ரணில் விக்கிரமசிங்க

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றில் தெளிவில்லை

"

பற்றாக்குறைக்கு நிதியளிக்கும் திட்டம்: 2023-27 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடன் சேவைக் குறைப்பு, வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், 2022 ல் நிலுவைகள் உட்பட ஐ.அ.டொ 17 பில் கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது.

பாராளுமன்ற ஹன்சாட் | ஏப்ரல் 26, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையின் மொத்தக் கடன்களில் ஐ.அ.டொ 17 பில்லியனைக் குறைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி வழங்கிய தகவல்களின் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். எனினும் மற்றொரு விளக்கத்தையும் இது குறிப்பிடக்கூடும்: 2023 – 2027 காலப்பகுதியில் கடன் தொடர்பான மீள்கொடுப்பனவுகளின் பாய்ச்சலில் ஏற்படக்கூடிய குறைப்பையும் அது குறிப்பிடலாம்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை (IMFCR) (இல.23/116), மார்ச் 2023ல் நிதி அமைச்சின் முதலீட்டாளர் எடுத்துரைப்பு ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

2023 – 27 காலப்பகுதியில் கடன் சேவைக் குறைப்பு வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், ஐ.அ.டொ 17 பில்லியன் (வெளிநாட்டு) கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது” என IMFCR குறிப்பிடுகிறது. ஜனாதிபதியின் கூற்றும் அதையே குறிப்பிடுகிறது.

மார்ச் 2023ல் நிதி அமைச்சின் முதலீட்டாளர் எடுத்துரைப்பில், 2023-2027 காலப்பகுதிக்கான மீள்கொடுப்பனவுகளின் பாய்ச்சலில் ஐ.அ.டொ 17 பில்லியன் குறைப்பு காட்டப்பட்டுள்ளது. மொத்தக் கடன்களில் இந்த 17 பில்லியன் குறைப்பு காட்டப்படவில்லை (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). புதிதாகப் பெறப்பட்ட கடன்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குனர்களின் மீள்கொடுப்பனவுகளில் பாய்ச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படவில்லை. மாறாக, ஏற்கனவேயுள்ள இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குனர்களுக்கு 2023-2027 காலப்பகுதியில் செலுத்த வேண்டியுள்ள மீள்கொடுப்பனவுகளின் பாய்ச்சலில் 75% குறைப்பதன் மூலம் ஐ.அ.டொ 17 பில்லியனைக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குச் சவால் விடுக்கிறார்: “ஆகவே நாங்கள் 17 பில்லியன் கடனைக் குறைக்க முயற்சிக்கிறோம். நீங்கள் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ” – மொத்தக் கடனில் இந்தக் குறைப்பு ஏற்படுவதாக விளங்கிக் கொள்ள இது வாய்ப்பளிக்கிறது. எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கடன் குறைப்பு குறித்து அவர் குறிப்பிடுவது மீள்கொடுப்பனவுகளின் பாய்ச்சல் தொடர்பில் ஆகும்.

எனவே குழப்பத்தைத் தீர்த்து அவரது அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 2023 – 27ல் வெளிநாட்டு கடன் சேவைக் கொடுப்பனவுகள் (நிதியமைச்சின் முதலீட்டாளர் எடுத்துரைப்பில் இருந்து பெறப்பட்டது)Additional Note

கடனின் பாய்ச்சல் மற்றும் மொத்தக் கடனைக் குறைப்பதற்கு இடையிலான வேறுபாட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும். இலங்கையில் கோவிட் – 19 பெருந்தொற்றின் போது வங்கிகள் வழங்கிய தற்காலிக நிறுத்தத்தின் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது பிற்போடப்பட்டது. எனினும் இது அந்தக் கடன்களின் முதன்மைத் தொகையையோ வட்டியையோ எந்தவகையிலும் குறைக்கவில்லை. வட்டிக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டால் அவை மொத்தக் கடன் நிலுவையில் முதன்மைத் தொகையாகச் சேர்க்கப்படும். இடைநிறுத்தச் சலுகையைப் பெற்றுக்கொண்டவர்களின் கடன் மீள்கொடுப்பனவு பாய்ச்சல், சலுகை வழங்கப்பட்ட காலப்பகுதியில் குறைந்தது. ஆனால் அந்தக் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர், முதன்மை நிலுவை மற்றும் திரட்டப்பட்ட வட்டி ஆகியவற்றின் மொத்தத்தை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.


மூலம்

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை (இல.23/116), பார்வையிட: https://www.elibrary.imf.org/view/journals/002/2023/116/002.2023.issue-116-en.xml [இறுதியாக அணுகியது: மே 18, 2023].

இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சு, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் முதலீட்டாளர் எடுத்துரைப்பு, மார்ச் 2023, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/9f8870d3-4840-443d-b552-e5c0890e1613 [இறுதியாக அணுகியது: மே 18, 2023].

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன