கபீர் ஹசீம்

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை குறித்து ஹசீம் சரியாகத் தெரிவிக்கிறார்

"

2021 டிசம்பரில் அரச நிறுவனங்களால் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான தொகை கடனாகப் பெறப்பட்டுள்ளது.

திவயின | ஆகஸ்ட் 18, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

டிசம்பர் 2021ல் அரச நிறுவனங்கள் ரூ.1 ட்ரில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை (SOEs – State Owned Enterprises) குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் பொறுப்புகள் மத்திய அரசாங்கத்தின் கணக்குகளில் காட்டப்படுவதில்லை.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன்கள் தொடர்பான முழுக் கணக்குகள் குறித்து வெளியிடப்பட்ட எந்தவித ஆவணங்களையும் FactCheck.lk ஆல் கண்டறிய முடியவில்லை. எனினும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் கடன்களைப் பெறுவதற்குத் தேவையான திறைசேரி உத்தரவாதங்களின் தொகை குறித்து நிதியமைச்சு அறிக்கையிட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பிற்கான அந்தத் தரவு நிதியமைச்சின் 2021 ஆண்டறிக்கையில் இருந்து பெறப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அனைத்துக் கடன்களுக்கும் திறைசேரியின் உத்தரவாதங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும் வெளியிடப்பட்ட திறைசேரி உத்தரவாதங்களின் மொத்தத் தொகை ரூ.1 ட்ரில்லியனுக்கும் அதிகமாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையைச் சரி எனக் கருதலாம்.

அறிக்கையின் பிரகாரம், 2021ம் ஆண்டில் மட்டும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன்களுக்காக திறைசேரி ரூ.905 பில்லியனை திறைசேரி உத்தரவாதமாக வெளியிட்டுள்ளது (இதில் ரூ.725 பில்லியன் [அல்லது ஐ.அ.டொ 3.6 பில்லியன்] இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்காக வழங்கப்பட்டுள்ளது (அட்டவணை 2ஐப் பார்க்கவும்)).

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் திறைசேரி உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களின் மொத்த நிலுவைத் தொகை ரூ.1.5 ட்ரில்லியனாகப் பதிவாகியுள்ளது (அட்டவணை 1ஐப் பார்க்கவும்). 2021 இறுதியில் கடன்களின் மொத்த நிலுவைத் தொகை ரூ.1 ட்ரில்லியனுக்கும் அதிகம் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை இது ஆதரிக்கிறது.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: திறைசேரி உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களின் நிலுவை (மத்திய அரசாங்கத்தின் கடன் தவிர்த்து)

மூலம்: ஆண்டறிக்கை (பல்வேறு ஆண்டுகளுக்கானவை), நிதியமைச்சு

அட்டவணை 2: 2021ம் ஆண்டில் வெளியிடப்பட்ட திறைசேரி உத்தரவாதங்களின் தொகை

மூலம்: 2021 ஆண்டறிக்கை, நிதியமைச்சுமூலம்

மூலம்: 2021 ஆண்டறிக்கை, நிதியமைச்சு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன