ரணில் விக்கிரமசிங்க

பதிவுசெய்யப்பட்ட வரிக் கோப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து ஜனாதிபதி சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2019ம் ஆண்டில் மொத்தமாக 1.5 மில்லியன் வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன... அதாவது மொத்தமாக எங்களிடம் 1.6 மில்லியன் வரிக் கோப்புகள் காணப்பட்டன. நாங்கள் உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) இல்லாதொழித்தபோது டிசம்பர் 2021ல் எங்களிடம் 400,000 வருமான வரிக் கோப்புகள் (மட்டுமே) காணப்பட்டன.

President’s Media Division | ஜனவரி 28, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2019ம் ஆண்டின் இறுதியில் 1.5 மில்லியன் வருமான வரிக் கோப்புகள் இருந்ததாகவும் 2021ம் ஆண்டின் இறுதியில் வருமான வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 400,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 2020ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வரித் திருத்தங்கள் காரணமாகவே 2019ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டில் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டு அவர் இந்தக் கூற்றுகளை முன்வைக்கிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைளை (APRIRD) FactCheck.lk ஆராய்ந்தது.

நிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி செலுத்துநர்கள் ஆகிய இரண்டு வகைகளையும் கருத்தில் கொண்டால், 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளின் டிசம்பர் மாத இறுதியில் முறையே 1,505,552 மற்றும் 409,814 வருமான வரிக் கோப்புகள் காணப்படுவதை APRIRD காட்டுகிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). ஜனாதிபதி குறிப்பிடும் எண்ணிக்கைகள் அறிக்கைகளில் உள்ள எண்ணிக்கைகளுடன் பொருந்துகின்றன. அவர் குறிப்பிடுவதைப் போன்று வரிக் கோப்புகளின் எண்ணிக்கையில் 73% வீழ்ச்சி காணப்படுகிறது.

எனவே ஜனாதிபதியின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

@மூலம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, 2018 – 2021, தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை 2021, DCS புள்ளிவிபரவியல் சிறுநூல் 2022

குறிப்பு:

கணக்கீட்டில் உள்ள தவறுகள் காரணமாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2018 வருடாந்த செயலாற்றுகை அறிக்கையின் அட்டவணை 2.1ல் மொத்தம் 986,684 வருமான வரிசெலுத்துநர்கள் மற்றும் 1,182,736 வரிக் கோப்புகள் உள்ளதாகப் பதிவாகியுள்ளது (பக்கம் 35). 

PIT- முற்பண தனிநபர் வருமான வரி திட்டத்தின் கீழ் வருமான வரியைச் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை

 



Additional Note

2019ம் ஆண்டில் 1,430,988 எனக் காணப்பட்ட இலங்கையின் தனிநபர் வரிக் கோப்புகள் (PAYE பதிவுகள் உட்பட) வருமான வரி செலுத்த வேண்டியர்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே காட்டுகிறது என்பதை அட்டவணை 1ல் உள்ள எண்ணிக்கைகள் காட்டுகின்றன. இதற்கான முதலாவது அறிகுறியானது, 2019ல் வேலையில் இருந்த சனத்தொகையில் 17% மட்டுமே தனிநபர் வரிக் கோப்புகளைக் கொண்டிருந்தனர். இரண்டாவது, அந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 18% மட்டுமே வருமான வரிக் கோப்புகளைக் கொண்டிருந்தன.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன