ஹர்ஷன ராஜகருணா

பாராளுமன்றத்தில் உரையாற்றாத உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சரியாகவே தெரிவித்துள்ளார்.

"

(2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில்) 95 சதவீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். 5 சதவீதமானவர்கள் மாத்திரமே பேசவில்லை.

சிலுமின | மார்ச் 3, 2019

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்றத்தில் உரையாற்றாத உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சரியாகவே தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, அதற்கான விளக்கம் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் ஹர்ஷன ராஜகருணாவிடம் கேட்டிருந்தார். அதனை சிலுமின பத்திரிகை 2019 மார்ச் 03 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா, ‘(2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில்) 95 சதவீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். 5 சதவீதமானவர்கள் மாத்திரமே பேசவில்லை.’

ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறிப்பிடாமல் சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். (எனினும், 225 இல் 13 என்பது 5.78 வீதமாகும். பாராளுமன்ற உறுப்பினர் முழு எண்ணுக்கு மட்டந்தட்டும் போது 6 வீதம் என குறிப்பிடுவதற்கு பதிலாக 5 வீதம் என குறிப்பிட்டுள்ளார்). எனவே, ஊடகவியலாளர் கேட்ட கேள்வியின் உண்மைத்தன்மையை நாங்கள் ஆராய்ந்தோம்.

உத்தியோகபூர்வ ஹன்சாட்டுக்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயற்பாடுகளை கண்டறிந்து வெளியிடும் இணையத்தளமான *Manthri.lk தரவுகளுக்;கு அமைய, 2018 ஆம் ஆண்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 13 பேர் மாத்திரமே பாராளுமன்றத்தில் பேசவில்லை. இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் கட்சிகளை அட்டவணை 1 குறிப்பிடுகின்றது.

எனவே, கேள்வி மற்றும் அதற்கான பாராளுமன்ற உறுப்பினரின் பதிலை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

*வெளிப்படுத்துதல்: Verité Research இன் மற்றொரு குழுவினால் முன்னெடுக்கப்படும் இணையத்தளம் Manthri.lk.



மூலம்

  • Manthri.lk பார்வையிட: http://bit.do/MPcontribution-2018