ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.
ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023
Posted on: 7 டிசம்பர், 2023
False
பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023
True
வரி இலக்குகள் தொடர்பில் பா.உ கொடஹேவா தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் ரூ.3,130 பில்லியன் ஆகும் (2022 ஆம் ஆண்டிலிருந்து 70% அதிகரிப்பு). இது நடைமுறையில் சாத்தியமற்றது. வரி தளம் சரியாகச் செயற்படாததால், 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்தியவர்களே இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டியேற்படும்.
அருண | அக்டோபர் 9, 2023
Posted on: 26 அக்டோபர், 2023
False
தொழில்துறை தொடர்பில் சரியாகக் குறிப்பிடும் பா.உ பெரேரா ஏற்றுமதிகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
…ஏற்றுமதிகள் 19.5 சதவீதத்தால் குறைந்துள்ளன. […] 2023 முதல் காலாண்டில் தொழில்துறை 23.4 சதவீதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்ற யூடியூப் பக்கம் | ஆகஸ்ட் 23, 2023
Posted on: 20 அக்டோபர், 2023
Partly True
பணவனுப்பல்கள் குறைவடைந்தமை தொடர்பில் பா.உ விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார், ஆனால் சமீபத்திய தகவல்களைக் குறிப்பிடவில்லை
நாங்கள் பணவனுப்பல்களைப் பார்த்தோமானால் அதிக பெறுமதியிலான பணவனுப்பல்கள் 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, 2020 மற்றும் அதற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்கள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. பணவனுப்பல்கள் சுமார் ஐ.அ.டொ 7.2 பில்லியனாக உச்சத்தில் இருந்தது. [..] (தொ))
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | செப்டம்பர் 28, 2023
Posted on: 12 அக்டோபர், 2023
Partly True
வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.
லங்காதீப | அக்டோபர் 12, 2020
Posted on: 26 நவம்பர், 2020
True
கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்
“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...
2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020
Posted on: 19 நவம்பர், 2020
False
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 மற்றும் 8 வீதத்திற்கு இடையில் காணப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 2 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஜூன் 16, 2020
Posted on: 7 ஜூலை, 2020
Partly True
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வருமான வளர்ச்சியினை பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்துகின்றார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, அரச வருமானம் 1.05 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டது. எமது அரசாங்கம் 5 ஆண்டுகளில் இந்த வருமானத்தை 2.1 ட்ரில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்கியது.
லங்காதீப | பிப்ரவரி 6, 2020
Posted on: 29 ஏப்ரல், 2020
Partly True
கடந்த கால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல: சரியானது ஆனாலும் தவறாக வழி நடத்தும்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொறுப்பினை கையேற்றுக் கொண்ட போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்
தினமின | டிசம்பர் 4, 2019
Posted on: 15 ஜனவரி, 2020
True
2011 ஆம் ஆண்டில் அவரது அமைச்சினால் வெளியிடப்பட்ட கிழக்கு – மேற்கு பொருளாதாரப் பாதைக்கான திட்டத்திற்கு, அமெரிக்கா/ மிலேனியம் சவால் அமைப்பின் மீது பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச பொய்க்காரணம் காட்டுகின்றார்.
கடந்த வாரம், (அமெரிக்கா) மிலேனியம் சவால் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது. கைச்சாத்திடப்பட்டதும், திருகோணமலை முதல் கொழும்பு துறைமுகம் வரை விசேட பொருளாதார பாதை அமைக்கப்படும்.
அத | நவம்பர் 7, 2019
Posted on: 13 நவம்பர், 2019
False
வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச காலாவதியான புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானத்தில் 54 சதவீதத்தை 20 சதவீத செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, மிக வறுமையில் உள்ள 20 வீதமானவர்கள் வெறுமனே 4 சதவீதத்தை மாத்திரமே அனுபவிக்கின்றனர்.
லங்காதீப | ஜூலை 9, 2020
Posted on: 3 அக்டோபர், 2019
False
அமைச்சர் எரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் கடன் தொடர்பில் குறிப்பிட்டது இரண்டு வருடங்களுக்கு சரியானது என்ற போதும், நான்கு வருடங்களுக்கு அல்ல.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்களும், கடன்களை மீளச்செலுத்துவதற்காக மாத்திரமே முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
டெய்லி FT | ஜூன் 19, 2019
Posted on: 22 ஆகஸ்ட், 2019
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் குறித்து தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.1920 பில்லியன், வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.2088 பில்லியன். இது வருமானத்தை விட ரூ.168 பில்லியன் அதிகமாகும்.
திவயின | மே 28, 2019
Posted on: 10 ஜூலை, 2019
False