடிப்பதை இது குறிக்கும். மத்திய வங்கி அரச பிணையங்களை வாங்குவது மத்திய வங்கியின் ஐந்தொகையில் பிரதிபலிக்கும். ஆகவே குறித்த காலப்பகுதியில் அச்சடிக்கப்பட்ட நாணயத்தின் தொகையை கண்டறிவதற்கு, மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட அரச பிணையங்களை FactCheck ஆராய்ந்தது.

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு மத்திய வங்கியின் திறைசேரி பிணையங்கள் உடமைகள் வெளியிடப்படும் மத்திய வங்கியின் நாளாந்த செயற்பாடுகள் தொடர்பான தரவுகளை FactCheck ஆராய்ந்தது. மத்திய வங்கியிடம் ரூ.488.17 பில்லியன் பெறுமதியான அரச பிணையங்கள் 1 நவம்பர் 2020 அன்று காணப்பட்டன. 1 டிசம்பர் 2020 அன்று, மத்திய வங்கியிடம் ரூ.618.12 பில்லியன் பெறுமதியான அரச பிணையங்கள் காணப்பட்டன. இது குறிப்பிட்ட காலப்பகுதியில் மத்திய வங்கியின் அரச பிணையங்கள் உடமைகள் ரூ.129.95 பில்லியன் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகின்றது. அதே காலப்பகுதியில் அதற்கு இணையான நாணயம் அச்சடிக்கப்பட்டுள்ளதை இது சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “சரியானது” என FactCheck வகைப்படுத்துகின்றது.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, தரவு நூலகம், நாளாந்த செயற்பாடுகள், பார்வையிட:

https://www.cbsl.lk/eResearch/Modules/RD/SearchPages/Indicators_DailyOperationsNew.aspx

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன