பேராசிரியர்.டபிள்யூ.டி. லக்ஷ்மன்

வங்கித்துறையின் வலிமை குறித்த ஆளுநரின் கூற்றினை நம்பலாம் 

"

வங்கித்துறையின் மொத்த மூலதனப் போதுமை விகிதம் 16 சதவீதத்திற்கும் மேல், நிகர நிலையான நிதி விகிதம் 130 சதவீதத்திற்கும் மேல், பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் 175 சதவீதத்திற்கும்

டெய்லி நியூஸ் | ஜூன் 8, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மனின் கூற்றினை ஆராய்வதற்கு, மத்திய வங்கிகளின் நாணய மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சேவை வழங்கும் மற்றும் உதவும் சர்வதேச அமைப்பான சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியினால் (BIS), உலகளாவிய மற்றும் உள்நாட்டு வங்கிகள் எடுக்கும் ஆபத்தை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளை FactCheck ஆராய்ந்தது. இலங்கையிலுள்ள உள்நாட்டு வங்கிகள், சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் வழிகாட்டுதல்களின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட தரங்களின் பிரகாரம் ஆளுநரினால் சுட்டிக்காட்டப்பட்ட விகிதங்கள் பொருத்தமான குறிகாட்டிகள் ஆகும். அவரால் குறிப்பிடப்பட்ட வீதங்கள் இலங்கை மத்திய வங்கியினால் அறிக்கையிடப்பட்ட வீதங்கள் ஆகும்.

ஆளுநர் இந்த துறையின் முழுமைக்குமான சராசரி வீதங்களை குறிப்பிடுகின்றார். எனினும், தனிப்பட்ட வங்கிகள் ஒவ்வொன்றும் இந்தக் குறிகாட்டிகளில் எவ்வாறு செயற்பட்டன என்பதிலும் துறையின் வலுமை தங்கியிருக்கின்றது. வங்கிகளின் முறைமையின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கை மத்திய வங்கியின் வகைப்படுத்தலின் அடிப்படையில், ஒவ்வொரு வங்கிக்குமான, ஒவ்வொரு குறிகாட்டிக்குமான பொருத்தமான வரையறைகள் மாறுபடும்.

2020 மார்ச் 31 இல், இலங்கையில் முன்னணியிலுள்ள முதல் 10 வங்கிகளும் தங்களது ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்கின்றன, அவற்றின் ஒழுங்குமுறை வலிமையை இது சுட்டிக்காட்டுகின்றது. (அட்டவணை 1)

எனவே, இந்தக் கூற்றினை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

அவரது அறிக்கையில், நிதி கட்டமைப்பின் வலிமையை மதிப்பிடுவதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய சரியான விகிதங்களை அவர் அடையாளம் கண்டுள்ளார்.

எனினும், ஒட்டுமொத்த வங்கித்துறையின் சராசரிகளை எடுத்துக்கொள்வது போதுமானதல்ல, குறிப்பிட்ட சில வங்கிகள் எதிர்கொள்ளும் அடிப்படை சிக்கல்களை இது மறைக்கக்கூடும். இதன் விளைவாக, இலங்கையின் வங்கித்துறையின் வலிமையானது, இலங்கை மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்ட விதிகளை தனிப்பட்ட வங்கிகள் பூர்த்தி செய்கின்றனவா என்பதிலேயே தங்கியுள்ளது.

இந்த விதிகள் வங்கிகளின் அளவு, ஒன்றிணைந்த தன்மை, நிதி முறைமையில் மாற்றீடு மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். இந்த வேறுபாடுகளை பிரதிபலிக்கும் வகையில் உள்நாட்டு வங்கிகளை இலங்கை மத்திய வங்கி வகைப்படுத்தியுள்ளது. இலங்கை வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ‘D-SIB: bucket 2’ இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் மக்கள் வங்கி ‘D-SIB: bucket1’ கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் அமைப்பு ரீதியாக முக்கியத்துவமானதாகக் கருதப்படுவதுடன், நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த – D-SIB அல்லாத (Non-D-SIB) வங்கிகளுடன் ஒப்பிடுகையில் – செயற்திறன் குறிகாட்டிகளில் உச்ச செயற்திறனைக் கொண்டிருக்க வேண்டும். (அட்டவணை 2)

குறிப்பு:

ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், வங்கித்துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்த சில அறிகுறிகள் தென்படுகின்றன.

ஃபிட்ச் மதிப்பீடுகள் 2020 மே மாதத்தில் இலங்கை வங்கிகளுக்கான தரத்தினை ’B’ இலிருந்து ‘B- ‘ஆக மாற்றியமைத்துள்ளது. இறையாண்மை கடன் மதிப்பீட்டின் கீழ்நோக்கிய அழுத்தம் மற்றும் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் காரணமாக இந்த மதிப்பீடு குறைக்கப்பட்டது.

மேலதிகமாக, 2019 முதல் காலாண்டில் இருந்து 2020 முதல் காலாண்டுக்குள் செயற்படாத சொத்துக்கள் (NPA) 4.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான மக்களின் திறனில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை இது குறிக்கின்றது. வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவதற்கு செயற்படாத சொத்துக்களின் குறிப்பிடத்தக்க அளவுகோல் எதுவும் இல்லை என்ற போதும், ஒட்டுமொத்தமான மேல்நோக்கிய போக்கு கவலையை வெளிப்படுத்துகின்றது. நடைமுறையிலுள்ள செயற்படாத சொத்துக்கள் தான், 2014 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குப் பின்னர் உச்சத்திலுள்ள செயற்படாத சொத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மூலம்

  • புதிய D-SIB விதிகளின் கீழ் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளை இலங்கை ஒழுங்கமைக்கின்றது, மூலதன இடையகங்கள் மாற்றப்பட்டுள்ளது’
  •           EconomyNext, 23 Dec. 2019, economynext.com/sri-lanka-trims-systemically-important-banks-in-new-d-sib-rule-capital-buffers-changed-37249/#:~:text=Autos-,Sri%20Lanka%20trims%20systemically%20important%20banks%20in%20new,SIB%20rule%2C%20capital%20buffers%20changed&text=Other%20banks%20reaching%20assets%20of,percent%20weight%2C%20has%20been%20adopted.
  • ‘பேசல் (Basel) III: வங்கிகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை கட்டமைப்பு.’ சர்வதேச தீர்வகளுக்கான வங்கி, 7 டிசெம்பர் 2017,
  • www.bis.org/bcbs/basel3.htm.
  • ‘உயர்மட்ட பேசல் III மறுசீரமைப்பின் சுருக்கம்,’ சர்வதேச தீர்வகளுக்கான வங்கி, டிசெம்பர் 2017,
  • www.bis.org/bcbs/publ/d424_hlsummary.pdf.
  • மூனசிங்க, ஜோன். ‘இலங்கை நிதிக் கட்டமைப்புக்கான பேசல் விதிமுறைகளின் தாக்கங்கள்.’ லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையம், 17 ஒக்டோபர் 2019
  • lki.lk/blog/the-implications-of-the-basel-regulations-for-the-sri-lankan-financial-system/.
  • இலங்கை வங்கி, பேசல் III வெளிப்படுத்துகை தேவைப்பாடுகள், 31.03.2020. Web. 17 ஜுலை 2020.
  • இலங்கை வங்கி, 2019 ஆண்டறிக்கை, 31.12.2019. Web.  17 ஜுலை 2020.
  • கொமர்ஷல் வங்கி, பேசல் III – 2016 ஆம் ஆண்டுக்கான 01 ஆம் இல. வங்கிச் சட்ட வழிகாட்டுதல்கள் பிரிவு 3 இன் கீழ் வெளிப்படுத்துகை, 31.03.2020. Web.  17 ஜுலை 2020.
  • DFCC வங்கி, 31 மார்ச் 2020 முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால நிதி முடிவுகள், 31.03.2020. Web.  17 ஜுலை 2020.
  • ஹட்டன் நஷனல் வங்கி, பேசல் III வெளிப்படுத்துகை தேவைப்பாடுகள், 31.03.2020. Web. 17 ஜுலை 2020.
  • தேசிய அபிவிருத்தி வங்கி, இடைக்கால நிதி முடிவுகள் – காலாண்டு முடிவு 31 மார்ச் 2020. 31.03.2020. Web. 17 ஜுலை 2020.
  • நேஷன் ட்ரஸ்ட் வங்கி, 31 மார்ச் 2020 முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால நிதி முடிவுகள், 31.03.2020. Web.  17 ஜுலை 2020.
  • மக்கள் வங்கி, பேசல் III – 2016 ஆம் ஆண்டுக்கான 01 ஆம் இல. வங்கிச் சட்ட வழிகாட்டுதல்கள் பிரிவு 3 இன் கீழ் வெளிப்படுத்துகை, 31.03.2020. Web.  17 ஜுலை 2020.
  • சம்பத் வங்கி, 31 மார்ச் 2020 முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கைகள், 31.03.2020. Web.  17 ஜுலை 2020.
  • செலான் வங்கி, சந்தை ஒழுக்கம் – 2016 ஆம் ஆண்டுக்கான 01 ஆம் இல. வழிகாட்டுதலின் பிரிவு III இன் கீழ் குறைந்தபட்ச வெளிப்படுத்துகை தேவைப்பாடுகள், 31.03.2020. Web.  17 ஜுலை 2020.