விமல் வீரவன்ச

சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்

"

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மொத்த ஏற்றுமதி வருமானம் 10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார உத்தி பயனற்றது என பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2022ம் ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் (உண்மையான மதிப்பில்) 10 சதவீதத்தால் (சரியாகக் குறிப்பிட வேண்டுமானால் 10.7%) குறைவடைந்துள்ளது என்பதை அமைச்சர் சரியாகக் குறிப்பிடுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் பொருளாதாரத்திற்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என்பதை ஏற்றுமதி வருமானம் குறைவடைந்ததன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் குற்றச்சாட்டு மூன்று காரணங்களால் தவறாகும்.

முதலாவது, IMF திட்டத்தின் பயனை மதிப்பிடுவதற்கு ஏற்றுமதி வருமானத்தின் வளர்ச்சியை அளவுகோலாகப் பயன்படுத்துவது அசாதாரணமானது என்பதுடன் தன்னிச்சையானது. பணவீக்கம், வட்டி வீதங்கள், நிதிப் பற்றாக்குறை, ஒதுக்குகள் போன்ற பேரண்ட ஸ்திரத்தன்மை மாறிகளில் ஏற்படும் மேம்பாடே இவ்வாறான திட்டங்களை மதிப்பிடுவதற்குச் சரியான அளவுகோலாக இருக்கும். இவை அனைத்தும் 2023 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் (பா.உ குறிப்பிடும் காலப்பகுதி) வளர்ச்சியடைந்துள்ளன.

இரண்டாவது, குறிப்பிடப்பட்ட காரணத்திலும் அதன் விளைவுகளில் கால வித்தியாசம் உள்ளது. IMF திட்டம் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. செப்டெம்பர் 2022ல் அலுவலர் மட்ட ஒப்பந்தமும் மார்ச் 2023ல் சபை மட்ட ஒப்புதலும் கிடைத்தன. ஏப்ரல் மாத இறுதியில், ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தின் செயற்பாடுகளில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன (IMF கண்காணிப்பானைப் பார்க்கவும் – https://manthri.lk/en/imf_tracker). இந்தத் திட்டம் பெப்ரவரி 2017 வரை நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் திட்டமாகும். எனினும் 2023 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஏற்றுமதி வருமானம் குறைந்ததை அடிப்படையாகக் கொண்டு திட்டத்தின் செயல்திறனை பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிடுகிறார்.

மூன்றாவது, இலங்கையின் ஏற்றுமதி செயல்திறனை ஏற்றுமதிகளின் அளவைக் கொண்டு மதிப்பிடலாம். அதேசமயம் வருமானம் என்பது அளவு மற்றும் விலை ஆகிய இரண்டின் செயல்பாடாகும். 2010ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மத்திய வங்கி ஏற்றுமதிகளுக்கான மாதாந்த தொகுதிக் குறியீட்டை வெளியிடுகிறது. 2022ம் ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டின் அதேகாலப்பகுதியில் இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு உண்மையில் 6.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது. மேலும் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி உற்பத்தியில் அன்றி விலையில் ஏற்பட்ட சரிவைக் காட்டுகிறது. ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் IMF திட்டத்தின் கீழ் பின்பற்றப்படும் கொள்கைகள் திறனற்றவை என்பதற்கு அவர் குறிப்பிடும் காரணங்கள் தவறானவை. ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: பிராந்திய மற்றும் உலக ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம்



மூலம்

இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள்: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector [இறுதியாக அணுகியது 3 மே 2023]

IMF பேரண்டப் பொருளாதாரக் கொள்கை மற்றும் வறுமைக் குறைப்பு: https://www.imf.org/external/pubs/ft/exrp/macropol/eng/  [இறுதியாக அணுகியது 3 மே 2023]

WTO புள்ளிவிபரங்கள்: https://stats.wto.org/ [இறுதியாக அணுகியது 3 மே 2023]

UNCTAD உலகளாவிய வர்த்தகப் புதுப்பிப்பு மார்ச் 2023: https://unctad.org/publication/global-trade-update-march-2023  [இறுதியாக அணுகியது 3 மே 2023]

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது