ரணில் விக்ரமசிங்க

நேரடி வரிகள் குறைவாக வசூலிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்

"

பிற நாடுகளில் அநேகமான வரிகள் கூடுதல் வருமான வரம்பிலிருந்தே சேகரிக்கப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்தியாவில் 50% நேரடி வரி.. பங்களாதேஷில் 32% நேரடி வரி.. நேபாளத்தில் 31%.. 69%.. இந்தோனேசியாவில் 40% நேரடி வரி... வியட்னாமில் 31%, தாய்லாந்தில் 37% நேரடி வரி.. மலேசியாவில் 66% நேரடி வரி..

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை | பிப்ரவரி 8, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையில் சேகரிக்கப்படும் நேரடி வரிகளின் பங்கு பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது எனவும் நேரடி வரிகளின் பங்கை அதிகரிப்பதனால் பொதுமக்களின் (”குறைந்த வருமானம் பெறும் பெரும்பான்மையான மக்கள்” எனக் கருதப்படுகிறது) வரிச்சுமை (மறைமுக வரி) குறையும் எனவும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடும்போது ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, வருமானப் புள்ளிவிபரங்கள் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

நேரடி வரிகள் என்பது வருமானம், இலாபம் அல்லது திரட்டப்பட்ட செல்வத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது. மறைமுக வரிகள் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனையின் ஊடாகச் சேகரிக்கப்படுகிறது. அனைத்து வரிகளும் நேரடி வரி அல்லது மறைமுக வரி என வகைப்படுத்தப்பட முடியும்.

ஜனாதிபதி குறிப்பிடும் பெறுமதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதிகளுக்கும் இடையே குறைவான விலகல் (10 சதவீதத்திற்கும் குறைவான) மட்டுமே காணப்படுவதை அட்டவணை 1 காட்டுகிறது. வியட்னாமைப் பொறுத்தவரை பாரிய வேறுபாடு காணப்படுகிறது. ஆதன வரிகளைக் கணக்கில் கொண்டதன் பிறகு நேரடி வரிகள் கூடுதலாக உள்ளன. ஜனாதிபதியின் கணக்கீட்டில் இது கணக்கில் கொள்ளப்படவில்லை. எனினும் அந்தப் பிழையைச் சரிசெய்தாலும் ஜனாதிபதியின் ஒட்டுமொத்தமான கருத்திற்கு அது மேலும் வலுச் சேர்க்கிறது. அதாவது இலங்கையுடன் ஒப்பிடும்போது பிற நாடுகளின் நேரடி வரிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

இந்த உண்மைச் சரிபார்ப்பிற்கான மேலதிக குறிப்பிற்கு அமைய, நேரடி வரிகளைச் செல்வந்தர்களுக்கு விதிப்பதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கும் மறைமுக வரியைக் குறைக்க முடியும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரையில் அர்த்தம் உள்ளது. பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நேரடி வரிகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன என்ற அவரின் ஒட்டுமொத்தக் கருத்திற்கும் அவர் வழங்கும் தரவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவு என்பன ஆதரவாக உள்ளன.

எனவே ஜனாதிபதியின் கூற்றை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: நேரடி வரியின் பங்கு (கிடைக்கும் சமீபத்திய தரவு*)

மூலம்: IMF

*வியட்னாம் மற்றும் இந்தியாவிற்கான சமீபத்திய தரவு முறையே 2019 மற்றும் 2018 ஆண்டுக்கு மட்டுமே கிடைக்கிறது. அனைத்துப் பிற நாடுகளுக்குமான தரவு 2021ம் ஆண்டுக்கு உரியவை.

குறிப்பு: பெறுமதிகள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பொதுவான செலவினம் கருத்தில் கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தின் பொதுவான செலவினம் கிடைக்காதபோது, மத்திய அரசாங்கத்தின் செலவினம் கருத்தில் கொள்ளப்படுகிறது.

: பெரும்பான்மையான குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மறைமுக வரி சுமையானதாகக் கருதப்படுவதற்கான காரணம் என்னவென்றால் உயர் வருமானம் அல்லது செல்வம் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்குமான நுகர்வின் மீது விதிக்கப்படும் வரியாக இது விளங்குகின்றது. எனினும் இது சில சமயங்களில் இது பின்வருமாறு சரிசெய்யப்படுகிறது. மறைமுக நுகர்வு வரியை சரிசெய்வதன் மூலம் (இலங்கையில் முன்னெடுக்கப்படுவதைப் போன்று) இதைச் சரி செய்ய முடியும். செல்வந்தர்களால் மட்டுமே பொதுவாக வாங்கப்படக்கூடிய (உதாரணம்: ஆடம்பரக் கார்கள் மீதான கலால் வரி) அதிகப் பெறுமதியுடைய நுகர்வுப் பொருட்கள் மீது குறிப்பிட்ட நுகர்வு வரிகளை விதிப்பதன் மூலம் இது முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் நேரடி மற்றும் மறைமுக வரி வளர்விகித வரி மற்றும் தேய்வுவிகித வரிகளுக்குச் சமமானது என ஏன் கருதப்படக்கூடாது என்பதைப் பின்வரும் கட்டுரை விளக்குகிறது.

https://www.themorning.lk/articles/224340

 



Additional Note

 


மூலம்

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுதளம் – வருமானத்தின் வகைகளை விவரிக்கிறது, பார்வையிட, https://data.imf.org/regular.aspx?key=60991467 (இறுதியாக அணுகியது – பெப்ரவரி 15, 2023)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன