ஜோன் அமரதுங்க

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் சரியாக குறிப்பிடுகிறார்

"

2015 இல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியன், 2018 இல் இது 2.3 மில்லியனாக உயர்ந்தது.

டெய்லி நியூஸ் | மார்ச் 27, 2019

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்த பின்வரும் கூற்றுக்களை, டெய்லி நியூஸ் 2019 மார்ச் 27 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

1.    2015 ஆம் ஆண்டில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். ஆனால் 2018 ஆம் ஆண்டில் அது 2.3 மில்லியனாக உயர்ந்தது.

2.    அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, சுற்றுலாத்துறை வருமானம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது 2018 ஆம் ஆண்டில் 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.

அமைச்சரின் இந்தக் கூற்றுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சுற்றுலா வளர்ச்சிப் போக்கு – 1970 முதல் 2018 அறிக்கையினை ஆராய்ந்தோம்.

முதலாவது கூற்று: 2014 ஆம் ஆண்டில் (அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பதற்கு முந்தைய வருடம்) 1,527,153 ஆக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2018 ஆம் ஆண்டில் 2,333,796 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிபர வெளியீடு இதனை உறுதிப்படுத்துகின்றது.

இரண்டாவது கூற்று:  2014 ஆம் ஆண்டில் 2,431.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட சுற்றுலா வருமானம், 2018 ஆம் ஆண்டில் 4,380.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு துறைச்செயலாற்ற அறிக்கைகள் இந்தப் புள்ளிவிபரங்களை உறுதிப்படுத்துகின்றன.இந்த தரவுகள் அமைச்சரின் இரண்டு கூற்றுக்களுடனும் சரியாக இருக்கின்றன.

எனவே, நாங்கள் அமைச்சரின் கூற்றுக்களை ‘உண்மை’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்