அநுர குமார திஸாநாயக்க

தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.

லங்காதீப | மார்ச் 7, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் (அ) 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்தன (ஆ) ஜுன் 2021 முதல் அவை வீழ்ச்சியடையத் தொடங்கின (இ) ஜனவரி 2021ன் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ஜனவரி 2022ல் பணவனுப்பல்கள் 62 சதவீதத்தால் குறைந்துள்ளன எனக் குறிப்பிடுகிறார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள் மற்றும் பொருளாதாரக் குறிகாட்டிகளின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தயாராகும் வரை, டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022க்குக் கிடைக்கப்பெற்ற பெறுமதிகள் தற்காலிகமானவை ஆகும்.

முதலாவது கூற்றைப் பொறுத்தவரையில், 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ன் முதல் ஐந்து மாதங்களில் பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 439 மில்லியனால் அதிகரித்திருப்பதை அட்டவணை 1 காட்டுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது.

இரண்டாவது கூற்றைப் பொறுத்தவரையில், பணவனுப்பல்களின் ஆண்டு தோறுமான ஒப்பீடுகளை அட்டவணை 1 காட்டுகிறது: பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று ஜுன் 2021ல் (-16.4%) வீழ்ச்சி காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து வரும் மாதங்களிலும் 2020ம் ஆண்டை விடக் குறைவாகவே உள்ளன.

மூன்றாவது கூற்றைப் பொறுத்தவரையில், ஜனவரி 2022ல் பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 259.20 மில்லியனாகக் காணப்படுகிறது. ஜனவரி 2021ல் பதிவான ஐ.அ.டொ 675.34 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 61.6% வீழ்ச்சி ஆகும்.

பணவனுப்பல்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் தொடர்பான தரவு பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்திப்போவதை மேலேயுள்ள ஆய்வு காட்டுகிறது. எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 2020 முதல் 2021 வரையான தொழிலாளர் பணவனுப்பல்களின் ஆண்டு தோறுமான ஒப்பீடு (ஐ.அ.டொ மில்லியன்)

வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், இலங்கை மத்திய வங்கி



மூலம்

தொழிலாளர் பணவனுப்பல்கள் (2009 ஜனவரி முதல் சமீபத்தியது வரை) வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், இலங்கை மத்திய வங்கி, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector [இறுதியாக அணுகியது 25 மார்ச் 2022]

மாதாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், ஜனவரி 2022, இலங்கை மத்திய வங்கி, பார்வையிட:https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mei/MEI_202201_e.pdf [இறுதியாக அணுகியது 25 மார்ச் 2022]

வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், மார்ச் 18, 2022, இலங்கை மத்திய வங்கி, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20220318_e.pdf [இறுதியாக அணுகியது 25 மார்ச் 2022]