இரான் விக்கிரமரத்ன

பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன பணவீக்கத்தைச் சற்று மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்

"

கடந்த மாதத்தில் 46.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் இந்த மாதம் 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் பணவீக்கம் – உணவுப் பணவீக்கம் – 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எங்களின் ஆண்டுக்காண்டு பணவீக்கம் கூட வழக்கமாக 10 சதவீதத்தால் அதிகரிப்பதில்லை.

லங்காதீப | ஆகஸ்ட் 6, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2022 ஏப்ரலில் 46.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் 2022 மே மாதத்தில் 57 சதவீதமாக, அதாவது ஒரு மாதத்திற்குள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றை ஆராய, கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI – Colombo Consumers’ Price Index) மற்றும் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்படும் உணவு மற்றும் உணவல்லா வகைகளின் பணவீக்கப் புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்காண்டு பணவீக்கம் (YoY – year-on-year) தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளில் அதே மாதத்தில் அடிப்படைச் சுட்டெண்ணில் ஏற்படும் சதவீத மாற்றத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. எனினும் மாதாந்த (MoM – month-on-month) பணவீக்கம் ஒரே ஆண்டில் இரண்டு தொடர்ச்சியான மாதங்களில் அடிப்படைச் சுட்டெண்ணில் ஏற்படும் சதவீத மாற்றத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

2022 ஏப்ரலில் CCPI YoY பணவீக்கம் 46.6 சதவீதமாகவும் 2022 மே மாதத்தில் மே 57.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்தப் பெறுமதிகள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் ஒத்துப்போகின்றன. எனினும் ஏப்ரல் முதல் மே வரையிலான MoM பணவீக்க அதிகரிப்பு 9.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. ஏப்ரலில் இருந்து மே மாதத்தில் 10 சதவீதத்தை விட அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கிறார். ஆண்டுக்காண்டு பணவீக்கப் பெறுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பான 10.8 சதவீதத்தை (57.4%-46.6%) அவர் குறிப்பிட்டிருக்கக்கூடும்.

YoY பணவீக்கப் பெறுமதியை பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகிறார். உண்மையான MoM பணவீக்கம் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிக்கு அருகிலிருந்தாலும் அவர் அதைச் சரியாகக் குறிப்பிடவில்லை.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் பகுதியளவில் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

குறிப்பு:  இந்த உண்மைச் சரிபார்ப்பை வெளியிடும்போது YoY பணவீக்கம் ஜுன் மாதத்தில் 54.6 சதவீதத்தில் இருந்து ஜுலை மாதத்தில் 60.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை YoY உணவுப் பணவீக்கம் ஜுலை மாதத்தில் 90.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.Additional Note

CCPI எவ்வாறு கணக்கிடப்படுகிறது? கொழும்பு மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் குடும்பங்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் சராசரி மாற்றங்களை CCPI அடையாளம் காண்கிறது. கொழும்பில் அமைந்துள்ள புறக்கோட்டை, மருதானை, வெள்ளவத்தை, தெமட்டகொட, கிராண்ட்பாஸ், பொரளை, கிருலப்பனை, தெஹிவளை, கோட்டை, நுகேகொட, கொலன்னாவை, ரத்மலானை, நாரஹேன்பிட்டி ஆகிய 14 பொருளாதார நிலையங்களில் இருந்து பொருட்களின் விலைகள் சேகரிக்கப்படுகின்றன. நுகர்வோர் கூடையில் நகர்ப்புற வீட்டு நுகர்வோர் செலவினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 392 பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


மூலம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் பணவீக்கம், (அடிப்படை: 2013=100) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI/Inflation-FoodAndNonFoodGroups [ இறுதியாக அணுகியது 04 ஜூலை  2022]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (அடிப்படை: 2013=100) ஜுன் 2022, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI/CCPI_20220630E [ இறுதியாக அணுகியது 04 ஜூலை  2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது