ரணில் விக்கிரமசிங்க
வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
எமது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 37 பில்லியன். எனினும் இந்த நபர் (சமூக ஊடகத்தில் பதிவிட்டவர்) தவறான பெறுமதியைக் குறிப்பிடுகிறார்… (அவர்) கடந்த இரண்டாண்டுகளில் நாங்கள் (ஐ.அ.டொ 71 பில்லியனில் இருந்து) (ஐ.அ.டொ) 100 பில்லியன் வரை கடனாகப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். எனினும் கடன்களைத்
பாராளுமன்ற YouTube பக்கம் | ஜூலை 2, 2024
Posted on: 1 ஆகஸ்ட், 2024

Partly True
நடைமுறைக் கணக்கு மிகை தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சரியாகக் குறிப்பிடுகிறார்
“2022 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் நாங்கள் மிகையைப் பதிவுசெய்துள்ளோம். (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | பிப்ரவரி 7, 2024
Posted on: 28 மார்ச், 2024

True
பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023

True
பணவீக்கம் குறைந்துள்ளதை விலைகள் குறைந்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
“70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருகிறது.”
ஜனாதிபதி அலுவலகம் | ஜூன் 1, 2023
Posted on: 13 ஜூலை, 2023

Partly True
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றில் தெளிவில்லை
பற்றாக்குறைக்கு நிதியளிக்கும் திட்டம்: 2023-27 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடன் சேவைக் குறைப்பு, வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், 2022 ல் நிலுவைகள் உட்பட ஐ.அ.டொ 17 பில் கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | ஏப்ரல் 26, 2023
Posted on: 18 மே, 2023

True
பதிவுசெய்யப்பட்ட வரிக் கோப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து ஜனாதிபதி சரியாகக் குறிப்பிடுகிறார்
2019ம் ஆண்டில் மொத்தமாக 1.5 மில்லியன் வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன... அதாவது மொத்தமாக எங்களிடம் 1.6 மில்லியன் வரிக் கோப்புகள் காணப்பட்டன. நாங்கள் உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) இல்லாதொழித்தபோது டிசம்பர் 2021ல் எங்களிடம் 400,000 வருமான வரிக் கோப்புகள் (மட்டுமே) காணப்பட்டன.
President’s Media Division | ஜனவரி 28, 2023
Posted on: 9 மார்ச், 2023

True
ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காணி உரிமை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
“ஏறக்குறைய 80 சதவீதமான காணிகளுக்கு அரசாங்கம் உரிமையாளர் என்ற வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்ககை எடுக்கப்படும்.”
இடைக்கால வரவு செலவுத்திட்ட உரை (2022), | ஆகஸ்ட் 30, 2022
Posted on: 27 அக்டோபர், 2022

True
ஜனாதிபதி விக்கிரமசிங்க: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2020-2021ம் ஆண்டில் மட்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் ரூ.45 பில்லியன். மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்த நட்டம் ரூ.372 பில்லியன்
லங்காதீப | மே 17, 2022
Posted on: 2 செப்டம்பர், 2022

True
அரசாங்கத்தின் செலவினத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க குறைத்துக் குறிப்பிடுகிறார்
முன்னாள் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வருமானம் ரூ.2.3 ட்ரில்லியன் என எதிர்வுகூறப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டுக்கான உண்மையான வருமானம் ரூ.1.6 ட்ரில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் ரூ.3.3 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டெய்லி மிரர் | மே 17, 2022
Posted on: 10 ஆகஸ்ட், 2022

False
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சில சரியான புள்ளிவிபரங்களுடன் தவறாகக் குறிப்பிடுகின்றார்.
நான் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் வருமானம் ரூ.150,000 மில்லியன். கடந்த மாத வருமானம் ரூ.50,000 மில்லியன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.90,000 மில்லியன் தேவைப்படும்.
திவயின | அக்டோபர் 3, 2020
Posted on: 5 நவம்பர், 2020

False
ராஜபக்ஷ ஆட்சிக்கால ஏற்றுமதி தொடர்பில் பிரதமர்: வீழ்ச்சி தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் விபரங்கள் தவறு.
ராஜபக்க்ஷவின் பத்து வருட ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 30 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஆகஸ்ட் 12, 2019
Posted on: 5 செப்டம்பர், 2019

Partly True
பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான உள்ளூர் சட்டம் தொடர்பில் பிரதமர் தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபெறுவது இங்கு குற்றம் அல்ல... அவ்வாறு நீங்கள் ஈடுபவதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை
ஸ்கை நியூஸ் (ஐக்கிய இராச்சியம்) செவ்வி | ஏப்ரல் 26, 2019
Posted on: 7 மே, 2019

False
உலகில் மக்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களின் மெர்ஸர் பட்டியலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியாக குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களில் கொழும்பு தெற்காசியாவில் முதலிடத்தில் இருந்தாலும், 231 நகரங்களில் 137 ஆவது இடத்தில் உள்ளது
டெய்லி நியூஸ் | ஜூலை 10, 2018
Posted on: 19 செப்டம்பர், 2018

True