உண்மைச் சரிபார்ப்புகளும்
(i) இந்த நாட்டில் தீவிர வறுமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தைத் தாண்டியுள்ளது (ii) வறுமை மட்டத்தில் நாடு மிகவும் கீழ்மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம் மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வறுமை குறிகாட்டிகளை FactCheck.lk ஆராய்ந்தது.
கூற்று 1: 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வறுமை விகிதம் 24.5% என்ற மதிப்பீட்டை உலக வங்கி வெளியிட்டிருந்தது. தேசிய வறுமை விகிதமானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட சமீபத்திய ஆண்டான 2019 ஆம் ஆண்டில், உலக வங்கியின் மதிப்பீட்டை விட 1.27 மடங்கு அதிகமாக இருந்ததை அட்டவணை 1 காட்டுகின்றது. உலக வங்கியின் சமீபத்திய வறுமை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளுடன் 1.27 என்னும் பெறுமதியைப் பயன்படுத்தும்போது, பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று, தேசிய வறுமை விகிதம் 25 சதவீதத்தை விட “அதிகமாக” உள்ளது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்).
கூற்று 2: “வறுமையில் மிகவும் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது” என்பதை நாங்கள்: (அ) இலங்கையின் தற்போதைய வறுமை விகிதம் வரலாற்றில் மிக அதிகமாக உள்ளது (கடந்த 25 ஆண்டுகளை நாங்கள் ஆராய்ந்தோம்); மற்றும்/அல்லது (ஆ) இலங்கை அதன் வறுமை மட்டத்தை நிர்வகிப்பதில் உலகளவில் தற்போது கீழ்மட்டத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என விளங்கிக் கொள்கின்றோம்.
வரலாற்றில், 2002-2025 இடைப்பட்ட காலப்பகுதியில் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் வறுமை விகிதங்கள் இரண்டாவது மற்றும் நான்காவது அதி உயர் விகிதமாக உள்ளன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). இது இலங்கையின் வரலாற்றில் நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து தற்போதைய காலப்பகுதியை மிகவும் கீழ் மட்டத்தில் வைக்கின்றது.
நாடுகளுக்கு இடையிலான ஒப்பீடு: குறைந்த நடுத்தர வருமான நாடுகளுக்கான (LMIC) வறுமைக் கோடான ஐ.அ.டொ 3.65 (2017 PPP) பயன்படுத்தும்போது, 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மதிப்பிடப்பட்ட வறுமை விகிதம் கீழேயுள்ள 25 சதவீதத்திற்கு அருகில் உள்ளது (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்). குறிப்பாக, இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வறுமை விகிதம், கிடைக்கும் சமீபத்திய வறுமை விகிதங்களின் அடிப்படையில், 121 நாடுகளில் 90 ஆவது இடத்தில் உள்ளது. நாடுகளை நான்கு சமமான பிரிவுகளாகப் பிரித்தால், இது கீழுள்ள நான்கில் ஒரு பங்கில் இலங்கையை இடம்பெறச்செய்கின்றது (100க்கு 25.6).
மொத்தத்தில், கிடைக்கும் தரவுகள் மற்றும் தேசிய வறுமை விகிதத்தின் நியாயமான மதிப்பீட்டைப் பயன்படுத்தும்போது, இலங்கையின் வறுமை விகிதம் 2022 ஆம் ஆண்டு முதல் 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதுடன் 2023 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியுள்ளது. இது இலங்கையின் சொந்த வரலாற்றிலும், ஏனைய நாடுகளின் மிகச் சமீபத்திய வறுமை விகிதங்களுடன் ஒப்பிடும்போதும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்துகின்றது. இது “வறுமை நிலையில் இலங்கை கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது” என்ற கூற்றை நியாயப்படுத்துகின்றது.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
மேலதிகக் குறிப்பு 1: முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 10,062 மாதிரிகளைக் கொண்டு LIRNEasia முன்னெடுத்த சமீபத்திய கணக்கெடுப்பில், 2023 ஆம் ஆண்டில் 31 சதவீதமான இலங்கையர்கள் டிசம்பர் 2022 வறுமைக்கோட்டிற்கு (மாதம் ஒன்றுக்கு ரூ.13,777) கீழே வாழ்வதாகக் கண்டறியப்பட்டது.
உலக வங்கியின் மதிப்பீட்டைக் கடந்த கால சராசரி இடைவெளியினால் (1.17) பெருக்கும்போது கிடைக்கும் 31.7% மற்றும் 2019 இடைவெளியினால் பெருக்கும்போது கிடைக்கும் 34.3% ஆகியவற்றுடன் இந்தப் பெறுமதி (31%) பொருந்துகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 25 சதவீதத்தை விட அதிகம் என்ற கூற்றை இது மேலும் வலுப்படுத்துகின்றது.
அட்டவணை 1: இலங்கையின் தேசிய மற்றும் உலக வங்கி ($3.65) வறுமை விகிதங்கள், 2002-2025

*மதிப்பீடு
**கணிப்பு
மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்: வறுமை குறிகாட்டிகள் 2019 https://www.statistics.gov.lk/Poverty/StaticalInformation/PovertyIndicators-2019
இலங்கையின் அபிவிருத்தி புதுப்பிப்பு (ஏப்ரல் 2025): https://documents1.worldbank.org/curated/en/099416504222514112/pdf/IDU-5b9c001a-8831-43a2-92e7-71fbee0f642e.pdf
அட்டவணை 2: தற்போதைய மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் கடந்த கால வறுமை விகிதங்கள்

*மதிப்பீடு
**கணிப்பு
மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்: வறுமை குறிகாட்டிகள் 2019https://www.statistics.gov.lk/Poverty/StaticalInformation/PovertyIndicators-2019
இலங்கையின் அபிவிருத்தி புதுப்பிப்பு (ஏப்ரல் 2025): https://documents1.worldbank.org/curated/en/099416504222514112/pdf/IDU-5b9c001a-8831-43a2-92e7-71fbee0f642e.pdf
அட்டவணை 3: 2019 ஆம் ஆண்டு முதல் ஏனைய நாடுகளின் சமீபத்திய வறுமை விகிதங்களுடன் ஒப்பிட்டு தரவரிசைப்படுத்தப்பட்ட இலங்கையின் 2024 ஆண்டிற்கான வறுமை விகிதம்

குறிப்புகள்: வறுமை விகிதங்கள் இறங்கு வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வறுமை விகிதம் அதிகமாக இருந்தால், தரவரிசை குறைவாக இருக்கும்.
வறுமை விகிதத்தைத் தீர்மானிக்கும் தேசிய கணக்கெடுப்புகள் வருமானம் அல்லது நுகர்வை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகின்றன. இலங்கையின் வறுமை விகிதம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டது. வருமானம் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட நாடுகளுடன் இலங்கையை ஒப்பிடுவதற்காக, நுகர்வை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட வறுமை விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்
வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம் | உலக வங்கி (https://pip.worldbank.org/country-profiles/LKA)
இலங்கையின் அபிவிருத்தி புதுப்பிப்பு (ஏப்ரல் 2025): https://documents1.worldbank.org/curated/en/099416504222514112/pdf/IDU-5b9c001a-8831-43a2-92e7-71fbee0f642e.pdf
வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம் செயல்முறை கையேடு | உலக வங்கி(https://datanalytics.worldbank.org/PIP-Methodology/welfareaggregate.html#incomeorconsumption