ரன்ஜித் சியம்பலாபிடிய

வரி செலுத்தும் தொழிற்படை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய கூறுவது தவறாகும்

"

”மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் சம்பாதிக்கும் 120,965 நபர்கள் அல்லது தொழிற்படையின் 2.6% மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.”

டெய்லி மிரர் | பிப்ரவரி 11, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

தொழிற்படையில் மிகக் குறைந்த சதவீதம் மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியைச் செலுத்துவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார். அவர் இந்தக் கூற்றைப் பாராளுமன்றத்தில் தெரிவித்ததால், இந்த அறிக்கையானது உயர்மட்டத் தீர்மானம் எடுப்பவர்கள் மத்தியிலும் ஊடகத்திலும் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை 2019 மற்றும் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை 2019 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

PAYE வரி சேகரிப்பு திட்டம் ஜனவரி 2020ல் இல்லாதொழிக்கப்பட்டதால் 2019ம் ஆண்டு ஒப்பீட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2019ம் ஆண்டில் காணப்பட்ட தனிநபர் வருமான வரிக்கான குறைந்தபட்ச வரம்பே தற்போதும் காணப்படுகிறது. அதாவது ரூ.100,000க்கும் மேல் மாத வருமானம் பெறும் சம்பளம் பெறும் பணியாளர்கள் இந்த வரியைச் செலுத்த வேண்டும் (அட்டவணை ஒன்று மற்றும் இரண்டைப் பார்க்கவும்).

2019ம் ஆண்டில் ”PAYE திட்டத்தின் கீழ் வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை” 1,149,883 என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன (அட்டவணை 1).

2019ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு இறுதியில் பெயரளவு மொ.உ.உ 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ள போதும், தொழிற்படை புள்ளிவிபரங்கள் 2019ம் ஆண்டின் இறுதியில் காணப்பட்டதைப் போன்றே 2022ம் ஆண்டிலும் உள்ளது என்பதை அட்டவணைகள் ஒன்று மற்றும் இரண்டிலுள்ள பெறுமதிகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே ”PAYE திட்டத்தின் கீழ் வருமான வரியைச் செலுத்தும் தொழிலாளர்களின்” எண்ணிக்கையும் பங்கும் 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டில் குறையாது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

2023ம் ஆண்டுக்கு இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியை விட 2019ம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பெறுமதி கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகும். மேலும் தொழிற்படையின் விகிதாச்சாரமாக உள்நாட்டுத் திணைக்களத்தின் பெறுமதி 13.4 சதவீதமாகக் காணப்படுகிறது. இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று 2.6% அல்ல.

எனவே அவருடைய கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகிறது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 2019 மற்றும் 2022ல் இலங்கை தொழிற்படை புள்ளிவிபரங்கள் (Q3)

மூலம்: தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை 2019, தொழிற்படை கணக்கெடுப்பு காலாண்டு அறிக்கை 2022 Q3, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை 2019.  

 

அட்டவணை 2: 2019 மற்றும் 2022ல் இலங்கையின் தொழிற்படையில் PAYE திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தும் தொழிலாளர்களின் பங்கு மற்றும் ஏனைய குறிகாட்டிகள்

மூலம்:  தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை 2019, தொழிற்படை கணக்கெடுப்பு காலாண்டு அறிக்கை 2022 Q3, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை 2019 ஆகியவற்றின் தரவை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடுகள்.  



மூலம்

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், தொழிற்படை கணக்கெடுப்பு – காலாண்டு அறிக்கை, Q3 2022. http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/QuarterlyReports/3rdQuarter2022 என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், தொழிற்படை கணக்கெடுப்பு – ஆண்டறிக்கை 2019. http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/AnnualReports/2019 என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை 2019. http://www.ird.gov.lk/en/publications/Annual%20Performance%20Report_Documents/IR_PR_2009_E.pdf என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

ஊடக மேற்கோள்கள்:

”PAYE வரியை இலங்கையின் மொத்த தொழிற்படையில் 2.6% மட்டுமே செலுத்த வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது”, பெப்ரவரி 11, 2023, டெய்லி மிரர் ஆன்லைன், https://www.dailymirror.lk/breaking_news/Government-says-only-2-6-of-Sri-Lankas-total-workforce-subject-to-PAYE-tax/108-253960 என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

இலங்கை PwC இன் முகாமைத்துவப் பங்காளரின் LinkedIn பதிவு. https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7030034175638335488/ என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. ஹர்ஷ த சில்வாவின் LinkedIn பதிவு. https://www.linkedin.com/posts/harshadesilvamp_there-is-no-doubt-that-we-must-work-with-activity-7031923491394240512-5VeD?utm_source=share&utm_medium=member_desktop என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

”தொழிற்படையின் 2.6% மட்டுமே PAYE வரி விதிக்கப்பட்டுள்ளது – அமைச்சர்”, பெப்ரவரி 11, 2023, நியூஸ் வயர், https://www.newswire.lk/2023/02/11/paye-tax-imposed-on-only-2-6-of-workforce-minister/ என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

”தொழிற்படையின் 2.6% மட்டுமே PAYE வரி செலுத்த வேண்டியுள்ளது”, பெப்ரவரி 11, 2023, TheMorning.lk, https://www.themorning.lk/articles/b7n84DfK9BpWMhY6IhNk என்ற இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன