கயந்த கருணாதிலக்க

மாணவர் – ஊழியர் விகிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க தவறாகக் குறிப்பிடுகிறார்

"

(அண்மைக் காலங்களில்) கல்விசார் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துவருகின்ற போதும், 2017 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் வருடாந்தச் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது.

நியூஸ் பெர்ஸ்ட் | அக்டோபர் 19, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உரையொன்றில் அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் பா.உ கருணாதிலக்க இரண்டு கூற்றுக்களை முன்வைத்துள்ளார்:  (1) பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் குறைவடைந்து வருகின்றனர் (2) 2017 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் வருடாந்தச் சேர்க்கை (அனுமதி) இரட்டிப்பாகியுள்ளது. இந்த இரண்டு கூற்றுகளும் சரியாக இருந்தால், அனுமதிக்கப்படும் மாணவர் ஒருவருக்கான ஊழியரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதாவது மாணவர் – ஊழியர் விகிதம் 2017 ஆம் ஆண்டு முதல் இரட்டிப்பாகியிருக்கும்.

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இல. பல்கலைக்கழகங்கள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட இலங்கை மானியங்கள் ஆணைக்குழு (UGC) வழங்கிய 2012 முதல் 2022 வரை கிடைக்கும் சமீபத்திய தகவல்களான இலங்கை பல்கலைக்கழகப் புள்ளிவிபர (SLUS) அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.

2023 ஆம் வரை, இலங்கை மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இலங்கையில் மொத்தம் 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட புதிய இரண்டு பல்கலைக்கழகங்களும் (கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ கற்கை நிலையம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம்) இதில் அடங்கும். திறந்த பல்கலைக்கழகம் தவிர்த்து, ஏனைய 16 பல்கலைக்கழகங்களும் கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை வழங்கின. அந்தத் தரவைப் பயன்படுத்தியே இந்தப் பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).

கூற்று 1: 2017 – 2022 வரையான ஐந்தாண்டுகளில் கல்விசார் ஊழியர்களில் 21% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 9,356 ஆகும். ஆகவே கல்விசார் ஊழியர்களின் எண்ணிக்கை “குறைந்துள்ளது” என்பது தவறாகும். உண்மையில் 2012 – 2022 வரையான பத்தாண்டுகளில் கல்விசார் ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது – 101 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கூற்று 2: 2017 – 2022 வரையான ஐந்தாண்டுகளில் பல்கலைக்கழங்களில் மாணவர்களின் வருடாந்த உட்சேர்க்கையில் 43% அதிகரிப்பு காணப்படுகிறது. மொத்தம் 42,519 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது என்பதும் தவறாகும். 2012 – 2022 வரையான பத்தாண்டுகளிலும் மாணவர் உட்சேர்க்கை இரட்டிப்பாகவில்லை – 52 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது. கல்விசார் ஊழியர்களில் ஏற்பட்ட சதவீத அதிகரிப்பை விட இது மிகவும் குறைவாகும்.

மாணவர் உட்சேர்க்கை – ஊழியர் விகிதம் 2022 ஆம் ஆண்டில் 4.54 ஆகும். இது சராசரிக்கு அருகில் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று 2017 ஆம் ஆண்டு முதல் மாணவர் உட்சேர்க்கை – ஊழியர் விகிதம் இரட்டிப்பாகவில்லை என அட்டவணை 1 காட்டுகிறது. இது 18 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது.

2017 (5 ஆண்டுகள்) முதல் மாணவர் உட்சேர்க்கை இரட்டிப்பாகவில்லை, அத்துடன் 2012 (10 ஆண்டுகள்) முதல் 50 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது. கல்விசார் ஊழியர்களின் எண்ணிக்கை குறையவில்லை, மாறாக 2017 ஆம் ஆண்டு முதல் 21 சதவீதத்தாலும் 2012 ஆம் ஆண்டு முதல் இரட்டிப்பாகவும் அதிகரித்துள்ளது. இவை பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் தவறானவை என்பதைக் காட்டுகின்றன.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: மாணவர் உட்சேர்க்கை மற்றும் கல்விசார் ஊழியர்கள்

மூலம்: இலங்கை பல்கலைக்கழகப் புள்ளிவிபரங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

 



மூலம்

இலங்கை பல்கலைக்கழகப் புள்ளிவிபரங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,  https://www.ugc.ac.lk/index.php?searchword=Sri+Lanka+university+Statistics&ordering=&searchphrase=all&Itemid=1&option=com_search&lang=en

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இல. பல்கலைக்கழகங்கள் சட்டம், https://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=article&id=49&Itemid=195&lang=en

இலங்கையின் மூன்றாம் நிலைக் கல்வியில் தனியார் துறையின் பங்களிப்பு: தகவல் மற்றும் தரவு பற்றிய ஆய்வு, வெரிட்டே ரிசர்ச், https://www.veriteresearch.org/wp-content/uploads/2019/12/Private-Sector-Participation-in-Sri-Lankas-Tertiary-Education.pdf

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன