ராஜித சேனாரத்ன

சுகாதார அமைச்சர் வரிக்கொள்கையினை தவறாகக் குறிப்பிடுகின்றார்.

"

புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்காக நாங்கள் புகையிலை மீது 90 வீத வரியை அமுல்படுத்தினோம்

டெய்லி நியூஸ் | பிப்ரவரி 20, 2019

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த பின்வரும் கூற்றினை டெய்லி நியூஸ் 2019 பெப்ரவரி 20 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

‘புகையிலைப் பாவனைக்கு எதிராக நாங்கள் சரியான முறையில் நடந்துகொண்டோம். புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்காக நாங்கள் 90 சதவீத வரியை அமுல்படுத்தினோம்.’

அமைச்சரின் இந்தக் கருத்தானது சிகரட் மீதான வரியைக் குறிப்பிடுவதாக நாங்கள் எடுத்துக்கொள்கின்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சர் சிகரட்டுக்கான வரிக்கொள்கையை முன்வைப்பதில் ஈடுபட்டுள்ளார்.

சிகரட் மீது இரண்டு விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன.

1.    பெறுமதி சேர் வரி (VAT): சிகரட் விலையின் வீதமாக அறிவிடப்படுகின்றது.

2.    தீர்வை வரி: உற்பத்தியின் போது ஒரு சிகரட்டிற்கு நிலையான ஒரு தொகை வரியாக அறிவிடப்படுகின்றது. சிகரட்டுக்கள் மீதான முதன்மையான வரி இந்த தீர்வை வரியாகும்.

தீர்வை வரியினை கருத்தில் கொண்டே சிகரட் நிறுவனங்கள் தங்களது விலையை முடிவு செய்கின்றன. எனவே வரி வீதத்தினை அரசாங்கம் அன்றி, சிகரட் நிறுவனங்களே முடிவு செய்கின்றன.

அட்டவணை 1 72-84 மிமீ நீளமான சிகரட்டுக்கள் மற்றும் 60 மில்லிமீற்றருக்கு குறைவான நீளத்தைக் கொண்ட சிகரட்டுக்களுக்கான விலை மற்றும் உத்தேச வரியினை காட்டுகின்றது. இவ்விரு நீளங்களைக்கொண்ட சிகரட் வகைகள் 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் விற்பனையான சிகரட்டுக்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை.

2016 ஆம் ஆண்டின் இறுதியிலேயே சிகரட்டுக்களுக்கான வரியினை அரசாங்கம் முதன்முதலில் அதிகரித்திருந்தது: ஒக்டோபர் மாதத்தில் தீர்வை வரி அதிகரிக்கப்பட்டது, நொவம்பர் மாதத்தில் 15 வீதமான பெறுமதி சேர் வரி மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அதேவேளையில் புகையிலை நிறுவனங்களும் தங்களது விலைகளை அதிகரித்தன. மொத்த வரியினால் (பெறுமதி சேர் வரி + தீர்வை வரி) சிகரட் விலை 70 முதல் 74 சதவீதம் வரையில் அதிகரித்தது. 72-84 மிமீ மற்றும் 84+மிமீ நீளமுடைய சிகரட்டுக்களுக்கான வரி 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சிகரட் விலைகள் மீண்டும் அதிகரித்தன.

எனவே வரி வீதமானது 90 சதவீதம் என அமைச்சர் குறிப்பிடுவது சரியானதல்ல. நாங்கள் அவருடைய கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: சிகரட் விலை மற்றும் வரி  மீளாய்வு, 2016 – 2018



மூலம்