விமல் வீரவன்ச

2011 ஆம் ஆண்டில் அவரது அமைச்சினால் வெளியிடப்பட்ட கிழக்கு – மேற்கு பொருளாதாரப் பாதைக்கான திட்டத்திற்கு, அமெரிக்கா/ மிலேனியம் சவால் அமைப்பின் மீது பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச பொய்க்காரணம் காட்டுகின்றார்.

"

கடந்த வாரம், (அமெரிக்கா) மிலேனியம் சவால் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது. கைச்சாத்திடப்பட்டதும், திருகோணமலை முதல் கொழும்பு துறைமுகம் வரை விசேட பொருளாதார பாதை அமைக்கப்படும்.

அத | நவம்பர் 7, 2019

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

கடந்த வாரம் மேற்கோள் காட்டப்பட்ட இந்தக்கூற்று பாராளுமன்றத்தில் ஜுலை 31 ஆம் திகதி உட்பட பல தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பு (எம்.சி.சி)  திருகோணமலை முதல் கொழும்பு வரை பொருளாதார பாதையை அமைக்க முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை FactCheck பயன்படுத்தியது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட எம்.சி.சி உடன்படிக்கையின் ‘நிறைவேற்று பதிப்பு’, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் 2050 மற்றும் தேசிய பௌதீக திட்டம் 2011 – 2030 அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.டபிள்யூ.ஜே.ஜி மென்டிஸ் அவர்களின் சேகரிக்கப்பட்ட படைப்புக்களும் பயன்படுத்தப்பட்டன.

நாங்கள் எம்.சி.சி  உடன்படிக்கையின் 83 பக்கங்களை படித்த போதும், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று பொருளாதார பாதை அமைப்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தேசிய பௌதீக திட்டம் 2011 – 2030 இல் பொருளாதார பாதையை அமைப்பதற்கான திட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம். இது 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தேசிய பௌதீக  திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் 2050 இலும் இந்த யோசனையானது விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த யோசனையானது 1973 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இணைக்கும் முந்தைய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.

நில முகாமைத்துவத்தின் தொழில்நுட்ப மற்றும் கொள்கை அம்சங்கள் தொடர்பான ஐந்து முயற்சிகளுக்கு அதாவது வரைபடம், பதிவுசெய்தல், மதிப்பீடு செய்தல், நிர்வாகம் மற்றும் நிலம் வழங்குதல் ஆகியவற்றுக்கு  நிதியுதவி அளிப்பது தொடர்பில்  எம்.சி.சி உடன்படிக்கையின் பக்கங்கள் 28 முதல் 34  வரை விளக்கம் அளிக்கின்றன. அந்த உடன்படிக்கையின் 39 ஆவது பக்கத்தில் உள்ள நிதி சுருக்கத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான வரையறுக்கப்பட்ட நிதியுதவி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிதியுதவியும் மத்திய சுற்றுச்சாலை வலையமைப்பின் (கிழக்கு – மேற்கு பாதைக்கானது அல்ல) பாதுகாப்பு மற்றும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றது. இது அந்த உடன்படிக்கையின் பக்கம் 24 இல் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று கிழக்கு – மேற்கு பொருளாதார பாதையை அமைப்பது குறித்து எம்.சி.சி உடன்படிக்கையில் முன்மொழியப்படவில்லை. மேலும் அதன் நிர்மாணப் பணிகளுக்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘பொய்யானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்