சமூக மருத்துவர்கள் கல்லூரி

இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி: கோவிட் -19 புதைப்பது தொடர்பான கவலைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது

"

கோவிட் – 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் என்பன தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன… இந்த உலகளாவிய தொற்று

நியூஸ் பெர்ஸ்ட் | டிசம்பர் 31, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

கோவிட் – 19 இனால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு உலகளாவிய ஆதரவு உள்ளது என்ற கூற்றினை ஆராய்வதற்கு, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), ஐக்கிய அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையம் (CDC) மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் (ECDPC) ஆகியவற்றின் வலைத்தளங்களில் தற்போது காணப்படும் சமீபத்திய வழிகாட்டுதல்களை FactCheck ஆராய்ந்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் செப்டெம்பர் 2020 திகதியிடப்பட்ட “கோவிட் – 19 சூழலில் சடலத்தைப் பாதுகாப்பாக கையாள்வதற்கான தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு” தொடர்பான வழிகாட்டுதல், சடலத்தை புதைப்பதற்கு அல்லது தகனம் செய்வதற்கு முன்னர் சடலத்தைக் கையாள்வதற்கு குறைந்தது 50 பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நிரல்படுத்துகின்றது. இந்த அனைத்து வழிமுறைகளும் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும். சடலத்தை அடக்கம் செய்ததன் பின்னர் வைரஸ் பரவும் ஆபத்து ஏற்படக்கூடும் என எந்த வழிமுறையும் குறிப்பிடவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் “முக்கிய பரிசீலனைகள்” என்ற பிரிவு, குறிப்பாக அடக்கம் செய்வது தொடர்பான கவலைகளை பின்வருமாறு நிராகரிக்கின்றது, “தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக தொற்றுநோயினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற பொதுவான அனுமானம் நிலவுகின்றது; ஆயினும் இதனை உறுதிப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை”. இதேபோன்ற நிலைப்பாட்டை தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலையமும் குறிப்பிடுகின்றது, ‘இறுதிச் சடங்கு புதைப்பதன் மூலம் அல்லது எரியூட்டப்படுவதன் மூலம் இடம்பெறுகின்றதா என்பதில் கோவிட் – 19 தாக்கம் செலுத்தத் தேவையில்லை”; அத்துடன் “கோவிட் – 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சடலங்கள் புதைக்கப்படலாம் அல்லது எரிக்கப்படலாம்’ என தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம் குறிப்பிடுகின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு உலகளாவிய ஒருமித்த அறிவியல் கருத்தினை பிரதிபலிக்கின்றன. கோவிட் – 19 இனால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடை செய்யும் உலகின் வேறு எந்த நாட்டையும் FactCheck இனால் இதுவரை கண்டறிய முடியவில்லை.

ஆகவே, சமூக மருத்துவர்கள் கல்லூரியின் அறிக்கையினை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு:

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட, நுண்ணுயிரியல் சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான உள்நாட்டு நிபுணர்கள் குழுவும் இந்த ஆதாரங்களுடன் ஒத்துப்போகும் வகையிலேயே அமைச்சுக்கு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகின்றது, “உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றி, சடலங்களை தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டின் மூலமாகவும் அப்புறப்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரைகளை திருத்தியமைக்கின்றது” அத்துடன் “அடக்கம் செய்வதனால் நீர் மாசுபடுவதன் மூலம் சார்ஸ் (SARS) அல்லது இன்புளுவென்சா பரவும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மூலம்

ஐக்கிய அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான இறுதிச்சடங்கு வழிகாட்டுதல், பார்வையிட: https://www.cdc.gov/coronavirus/2019-ncov/daily-life-coping/funeral-guidance.html [last accessed: 12 January 2021]

உலக சுகாதார ஸ்தாபனம், கோவிட் – 19 சூழலில் சடலத்தை பாதுகாப்பாக கையாள்வதற்கான தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, 4 செப்டெம்பர் 2020, பக்கம் 1,3, பார்வையிட: https://www.who.int/publications/i [last accessed: 12 January 2021]

நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய நிலையம், கோவிட் – 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சடலங்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பான பரிசீலனைகள், பார்வையிட: https://www.ecdc.europa.eu/en/publications-data?s=deceased+persons+with+suspected+or+confirmed+COVID-19 [last accessed: 12 January 2021]

நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை பார்வையிடுவதற்கு: https://www.colombotelegraph.com/index.php/cremation-vs-burial-expert-panel-revises-recommendation-to-include-both-cremation-and-burial-of-covid-19-dead-bodies/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன