பாட்டலி – இலங்கையின் சௌகரியமற்ற சமநிலையைச் சரியாகக் குறிப்பிடுகிறார், எனினும் எரிபொருள் கட்டணச் சேமிப்பைத் தவறாகக் குறிப்பிடுகிறார்
”...நாட்டின் தற்போதைய நிலை குறைந்த அளவிலான சமநிலையில் உள்ளது. இது ஒரு சௌகரியமற்ற சமநிலை… எங்களின் சாதாரண (மாதாந்த) எரிபொருள் கட்டணம் ஐ.அ.டொ 550 மில்லியனாக இருந்தது. இது தற்போது ஐ.அ.டொ 200 மில்லியனாகக் குறைந்துள்ளது…”
Daily Mirror | ஜனவரி 12, 2023
Posted on: 13 பிப்ரவரி, 2023

Partly True
அமைச்சர் விஜேசேகர: ஏற்கனவே மிகைமதிப்பிடப்பட்ட இலங்கை மின்சார சபை நட்டத்தை எதிர்கொண்ட அதி கூடிய நிலைமைகளில் ஒன்றை அமைச்சர் இன்னும் மிகை மதிப்பிடுகிறார்
மழை இல்லை எனும் சூழ்நிலையில் எங்களுக்குத் தேவையான நிலக்கரி அனைத்தையும் ஏப்ரல் மாதத்திற்குள் பெற்றுக்கொள்ள முடிந்தால் 24 மணிநேரமும் எந்தவித தடையும் இன்றி எங்களால் மின்சாரத்தை வழங்க முடியும்… அதாவது ஒட்டுமொத்தமாக எங்கள் உற்பத்திச் செலவு ரூ.889 பில்லியன்.
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 25, 2022
Posted on: 9 பிப்ரவரி, 2023

Partly True
உள்ளுராட்சி தேர்தல்களை நடத்துவதற்கான நிதி தொடர்பான சவால்களை சியம்பலாபிடிய மிகைப்படுத்துகிறார்
2022ம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினத்திற்கு இடையிலான வித்தியாசம் 256% அல்லது ரூ.3,058 பில்லியன் எனும் அதிகூடிய அளவில் காணப்பட்டது. (2023ல்) அரசாங்கம் ரூ.3.45 ட்ரில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது. அதேவேளை செலவினம் ரூ.10 ட்ரில்லியனாக அதிகரிக்கவுள்ளது.
டெய்லி FT | ஜனவரி 21, 2023
Posted on: 2 பிப்ரவரி, 2023

False
வருமான மதிப்பீடு தொடர்பில் பா.உ அபேசிங்ஹ தவறாகக் குறிப்பிடுகிறார்
…இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள (2023) வரவு செலவுத்திட்டத்தில் இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான வருமானத்தில் 70% அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கையில் வருமானம் எப்போதும் 10%, 15% அல்லது 20 சதவீதத்தை விட அதிகரித்ததில்லை…
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 21, 2022
Posted on: 20 ஜனவரி, 2023

False
மலையகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணப்படும் இடைவெளி குறித்து பா.உ மனோ கணேசன் சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நகரப்புறங்களில் 43 சதவீதமாகவும் கிராமங்களில் 34 சதவீதமாகவும் காணப்படும் அதேவேளை, மலையகத்தில் 51% எனும் உயர்மட்டத்தில் உள்ளது. நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் மலையகத்தில் இது 53 சதவீதமாக உள்ளது என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது.
டெய்லி மிரர் | நவம்பர் 21, 2022
Posted on: 12 ஜனவரி, 2023

True
பாராளுமன்ற உறுப்பினர் அலகியவன்ன: 2018 – 2021 காலப்பகுதியில் இலங்கையில் காற்று மாசு குறைந்துள்ளது
காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 2018ம் ஆண்டு ஆசியாவில் 7வது இடத்தில் நாங்கள் இருந்தோம். தற்போது முன்னேறி 12வது இடத்தில் இருக்கிறோம் (ஆசியாவில்). உலகளவில் நாங்கள் 17வது இடத்தில் இருந்தோம் (2018ம் ஆண்டில்). தற்போது இந்த நிரல்படுத்தலில் முன்னேறி உலகளவில் 58வது இடத்தில்...
லங்காதீப | நவம்பர் 29, 2022
Posted on: 15 டிசம்பர், 2022

True
வரி சேகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
2022ம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக ரூ.915 பில்லியனை வரியாகச் சேகரிக்க நாங்கள் இலக்கு வைத்திருந்தோம். இந்த ஆண்டு எதிர்வுகூறப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், செப்டெம்பர் இறுதியில் வருடாந்த இலக்கின் 68.4 சதவீதத்தை நாங்கள் எட்டியுள்ளோம் என்பதை...
டெய்லி மிரர் | நவம்பர் 4, 2022
Posted on: 8 டிசம்பர், 2022

Partly True
நுவரெலியாவின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக அநுர குமார திசாநாயக்க குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் தடுமாற்றம் காணப்படுகிறது
…நீங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டால் பிறப்பு நிறைக்குறைவு 12.2% ஆகும். ஆனால் நுவரெலியா மலையகச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் இது 20% ஆகும். பொதுவாக இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 7.4 சதவீதமான குழந்தைகள் உடற்தேய்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலையகச் சமூகங்களைப் பொறுத்தவரை இது 8.2% ஆகும்.
அநுர குமார திஸாநாயக்க | நவம்பர் 8, 2022
Posted on: 1 டிசம்பர், 2022

Partly True
அமைச்சர் பதிரண ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் குறிப்பிடும் புள்ளிவிபரம் மந்த போஷனைக்கு உரியவை
2009ம் ஆண்டில் 27.4 சதவீதமாகக் காணப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு 2021ம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. எங்கள் சுகாதாரத் துறையின் வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | செப்டம்பர் 7, 2022
Posted on: 24 நவம்பர், 2022

Partly True
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டம் தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஒரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) ஏறத்தாழ 430 உள்ளன. இவற்றில்… 218 நிறுவனங்கள் ஆகும்… இவற்றில் 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்த முக்கிய நிறுவனங்களின் நட்டம் ரூ.286 பில்லியன் ஆகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | அக்டோபர் 12, 2022
Posted on: 11 நவம்பர், 2022

Partly True