அநுர குமார திசாநாயக்க

ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்

"

2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.

ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2015 – 2019 வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடன் அதிகரித்துள்ளதாக பொது நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க கூறியுள்ளார். அவரது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், 2015 – 2020 இல் கடன் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்து ரூ.15 ட்ரில்லியனை (76.5% அதிகரிப்பு) எட்டியதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது. பாராளுமன்ற உறுப்பினர் மொத்த பொதுத்துறை கடனைக் குறிப்பிடாமல் (அதிகரிப்பு ஓரளவு குறைவாக உள்ளது) மத்திய அரசாங்கத்தின் கடனை மட்டும் குறிப்பிடுவதாக அவர் குறிப்பிடும் பெறுமதிகள் மற்றும் கணக்கீடுகளைக் கொண்டு FactCheck.lk புரிந்துகொள்கிறது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கடன் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது என்பதே பாராளுமன்ற உறுப்பினரின் முக்கிய வாதமாக உள்ளது. இது மூன்று காரணங்களால் தவறானதாகவும் தவறாக வழிநடத்தப்படக்கூடியதுமாக உள்ளது.

முதலாவதாக, கவனத்தில் கொள்ளும் ஆண்டுகளை பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் கணக்கில் கொண்டதால் அதன் மூலம் கிடைத்த பெறுமதிகளும் தவறாக உள்ளன. அவர் 2015 இறுதி முதல் 2020 இறுதி வரையான ஆண்டுகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் விக்ரமசிங்க பிரதமராக இருந்தது 2014 இறுதி முதல் 2019 இறுதி வரை ஆகும். இந்தக் காலப்பகுதியில் கடன் ரூ.5.5 ட்ரில்லியனால் அதிகரித்து மொத்தம் ரூ.13 ட்ரில்லியனாக இருந்தது.

இரண்டாவதாக, “புதிதாகப் பெறப்பட்ட நிகர கடனுக்கும்” நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் ஏற்கனவே பெறப்பட்ட வெளிநாட்டுக் கடனின் ரூபாய் மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. புதிதாகப் பெறப்பட்ட கடனாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது இந்த இரண்டு விடயங்களையும் தவறாக உள்ளடக்கியுள்ளது.

2014 முதல் 2019 வரை “புதிதாகப் பெறப்பட்ட நிகர கடன்களில்” ஏற்பட்ட அதிகரிப்பு 42.8% என்பதை வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையொன்று காட்டுகிறது. மத்திய அரசாங்கத்தின் கடனுக்கும் அதே முடிவே கிடைத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் 76.5% அதிகரிப்பு எனக் குறிப்பிடுவது பின்வரும் காரணங்களால் தவறாகும். (1) அது தவறான ஆண்டுகளைக் கவனத்தில் கொள்கிறது (2) இதில் புதிதாகப் பெறப்பட்ட கடன்கள் மாத்திரமன்றி ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் ஏற்கனவேயுள்ள கடனின் மறுமதிப்பீடும் அடங்கியுள்ளது.

மூன்றாவதாக, ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் (பாராளுமன்ற உறுப்பினர் கணக்கிட்டது போன்று) 2014 – 2019 வரையிலான கடனின் ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பும் கூட (சரியான ஆண்டுகளில் கணக்கிடப்பட்டது) பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ஆதரிக்கவில்லை. அதில் ஏற்பட்ட அதிகரிப்பு 74.1%. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று இது விதிவிலக்கான அதிகரிப்பு அல்ல. உண்மையில் 1950 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலப்பகுதியில் கடனின் ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பில் இது மிகவும் குறைந்த ஒன்றாகும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று பின்வரும் மூன்று விடயங்களில் தவறாக உள்ளது: கவனத்தில் கொள்ளப்பட்ட காலப்பகுதி, புதிதாகப் பெறப்பட்ட கடன்களின் மதிப்பீடு, 2014 – 2019 வரையில் கடனின் ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பை அசாதாரண அதிகரிப்பு எனக் குறிப்பிடுவது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையைத் தவறானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு: 2014 – 2019 இல் கடனில் ஏற்பட்ட 74.1% அதிகரிப்பு 11.7% வருடாந்த கூட்டு விகிதத்தைப் பிரதிபலிக்கிறது. இது ரூபாய் பெறுமதியில் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப உள்ளது. 2014 – 2019 வரையில் பொதுப் படுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பில் 89.8%, 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட கடனுக்கான வட்டிச் செலவினமாக இருந்தது என ஆய்வு அறிக்கை ஒன்று காட்டுகிறது. கடன் அதிகரிப்பு கணக்கீடுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்குப் பின்வருவனவற்றைப் பார்க்கவும்:

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கடன் அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணங்களைத் தவறாகக் குறிப்பிடுகின்றார், FactCheck.lk. https://factcheck.lk/ta/factcheck/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9/

அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்கு தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார், FactCheck.lk.

https://factcheck.lk/ta/factcheck/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/

கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களில் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன சரியாகக் குறிப்பிடுகிறார், FactCheck.lk.

https://factcheck.lk/ta/factcheck/deputy-unp-leader-ruwan-wijewardene-does-no-disservice-to-past-debt-servicing-costs/

அட்டவணை 1: மத்திய அரசாங்கத்தின் கடன், ரூ. ட்ரில்லியன்கள்

அட்டவணை 2: முந்தைய ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடனின் ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு (1955 முதல் 2022)



மூலம்

ஆண்டறிக்கை 2022, இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022

முஸம்மில்.எம், அரங்கல. எம், ராஜகுலேந்தின் ஆர்.பி, மற்றும் டி மெல்.என் (2022). இலங்கையின் கடனில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தெளிவுபடுத்துதல். வெரிட்டே ரிசேர்ச், 10(1), 1-4.  https://www.veriteresearch.org/wp-content/uploads/2022/03/VR_ENG_Insights_Feb2022_Demystifying-the-increase-in-Sri-Lankas-debt.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன