நலிந்த ஜயதிஸ்ஸ

தேயிலை மற்றும் இறப்பரின் பொருளாதார பங்களிப்பினை பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

"

நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இறப்பர் தொழில்துறை 0.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களிக்கின்றன.

மவ்பிம | பிப்ரவரி 4, 2019

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த பின்வரும் கூற்றினை, மவ்பிம பத்திரிகை 2019 பெப்ரவரி 4 ஆம் திகதி வெளியிட்டிருந்தது: நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இறப்பர் தொழில்துறை 0.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களிக்கின்றன.

ஏற்றுமதி தொடர்பான தரவுகளைக் குறிப்பிடும் போது அமெரிக்க டொலர்களில் அதன் பெறுமதி குறிப்பிடப்படும், அதனையே பாராளுமன்ற உறுப்பினர் பின்பற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி ஆண்டறிக்கையின் அட்டவணை 5.3 பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றது.

தேயிலை: 2017 ஆம் ஆண்டில் தேயிலைத் துறையினால் கிடைக்கப்பெற்ற மொத்த ஏற்றுமதி வருமானம் 1.529 பில்லியன் அமெரிக்க டொலர்கள், இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் ஒத்துப்போகின்றது.

இறப்பர்: 2017 ஆம் ஆண்டில் இறப்பரினால் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 38.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இறப்பர் பொருட்களின் ஏற்றுமதியினால் ஈட்டப்பட்ட வருமானம் 0.835 பில்லியன் அமெரிக்க டொலர்கள். எனவே, இறப்பர் துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 0.874 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதுவும் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் ஒத்துப்போகின்றது.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர் ஜயதிஸ்ஸவின் கூற்றுக்களை “உண்மை” என வகைப்படுத்துகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்த இரண்டு துறைகளும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதை பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று விளக்க முற்படுகின்றது. அவர் குறிப்பிட்ட பெறுமதிகள் நாட்டின் ஏற்றுமதி புள்ளிவிபரங்கள். ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் ஏற்றுமதி வருமானத்தை ‘நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும்’ அளவீடாக பயன்படுத்தியுள்ளார். எனினும், பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குவதை பரந்தநோக்கில் கருதினால், அதாவது ‘மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு வழங்குவது’ எனக் கருதினால், இந்த இரண்டு துறைகளின் பங்களிப்பும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட ஏற்றுமதி வருமானத்தை விட அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன எனக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு துறைகளையும் வெறுமனே ஏற்றுமதி என்பதுடன் மாத்திரம் மட்டுப்படுத்திவிட முடியாது.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்