மனோ கணேசன்

மலையகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணப்படும் இடைவெளி குறித்து பா.உ மனோ கணேசன் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நகரப்புறங்களில் 43 சதவீதமாகவும் கிராமங்களில் 34 சதவீதமாகவும் காணப்படும் அதேவேளை, மலையகத்தில் 51% எனும் உயர்மட்டத்தில் உள்ளது. நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் மலையகத்தில் இது 53 சதவீதமாக உள்ளது என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது.

டெய்லி மிரர் | நவம்பர் 21, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

மலையகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள இடைவெளி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார். 1) வறுமை ஏறத்தாழ இரு மடங்காகியுள்ளது 2) உணவுப் பாதுகாப்பின்மை நகர் மற்றும் கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் மலையகத்தில் 20% – 30% அதிகமாகவுள்ளது.

கூற்று 1: இந்தக் கூற்றுக்காக பாராளுமன்ற உறுப்பினர் உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி தொடர்பான அக்டோபர் 2022 அறிக்கையில் இருந்து தரவைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

2022ல் வறுமை வீதம் 25.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக வங்கியின் எதிர்வுகூறல்கள் மதிப்பிட்டுள்ளன (2021ல் இது 13.1 சதவீதமாக மதிப்பிடப்பட்டது). பிரிக்கப்பட்ட மதிப்பீடுகள் மலையகத்தில் வறுமை வீதம் 53.7% என மதிப்பிட்டுள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகளுடன் சரியாகப் பொருந்துகின்றது. (உலக வங்கியின் வறுமை மதிப்பீடு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).

கூற்று 2: இந்தக் கூற்றுக்காக பாராளுமன்ற உறுப்பினர் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு கணக்கெடுப்பு முடிவுகளில் இருந்து தரவைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

உணவுப் பாதுகாப்பின்மையில் இரண்டு வகைகள் உள்ளன: 1) மிதமான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் 2) தீவிர உணவுப் பாதுகாப்பின்மை. பாராளுமன்ற உறுப்பினர் இந்த அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் வெளியான உலக உணவுத் திட்டத்தின் கணக்கெடுப்பு தரவு ஆகஸ்ட் 2022க்கு உரியது. இதில் மொத்த உணவுப் பாதுகாப்பின்மையின் மதிப்பீடு (இரண்டு வகைகளையும் சேர்த்தது) மலையகத்திற்கு 50.6 சதவீதமும் நகரப்புறத்திற்கு 43 சதவீதமும், கிராமப்புறத்திற்கு 34.3 சதவீதமும் ஆகும். இந்தப் பெறுமதிகள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதங்களுடன் பொருந்துகின்றன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).

பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கூற்றை வெளியிட்ட காலப்பகுதியில் முறையான பிரிக்கப்பட்ட மதிப்பீடுகளைக் கொண்டிருந்த ஒரே ஒரு மூலத்திலிருந்து கிடைக்கும் சிறந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், மலையகத்தில் வறுமை வீதம் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை என்பன உயர்மட்டத்தில் காணப்படுகின்றன என்ற அவரின் கூற்றுகள் சரியானவை. அதன் பின்னர் உணவுப் பாதுகாப்பு மட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களை மேலதிகக் குறிப்புகளில் பார்க்கவும்.

ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: இலங்கையின் வறுமை விகிதங்கள் 2019 – 2022

மூலம்: உலக வங்கி இலங்கை அபிவிருத்தி தொடர்பான அறிக்கை

 

அட்டவணை 2: இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை ஜுன் – நவம்பர் 2022

 Additional Note

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 2017ம் ஆண்டில் வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் ஒருநாளைக்கு ஐ.அ.டொ 3.65க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமையில் உள்ளதாக உலக வங்கி வகைப்படுத்தியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்ட பொருட்களின் நுகர்வை அடிப்படையாகக் கொண்டு வேறொரு முறையில் வறுமை வீதத்தைக் கணக்கிடுகிறது. 2017ல் உலக வங்கியால் வெளியிடப்பட்ட PPP மாற்றுக் காரணியின் அடிப்படையில் உலக வங்கியின் வறுமைக் கோடு மாதம் ஒன்றுக்கு தனிநபருக்கு ரூ.5,408.21க்குச் சமமாக இருந்தது. ஒக்டோபர் 2022ன் நாணய மாற்று வீதத்திற்கு ஏற்ப சரிசெய்வதுடன், PPP வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அனுமானித்தால், வறுமைக்கோடு ரூ.12,883 ஆகக் காணப்படுகிறது. 2012/13 குடிசன வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட நுகர்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்ட, ஒக்டோபர் 2022ன் விலைகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வறுமைக்கோடு ரூ.13,810 ஆகும். உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பில் கிடைக்கும் சமீபத்திய உலக உணவுத் திட்டத்தின் கணக்கெடுப்புகள் (இந்த சரிபார்ப்பு வெளியிடப்படும் நேரத்தில்) நவம்பர் 2022க்கு உரியவை. இதன் பிரகாரம் உணவுப் பாதுகாப்பின்மை மலையகத்தில் 33.4%, நகரப்புறங்களில் 27.5%, கிராமப்புறங்களில் 38.8% எனக் காணப்படுகிறது. மலையகத்தை விட கிராமப்புறங்களில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே நவம்பர் 2022ல், உணவுப் பாதுகாப்பின்மை வீதம் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்தவில்லை.


மூலம்

இலங்கை அபிவிருத்தி தொடர்பான அறிக்கை – நெருக்கடி நிலையில் ஏழைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாத்தல், மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி மற்றம் உலக வங்கி, ஒக்டோபர் 2022, பார்வையிட: https://thedocs.worldbank.org/en/doc/6c87e47ca3f08a4b13e67f79aec8fa3b-0310062022/original/Sri-Lanka-Development-Update-October-2022-final.pdf [இறுதியாக அணுகியது – ஜனவரி 10, 2023]

இலங்கை உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு உணவுப் பாதுகாப்பு கணக்கெடுப்புச் சுருக்கம் நவம்பர் 2022, உலக உணவுத் திட்டம், பார்வையிட: https://docs.wfp.org/api/documents/WFP-0000145643/download/?_ga=2.23857786.1323882724.1673345503-602456413.1669350556 [இறுதியாக அணுகியது – ஜனவரி 10, 2023]

உணவுப் பாதுகாப்பு குறிகாட்டிகளை அறிக்கையிடுவதில் உலக உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான தொழில்நுட்ப வழிகாட்டி, மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2021, உலக உணவுத் திட்டம், பார்வையிட: https://docs.wfp.org/api/documents/WFP-0000134704/download/#:~:text=The%20CARI%20assesses%20availability%20and,vulnerability%20and%20livelihood%20coping%20strategies [இறுதியாக அணுகியது – ஜனவரி 10, 2023]

விசேட அறிக்கை: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான FAO/WFP பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி (CFSAM) (செப்டம்பர் 2022), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் மற்றும் உலக உணவுத் திட்டம், பார்வையிட: https://reliefweb.int/report/sri-lanka/special-report-faowfp-crop-and-food-security-assessment-mission-cfsam-democratic-socialist-republic-sri-lanka-september-2022 [இறுதியாக அணுகியது  – ஜனவரி 10, 2023]

PPP மாற்று காரணி, – GDP (LCU per international $) இலங்கை, பார்வையிட: https://data.worldbank.org/indicator/PA.NUS.PPP?locations=LK [இறுதியாக அணுகியது -ஜனவரி 10, 2023]

மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், பார்வையிட: http://www.statistics.gov.lk/povertyLine/2022_new [இறுதியாக அணுகியது – ஜனவரி 10, 2023]

மாதாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், இலங்கை மத்திய வங்கி, ஒக்டோபர் 2022, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mei/MEI_202210_e.pdf[இறுதியாக அணுகியது  – ஜனவரி 10, 2023]

Special Report: FAO/WFP Crop and Food Security Assessment Mission (CFSAM) to the Democratic Socialist Republic of Sri Lanka (September 2022), Food and Agriculture Organization of the United Nations and World Food Programme, Available at; https://reliefweb.int/report/sri-lanka/special-report-faowfp-crop-and-food-security-assessment-mission-cfsam-democratic-socialist-republic-sri-lanka-september-2022 [Last accessed 10 January 2023]   

PPP conversion factor, GDP (LCU per international $) – Sri Lanka, Available at; https://data.worldbank.org/indicator/PA.NUS.PPP?locations=LK [Last accessed 10 January 2023]   

Official poverty line by District, Department of Census and Statistics, Available at; http://www.statistics.gov.lk/povertyLine/2022_new[Last accessed 10 January 2023]   

Monthly Economic Indicators, Central Bank of Sri Lanka, October 2022, Available at; https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mei/MEI_202210_e.pdf[Last accessed 10 January 2023]   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன