பந்துல குணவர்தன

அமைச்சர் குணவர்தன புகையிரத சேவைகள் குறித்து சரியாகத் தெரிவிக்கிறார்

"

2021ம் ஆண்டில் இலங்கை புகையிரத சேவைகள் ரூ.2.6 பில்லியனை வருமானமாக ஈட்டியிருந்தாலும் சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக மட்டும் ரூ.7.8 பில்லியனைச் செலுத்த வேண்டியிருந்தது.

மவ்பிம | ஜூலை 27, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றை ஆராய்வதற்கு, 2022ம் ஆண்டுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள், நிதியமைச்சு வெளியிட்ட ஆண்டறிக்கை 2021 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

நிதியமைச்சின் ஆண்டறிக்கையின் பிரகாரம் 2021ம் ஆண்டில் இலங்கை புகையிரதத் திணைக்களம் ஈட்டியுள்ள உண்மையான வருமானம் ரூ.2.6 பில்லியன். இது அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது.

எனினும், திணைக்களத்தின் செலவினங்கள் தொடர்பான தகவல்களை அறிக்கை வழங்கவில்லை. எனவே செலவினங்களை மதிப்பிடுவதற்கு 2021 நொவம்பரில் பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தரவை FactCheck.lk பயன்படுத்தியது. அந்த ஆவணங்களில் 2021க்கான சம்பளங்கள், வேதனங்கள் மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கான (மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தவிர்த்து) திருத்தப்பட்ட செலவின மதிப்பீடுகள் ரூ.7.8 பில்லியனாக உள்ளது.

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அனைத்துப் பிற செலவுகளையும் கருத்தில் கொள்ளாமல், அதன் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் மட்டும் ஒப்பிடுகையில் புகையிரதச் சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாக உள்ளது என்பதையே அமைச்சர் குறிப்பிடுகிறார். அமைச்சர் குறிப்பிடும் பெறுமதிகள் கிடைக்கும் தகவல்களுடன் பொருந்துவதுடன் அவரது கூற்றை நியாயப்படுத்துகின்றன.

எனவே அமைச்சரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 மூலம்

ஆண்டறிக்கை 2021, நிதியமைச்சு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் இலங்கை, பக்கம் 217, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/a7a35d1a-556f-49b2-81e0-20294eb5a519 [ இறுதியாக அணுகியது செப்டம்பர் 1,2022]

வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2022, தொகுதி II, நிதியமைச்சு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் இலங்கை, பக்கம் 127, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/8842770a-0ed6-4d20-ac75-4ef40f8295c7 [ இறுதியாக அணுகியது செப்டம்பர் 1,2022

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன