சாணக்கியன் இராசமாணிக்கம்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சரியாகத் தெரிவிக்கிறார்

"

...இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அதன் அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விலையேற்றத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது…

ManthriLK_Watch | பிப்ரவரி 24, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான தொடர்பாடல்கள் உட்பட இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட ஆவணங்களை FactCheck.lk சரிபார்த்தது.

குறைந்த பயன்பாட்டு வரம்பிற்கான ஒரு அலகின் விலையை ரூ.8 இலிருந்து ரூ.10 ஆக அதிகரிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதும் அதற்குப் பதிலாக தற்போது விலை ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார். “இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு” என்பதை இரண்டு சாத்தியமான குழுக்களாகக் கருத முடியும். 1) பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிபுணர்கள் மற்றும் பணிப்பாளர்கள் 2) ஆணைக்குழுவின் உறுப்பினர்கள். இந்த அறிக்கையைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஒன்றையே இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவாகக் குறிப்பிடுகிறார்.

இலங்கை மின்சார சபை ஜனவரி 5, 2023 அன்று விலைப்பட்டியல் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்திருந்ததை ஆவணங்கள் காட்டுகின்றன. இதில் குறைந்த பயன்பாட்டு வரம்பிற்கான ஒரு அலகின் விலையை ரூ.8 இலிருந்து ரூ.30 ஆக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பெப்ரவரி 13, 2023 திகதியிடப்பட்ட பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆவணத்தில் (இது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கட்டண மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரிவின் பணிப்பகத்தால் கையொப்பமிடப்பட்டது – குழு 1) மின்சார சபையின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதுடன் குறைந்த பயன்பாட்டு வரம்பின் ஒரு அலகிற்கான விலையை ரூ.8 இலிருந்து ரூ.10 ஆக அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (குழு 2) பரிந்துரைத்திருந்தது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (குழு 1) பரிந்துரையை நிராகரித்து பதிலாக மின்சார சபையின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (குழு 2) ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்திப்பையோ தீர்மானத்தையோ முன்னெடுத்ததா என்ற சர்ச்சை எழுந்துள்ளதுடன் அது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மின்சார சபையின் கட்டண அதிகரிப்பு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (குழு 1) பரிந்துரைக்கு அமைவாக இல்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுவதால் நாங்கள் அவரது அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகிறது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

https://www.pucsl.gov.lk/consultation-document-for-revision-of-electricity-tariffs-2023/ [இறுதியாக அணுகியது 22 மார்ச் 2023]

Commission Paper  [இறுதியாக அணுகியது 22 மார்ச் 2023]

Feb 2023 – Revision  [இறுதியாக அணுகியது 22 மார்ச் 2023]

CEB request for tariff revision dated 5th January 2023 [இறுதியாக அணுகியது 22 மார்ச் 2023]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன