பந்துல குணவர்த்தன

வரி வருமானம் தொடர்பில் அமைச்சர் குணவர்தன குறிப்பிடுகிறார்

"

கடந்த ஆண்டு (2021) அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியன். இந்தத் தொகையில் ரூ.1,115 பில்லியன் அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ரூ.153 பில்லியன் மட்டுமே வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மீதமிருந

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஃபேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 23, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

அரசாங்கத்தின் வரி வருமானங்களில் அதிக தொகை அரச துறையின் சம்பளங்களுக்கும் ஓய்வூதியங்களுக்கும் செலவிடப்படுவதுடன் சிறிய தொகை மட்டுமே பிற தேவைகளுக்காகச் செலவிடப்படுவதாக அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.

2021ம் ஆண்டில் ரூ.1,298 பில்லியன் வரி வருமானமாகச் சேகரிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது. இந்தப் பெறுமதியையே அமைச்சரும் குறிப்பிடுகிறார். 2021ம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக ரூ.1,116 பில்லியன் மொத்தமாகச் செலவிடப்பட்டுள்ளது. இதுவும் அமைச்சர் குறிப்பிட்ட பெறுமதியுடன் பொருந்துகிறது. எனவே சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மொத்தச் செலவு அரச வரி வருமானத்தின் சுமார் 86% ஆகும்.

எனவே பிற முயற்சிகளுக்குச் செலவிட எஞ்சியுள்ள தொகை ரூ.182 பில்லியன் ஆகும்.  அமைச்சர் குறிப்பிடுவது போன்று ரூ.153 பில்லியன் அல்ல (அமைச்சர் குறிப்பிடும் தொகையை விட 19% அதிகம் ஆகும்).

எனினும் வரி வருமானத்திற்கும் சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்கான செலவினத்திற்கும் இடையிலான தொகை மட்டுமே அரசாங்கம் செலவு செய்வதற்கு எஞ்சியிருக்கவில்லை.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் லாபங்கள், சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்ற வரியல்லாத மூலங்களிலிருந்தும் அரசாங்கம் ரூ.159 பில்லியனை வருமானமாக ஈட்டியுள்ளது. எனவே 2021ம் ஆண்டில் மொத்த அரச வருமானத்தில் ரூ.341 பில்லியன் மீதமிருக்கிறது. இது அமைச்சர் குறிப்பிடும் ரூ.153 பில்லியன் எனும் தொகையை விட 123% அதிகம் ஆகும்.

2021ல் சேகரிக்கப்பட்ட வரி வருமானம், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவினம் ஆகியவை குறித்து அமைச்சர் சரியாகக் குறிப்பிட்டுள்ளபோதும் ஏனைய செலவுகளுக்காக எஞ்சியுள்ள மொத்த அரச வருமானத்தை அவர் குறைத்துக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அமைச்சரின் கூற்றை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.மூலம்

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2021, அணுகுவதற்கு:
https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [இறுதியாக அணுகியது: 06 அக்டோபர் 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன