ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி விக்கிரமசிங்க: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2020-2021ம் ஆண்டில் மட்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் ரூ.45 பில்லியன். மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்த நட்டம் ரூ.372 பில்லியன்

லங்காதீப | மே 17, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த காலப்பகுதியில் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 2007 முதல் 2021 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆண்டறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது. ஏப்ரல் முதல் மார்ச் வரையான ஒவ்வொரு நிதியாண்டுக்குமான இலாப நட்டங்களை ஒவ்வொரு ஆண்டறிக்கையும் தருகிறது.

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 2020/21 நிதியாண்டுக்கான நட்டம் ரூ.45.39 பில்லியன் எனவும் அதன் திரட்டப்பட்ட மொத்த நட்டம் ரூ.371.73 பில்லியன் எனவும் 2020/21 நிதியாண்டுக்கான (ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021) ஆண்டறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் வழங்கப்பட்ட இந்தப் பெறுமதிகள் ஜனாதிபதியின் அறிக்கையுடன் பொருந்துகின்றன (அட்டவணை 1ஐப் பார்க்கவும்).

ஆகவே நாங்கள் அவரது கூற்றை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: 2008 – 2021 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டங்கள் (ரூ. மில்லியன்)

*விமானங்களின் புதுப்பிப்புகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான கணக்கியல் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக திரட்டப்பட்ட நட்டங்கள் (2012ம் ஆண்டில் 22,789.94 மற்றும் 2013ம் ஆண்டில் 44,606.16) 2014ம் ஆண்டில் சரிசெய்யப்பட்டன.

** குத்தகைக்கான இலங்கையின் கணக்கியல் தரத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து 2020ம் ஆண்டில் 230,590.07ல் சரிசெய்யப்பட்டது.

*** “பிற விரிவான இலாபம்/(நட்டம்)” காணாத ஆதாயங்களையும் நட்டங்களையும் அங்கீகரிக்கிறது.



Additional Note

2007/08 நிதியாண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபத்தை ஈட்டவில்லை. மார்ச் 31, 2021 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மொத்த நட்டங்கள் ரூ.443.65 பில்லியன். அதேவேளை அதன் மொத்தச் சொத்துக்கள் ரூ.154.38 பில்லியன் ஆகும். ஜனவரி – ஏப்ரல் 2022 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் ரூ.248 பில்லியன் என நிதியமைச்சின் 2022ம் ஆண்டுக்கான அரையாண்டு நிதி நிலை அறிக்கை பதிவுசெய்துள்ளது. இதில் மார்ச் 2022ல் செலாவணி இழப்பான ரூ.145 பில்லியனும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


மூலம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆண்டறிக்கைகள்

நிதியமைச்சின் 2022ம் ஆண்டுக்கான அரையாண்டு நிதி நிலை அறிக்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன