கலாநிதி நந்தலால் வீரசிங்க

இலங்கைக்கு EFF பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் சரியாக மதிப்பிடுகிறார்

"

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கக்கூடிய நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதி (EFF – Extended Fund Facility) நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இதற்குப் பொதுவாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.

டெய்லி நியூஸ் | ஏப்ரல் 19, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலத்தை வழங்கக்கூடிய, அதிக சீர்திருத்தக் கட்டமைப்புகள் தேவைப்படும் கடனுதவியான EFF இலங்கைக்குப் பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

EFFன் பொருத்தத்தை மதிப்பிடுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட கடன் கொடுப்பனவு ஏற்பாடுகள் தொடர்பான ஆவணத்தையும் இலங்கை இதுவரை பெற்ற கடன் தொடர்பான விபரங்களையும் FactCheck.lk ஆராய்ந்தது.

EFFன் பொருத்தமானது இரண்டு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது: (1) கடனுதவியின் மீள்கொடுப்பனவுக் காலம் (2) அதன் மூலம் பெறப்படும் கடன் தொகை.

அளவுகோல் 1ன் மதிப்பீடு: சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் எட்டு வகையான கடன் வசதிகளை அட்டவணை 1 காட்டுகிறது. வெளிப்புற கடன் வசதிக்கு (ECF – External Credit Facility) அடுத்து, இரண்டாவதாக அதிக மீள்கொடுப்பனவுக் காலத்தை EFF கொண்டுள்ளது. ECFக்கு இலங்கை தகுதிபெறவில்லை.

அளவுகோல் 2ன் மதிப்பீடு: சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்றுக்கொண்ட சராசரிக் கடன்களை ஒப்பிடும்போது, EFF மூலம் பெறப்பட்ட கடன் தொகையானது 416.97 மில்லியன் என அதிகமாக உள்ளது.

இந்த இரண்டு அளவுகோல்கள், தகுதிபெறுவதற்கான நிபந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடும்போது, அதிக சலுகைகளைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியுடன் அதிகளவு கடன்தொகையை EFF மட்டுமே வழங்குகிறது. எனவே இது இலங்கைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஆகவே நாங்கள் ஆளுநரின் அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: ஒரு நாட்டின் ஒதுக்கீட்டில் 145 சதவீதத்தை வருடாந்தம் பெறுவதற்கு EFF அனுமதிக்கிறது. இலங்கையின் ஒதுக்கீடு SDR 578.8 மில்லியன் எனும் அடிப்படையில், வருடாந்தம் SDR 839.26 மில்லியனை (சுமாராக ஐ.அ.டொ 1.1 பில்லியன்) EFF மூலம் இலங்கையால் பெற முடியும். எனினும், நிலையற்ற கடன் மற்றும் மீள்கட்டமைப்புச் சவால்கள் காணப்படும் சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கிடைக்கும் வழக்கமான உதவிகளைத் தாண்டி கூடுதல் உதவிகள் இலங்கைக்குத் தேவைப்படும்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1 – சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் கடனுதவிகள் (பெறுமதிகள் SDR மில்லியனில் உள்ளன)

மேலதிக  குறிப்பு:

  1. ECF கூடுதல் மீள்கொடுப்பனவு காலத்தைக் கொண்டிருந்தாலும், அது வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி நிதியத்திற்கு (PRGT – Poverty Reduction and Growth Trust) தகுதிபெறும் உறுப்பினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது (அதாவது குறைந்த வருமான வரம்பிலிருக்கும் நாடுகள்). இலங்கை இந்த நிலையிலிருந்து 2010ம் ஆண்டு முன்னேறியது. எனவே இந்தக் கடனுதவிக்கு இலங்கை தகுதிபெறவில்லை.

 

  1. இலங்கை தற்போது திவாலாகியுள்ள நிலையில், மோசமாகியுள்ள பணப்புழக்க நிலையைச் சரிசெய்யவும் சென்மதி நிலுவையை அதிகரிப்பதற்கும் இலங்கைக்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது. EFF நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்ட கொள்கை மாற்றங்களையும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்த நீண்ட மீள்கொடுப்பனவுக் காலம் இலங்கைக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கும்.


மூலம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பான ஆவணம், பார்வையிட: https://www.imf.org/en/About/Factsheets/IMF-Lending [இறுதியாக அணுகியது 29.04.2022]

இலங்கை: செப்டெம்பர் 30, 2018 அன்று இதுவரை பெற்றுக்கொண்ட கடனுதவிகள், பார்வையிட: https://www.imf.org/external/np/fin/tad/extarr2.aspx?memberKey1=895&date1key=2018-09-30 [ இறுதியாக அணுகியது 29.04.2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன