ரணில் விக்கிரமசிங்க

பணவீக்கம் குறைந்துள்ளதை விலைகள் குறைந்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்

"

“70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருகிறது.”

ஜனாதிபதி அலுவலகம் | ஜூன் 1, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிடும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. 

நுகர்வோர் விலைச் சுட்டெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்ட கூடையில் உள்ளவற்றின் ஒட்டுமொத்த விலையைக் கணக்கிடுகின்றன (மக்கள் தங்கள் செலவினத்தை எவ்வாறு ஒதுக்குகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது). ஆண்டுக்காண்டு (YoY) பணவீக்க புள்ளிவிபர அறிக்கைகள் முந்தைய ஆண்டின் அதே மாதத்திற்குரிய விலைச் சுட்டெண்ணில் (விலை மட்டத்தில்) ஏற்பட்டுள்ள சதவீத மாற்றத்தை ஒப்பிட்டு அறிக்கையிடுகிறது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை விட) ஆண்டுக்காண்டு பணவீக்கத்துடன் ஜனாதிபதி குறிப்பிடும் பணவீக்கம் (70% மற்றும் 25.2%) பொருந்துகிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). CCPI செப்டெம்பர் 2022ல் 69.8 சதவீதத்தை எட்டியதுடன் மே 2023ல் 25.2 சதவீதமாக உள்ளது. 

2022 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மே மாதத்தில் பணவீக்கம் குறைந்ததன் காரணமாகநாளாந்த வாழ்க்கைச் சுமைகுறைந்துள்ளதாக ஜனாதிபதி முடிவுக்கு வருகிறார். எனினும் பொருட்களின் விலைகள் குறைந்தால் மட்டுமே சுமை குறையும். செப்டெம்பர் 2022ல் CCPI 189.3 ஆகக் காணப்பட்டதுடன் மே 2023ல் இது 192.3 ஆக உள்ளது. CCPI ஒட்டுமொத்த விலை மட்டத்தைக் கணக்கிடுவதால் இந்தக் காலப்பகுதியில் விலைகள் (சிறிதளவு) 1.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதை பெறுமதிகள் காட்டுகின்றன. ஜனாதிபதி குறிப்பிடுவது போன்று விலைகள் குறையவில்லை. 

இலங்கையில் ஆண்டுக்காண்டு பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதை ஜனாதிபதி சரியாகக் குறிப்பிடும்போதும், நாளாந்த வாழ்க்கைச் சுமை குறைந்துள்ளதாக (ஒட்டுமொத்த விலைகளின் மட்டம் குறைய வேண்டும்) அவர் குறிப்பிடுவது தவறாகும். 

ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம். 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1:CCPIமற்றும்NCPI (செப்டெம்பர் 2022 – மே 2023)

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் அசைவுகள், அடிப்படை 2013 மற்றும் 2021, தேசிய நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் அசைவுகள், அடிப்படை 2013 மற்றும் 2021



மூலம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், CCPI (அடிப்படை 2021=100), கொழும்பு நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் அசைவுகள், http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், CCPI (அடிப்படை 2013=100), கொழும்பு நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் அசைவுகள், http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், NCPI (அடிப்படை 2021=100), தேசிய நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் அசைவுகள், http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyNCPI 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், NCPI (அடிப்படை 2013=100), தேசிய நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் அசைவுகள், http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyNCPI 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன