பா.உ கம்மன்பில: உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க IMF நிபந்தனை விதிக்கவில்லை, ஆனால் வெளிக்கடன் வழங்குனர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனை விதிக்கவில்லை. …அவ்வாறு இருக்கும் நிலையில், அதனைச் செய்யுமாறு எங்களை மிரட்டியது யார்?
மிரர் நியூஸ் யூடியூப் பக்கம் | ஜூன் 27, 2023
Posted on: 27 ஜூலை, 2023

True
சீன சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அமைச்சர் பெர்னாண்டோவின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது
ஒவ்வொரு சீன சுற்றுலாப் பயணியும் 5,000 ஐ.அ.டொலரைச் செலவு செய்தால் அண்மையில் பெறப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவித்தொகைக்கு சமமான தொகையைப் பெற முடியும்… உண்மையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து சுற்றுலாத் துறையால் மீட்டெடுக்க முடியும்.
themorning.lk | மே 23, 2023
Posted on: 13 ஜூலை, 2023

Partly True
பணவீக்கம் குறைந்துள்ளதை விலைகள் குறைந்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
“70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருகிறது.”
ஜனாதிபதி அலுவலகம் | ஜூன் 1, 2023
Posted on: 13 ஜூலை, 2023

Partly True
இலங்கையில் வறுமை அதிகரித்துள்ளதை பா.உ கபீர் ஹஷீம் சரியாகக் குறிப்பிடுகிறார்
“…2019ல் இந்த நாட்டின் வறுமைக் கோடு 11 சதவீதமாக இருந்தது… 2023ல் இது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை விட அதிகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். ஆனால் உலக வங்கி இதை 25 சதவீதமாகக் கணக்கிட்டுள்ளது. அதாவது இந்த நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில் 5.5 மில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளனர்.”
இலங்கை பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | மே 12, 2023
Posted on: 29 ஜூன், 2023

True
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில பகுதியளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையிலான குறுகிய காலப்பகுதியில்… (மின்) கட்டணம்… ஏழை மக்களுக்கு (30 அலகுகளைப் பயன்படுத்தும் நுகர்வோர்) 1,138 சதவீதமும் செல்வந்தர்களுக்கு (180 அலகுகளைப் பயன்படுத்தும் நபர்) 160 சதவீதமும் அதிகரித்துள்ளது…
உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | மே 27, 2023
Posted on: 27 ஜூன், 2023

Partly True
நிதியியல் உறுதிப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய பகுதியளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
...நாங்கள் நிதியியல் உறுதிப்பாட்டை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். முதல் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதி ரூ.56 பில்லியன் எதிர்மறையாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணக்கிட்டிருந்தது. ஆனால் இந்தக் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதியை ரூ.48 பில்லியன் நேர்மறையாகக் கொண்டுவந்திருக்கிறோம்.
இலங்கை பாராளுமன்றம் - பாராளுமன்றம் நேரலை - தேவைக்கேற்ப | மே 25, 2023
Posted on: 20 ஜூன், 2023

Partly True
நிதி முகாமைத்துவச் சட்டங்களுடன் இணங்காமை குறித்து அமைச்சர் குணவர்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
… 2003ம் ஆண்டின் 3 ஆம் இல. அரசிறை முகாமைத்துவ பொறுப்பு சட்டத்தில்… மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன… வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கும் குறைவாகப் பேணுதல்… 10 ஆண்டுகளில் அதாவது 2013ம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 65 சதவீதமாக பொதுப் படுகடனைக் குறைத்தல்…
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் பக்கம் | மே 9, 2023
Posted on: 9 ஜூன், 2023

True
அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”
டெய்லி FT | ஏப்ரல் 20, 2023
Posted on: 25 மே, 2023

True
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றில் தெளிவில்லை
பற்றாக்குறைக்கு நிதியளிக்கும் திட்டம்: 2023-27 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடன் சேவைக் குறைப்பு, வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், 2022 ல் நிலுவைகள் உட்பட ஐ.அ.டொ 17 பில் கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | ஏப்ரல் 26, 2023
Posted on: 18 மே, 2023

True
பணவனுப்பல்களின் அதிகரிப்பு குறித்து அமைச்சர் நாணாயக்கார சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மார்ச் 2022ல் ஐ.அ.டொ 318.4 மில்லியனில் இருந்து மார்ச் 2023ல் ஐ.அ.டொ 568.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022ல் பதிவான உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் இது 78.5% (ஐ.அ.டொ 249.9 மில்லியன்) அதிகரிப்பாகும்.
மனுஷ நாணாயக்காரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஏப்ரல் 6, 2023
Posted on: 11 மே, 2023

True