ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் மத்திய வங்கியின் பாரபட்ச செயல்பாடு குறித்து பா.உ கம்மன்பில குறிப்பிடுகிறார்
பொது மக்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்துடன் மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு தனியான சேமலாப நிதியம் ஒன்றையும் பராமரிக்கிறது […]
உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | ஜூலை 4, 2023
Posted on: 17 ஆகஸ்ட், 2023

True
அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”
டெய்லி FT | ஏப்ரல் 20, 2023
Posted on: 25 மே, 2023

True
பணவனுப்பல்களின் அதிகரிப்பு குறித்து அமைச்சர் நாணாயக்கார சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மார்ச் 2022ல் ஐ.அ.டொ 318.4 மில்லியனில் இருந்து மார்ச் 2023ல் ஐ.அ.டொ 568.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022ல் பதிவான உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் இது 78.5% (ஐ.அ.டொ 249.9 மில்லியன்) அதிகரிப்பாகும்.
மனுஷ நாணாயக்காரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஏப்ரல் 6, 2023
Posted on: 11 மே, 2023

True
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: 4 மே, 2023

False
பணம் அச்சிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் அச்சிடப்பட்ட மொத்த தளப் பணம் ரூ.344 பில்லியன் ஆகும். அதேவேளை 2022ல் விநியோகிக்கப்பட்ட தேறிய அடிப்படை ஒதுக்கு பணம் ரூ.40 பில்லியனுக்கும் குறைவாகும்.
டெய்லி FT | பிப்ரவரி 11, 2023
Posted on: 27 ஏப்ரல், 2023

True
அமைச்சர் விஜேசேகர எரிபொருள் விலைச் சூத்திரத்தின் நியாயப்படுத்த முடியாத பதிப்பு மூலம் குறைந்த இலாபம் கிடைப்பதாகக் குறிப்பிடுகிறார்
எரிபொருள் விலை விபரம் – பெப்ரவரி 28 முதல் மார்ச் 28 வரையான கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட உண்மையான செலவில் இருந்து சூத்திரத்திற்கான தரவு விலை வித்தியாசம் (ஒரு லீற்றருக்கான சூத்திரத்தின் அடிப்படை விலைக்கும் ஒரு லீற்றருக்கான தற்போதைய சில்லறை விலைக்கும் இடையில்) பெற்றோல் – 92 ரூ.1.63…
கஞ்சன விஜேசேகரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மார்ச் 30, 2023
Posted on: 6 ஏப்ரல், 2023

Partly True
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: 2 மார்ச், 2023

Partly True
இறக்குமதி தட்டுப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
”...இந்த நடவடிக்கையை எடுத்ததால் தான் (குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி தடை) அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்து, உரம் ஆகியவற்றை எந்தவித தட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்துகொள்ள முடிகிறது….”
நியூஸ்வயர் | ஜனவரி 26, 2023
Posted on: 23 பிப்ரவரி, 2023

False
பாட்டலி – இலங்கையின் சௌகரியமற்ற சமநிலையைச் சரியாகக் குறிப்பிடுகிறார், எனினும் எரிபொருள் கட்டணச் சேமிப்பைத் தவறாகக் குறிப்பிடுகிறார்
”...நாட்டின் தற்போதைய நிலை குறைந்த அளவிலான சமநிலையில் உள்ளது. இது ஒரு சௌகரியமற்ற சமநிலை… எங்களின் சாதாரண (மாதாந்த) எரிபொருள் கட்டணம் ஐ.அ.டொ 550 மில்லியனாக இருந்தது. இது தற்போது ஐ.அ.டொ 200 மில்லியனாகக் குறைந்துள்ளது…”
Daily Mirror | ஜனவரி 12, 2023
Posted on: 13 பிப்ரவரி, 2023

Partly True
மதுபானம் மற்றும் புகையிலை வரிகள் தொடர்பில் பா.உ சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் மொத்த வரி வருமானத்தில் 19% புகையிலை மற்றும் மதுபானம் மூலம் பெறப்பட்டுள்ளது.
டெய்லி நியூஸ் | செப்டம்பர் 21, 2022
Posted on: 20 அக்டோபர், 2022

True
வரி வருமானம் தொடர்பில் அமைச்சர் குணவர்தன குறிப்பிடுகிறார்
கடந்த ஆண்டு (2021) அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியன். இந்தத் தொகையில் ரூ.1,115 பில்லியன் அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ரூ.153 பில்லியன் மட்டுமே வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மீதமிருந
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஃபேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 23, 2022
Posted on: 6 அக்டோபர், 2022

Partly True
ஏற்றுமதி குறைந்துள்ளது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2001ல் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி மூலமான வருமானம் 33 சதவீதமாகக் காணப்பட்டது. தற்போது இது 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
அணுகுவதற்கு | செப்டம்பர் 13, 2022
Posted on: 30 செப்டம்பர், 2022

True
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு கடினமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்
2025ம் ஆண்டுக்குள் ஆரம்ப கணக்கு மீதியை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கியுள்ளது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் (-6%) வீழ்ச்சியடைந்தது.
டெய்லி FT | செப்டம்பர் 5, 2022
Posted on: 22 செப்டம்பர், 2022

True
பெற்றோல் விலையைக் குறைப்பதற்கான சாத்தியத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்
நேற்றிரவு பெற்றோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 150 ரூபாவால் குறைக்க முடியும் என நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியிருந்தேன்.
PUCSL Press Release | ஜூலை 18, 2022
Posted on: 4 ஆகஸ்ட், 2022

True