இரான் விக்கிரமரத்ன
இலங்கையின் குறைவான சேமிப்பு தொடர்பில் விக்கிரமரத்னவின் கருத்து தவறாக உள்ளது
இலங்கையில் சேமிப்புகள் குறைவாக உள்ளன. பொதுவாக இலங்கையில் சேமிப்புகள் அதிகபட்சமாக 15% அல்லது 20% ஆகும். இந்தியாவில் இது 30% - 35 சதவீதமாக உள்ளது. சீனாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எங்களிடம் அது இல்லை.
பாராளுமன்றம் | ஜூன் 7, 2024
Posted on: 4 அக்டோபர், 2024
False
இலங்கையின் கடவுச்சீட்டு தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஓரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை கடவுச்சீட்டு… உலகளவில் 97 ஆவது இடத்தில் உள்ளது… இதன் அர்த்தம் என்ன? அதாவது… 40 நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் செல்லலாம். வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது, வருகையின்போது விசா பெறுவதற்கான அணுகல் இலங்கைக்குக் குறைவாக உள்ளது. (தொடர்ச்சி)
இரான் விக்ரமரத்னவின் யூடியூப் பக்கம் | டிசம்பர் 8, 2023
Posted on: 22 பிப்ரவரி, 2024
Partly True
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்ரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
பாதுகாப்பு அமைச்சைக் கருத்தில் கொள்ளும்போது, 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 7 சதவீதத்தை நாங்கள் அதற்காக (பாதுகாப்பு அமைச்சு) செலவழித்திருக்கிறோம்… அதில் 60 சதவீதமானது சம்பளங்களுக்காகச் சென்றுள்ளது… (தொடர்ச்சி)
பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 14, 2023
Posted on: 26 ஜனவரி, 2024
True
வருமானம் குறைவடைந்தது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிடுகிறார்
வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்திரப்படுத்தல் பாதையை அரசாங்கம் எடுத்திருந்தாலும், அதன் இலக்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி காணப்படுகிறது. உதாரணமாக, கலால் வருமானத்தில் சுமார் 43% பற்றாக்குறை காணப்படுகிறது. (தொடர்ச்சி)
சன்டே ஒப்சேவர் | நவம்பர் 5, 2023
Posted on: 12 ஜனவரி, 2024
Partly True
பணவனுப்பல்கள் குறைவடைந்தமை தொடர்பில் பா.உ விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார், ஆனால் சமீபத்திய தகவல்களைக் குறிப்பிடவில்லை
நாங்கள் பணவனுப்பல்களைப் பார்த்தோமானால் அதிக பெறுமதியிலான பணவனுப்பல்கள் 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, 2020 மற்றும் அதற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்கள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. பணவனுப்பல்கள் சுமார் ஐ.அ.டொ 7.2 பில்லியனாக உச்சத்தில் இருந்தது. [..] (தொ))
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | செப்டம்பர் 28, 2023
Posted on: 12 அக்டோபர், 2023
Partly True
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டம் தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஒரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) ஏறத்தாழ 430 உள்ளன. இவற்றில்… 218 நிறுவனங்கள் ஆகும்… இவற்றில் 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்த முக்கிய நிறுவனங்களின் நட்டம் ரூ.286 பில்லியன் ஆகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | அக்டோபர் 12, 2022
Posted on: 11 நவம்பர், 2022
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன பணவீக்கத்தைச் சற்று மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்
கடந்த மாதத்தில் 46.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் இந்த மாதம் 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் பணவீக்கம் – உணவுப் பணவீக்கம் – 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எங்களின் ஆண்டுக்காண்டு பணவீக்கம் கூட வழக்கமாக 10 சதவீதத்தால் அதிகரிப்பதில்லை.
லங்காதீப | ஆகஸ்ட் 6, 2022
Posted on: 25 ஆகஸ்ட், 2022
Partly True
இலங்கையின் ஒதுக்குகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானது
2019 மற்றும் 2021ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 80% ஆகும். ஆனால் (தெற்காசியா) பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளில் ஒதுக்குகளில் அதிகரிப்பு காணப்படுகிறது.
டெய்லி FT | ஜனவரி 25, 2022
Posted on: 24 பிப்ரவரி, 2022
True