ஹர்ஷ த சில்வா

அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்

"

“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”

டெய்லி FT | ஏப்ரல் 20, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்: (1) உள்நாட்டு கடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகள், அவை சுமார் ரூ.9 ட்ரில்லியன் பெறுமதியானவை (2) மொத்த திறைசேரி முறிகளில் 45% வங்கிகளிலும் 43% EPF, ETF ஆகியவற்றிடம் இருந்து கடனாகவும் பெறப்பட்டுள்ளன. இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, டிசம்பர் 31, 2022 அன்று உள்நாட்டுப் படுகடன் தொடர்பான தரவைப் பெற மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.

இலங்கையின் மொத்த உள்நாட்டுப் படுகடன் ரூ.15.03 ட்ரில்லியன், இது 2022ம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 62.27 சதவீதத்திற்குச் சமமானது என இலங்கை மத்திய வங்கியின் தரவு சுட்டிக்காட்டுகிறது. இந்த மொத்தக் கடனில் ரூ.8.71 ட்ரில்லியன் திறைசேரி முறிகளில் உள்ளன. இது மொத்த உள்நாட்டுக் கடனில் 57.93% ஆகும். உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளாக உள்ளன என்ற பாராளுமன்ற உறுப்பினரின் முதலாவது கூற்றுடன் இது பொருந்துகிறது.

ரூ.3.12 ட்ரில்லியன் திறைசேரி முறிகள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் ரூ.0.75 ட்ரில்லியன் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும் சொந்தமானது என்பதையும் மத்திய வங்கியின் தரவு காட்டுகிறது. இவை இரண்டும் மொத்த திறைசேரி முறிகளில் 44.43 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன. EPF, ETF உட்பட ஓய்வூதிய நிதியங்கள் ரூ.3.72 ட்ரில்லியன் திறைசேரி முறிகளைக் கொண்டிருக்கின்றன. இது மொத்த திறைசேரி முறிகளில் 42.72% ஆகும். பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றுடன் இந்தப் பெறுமதிகள் பொருந்துகின்றன. அதாவது ஓய்வூதிய நிதியங்கள் (பெரும்பாலும் EPF மற்றும் ETF) வர்த்தக மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் கொண்டிருக்கும் அதேயளவு அரச முறிகளைக் கொண்டிருக்கின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: டிசம்பர் 31, 2022 அன்று உள்நாட்டுப் படுகடன்மூலம்

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2022, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022 [இறுதியாக அணுகியது: மே 24, 2023].

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன