மாணவர்கள் “இலக்கின்றி அலைவது” குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவல் தவறாகக் குறிப்பிடுகிறார்
இந்த 400,000 மாணவர்களில் (தரம் 1 இல் நுழைபவர்கள்) 40,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதில்லை, அத்துடன் அவர்கள் இலக்கின்றி அலைய விடப்படுகின்றார்கள்.
இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 25, 2023
Posted on: 25 ஏப்ரல், 2024

False
ஜனாதிபதிக்குரிய செலவின ஒதுக்கீட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் அதிகரித்துக் குறிப்பிடுகிறார்
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்… செலவினங்களைக் குறைப்பதாக அரசாங்கம் மீண்டும் உறுதியளித்தாலும் ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பு ரூ.3,779 மில்லியனாக (அதிகரிக்கப்பட்டுள்ளது) உள்ளது… அமைச்சரவைக்கும் ஏனையவற்றுக்கும் இந்த ஜனாதிபதி செலவிடும் தொகையை நாங்கள் கவனத்தில் கொண்டால்… (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | நவம்பர் 22, 2023
Posted on: 4 ஏப்ரல், 2024

Partly True
நடைமுறைக் கணக்கு மிகை தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சரியாகக் குறிப்பிடுகிறார்
“2022 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் நாங்கள் மிகையைப் பதிவுசெய்துள்ளோம். (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | பிப்ரவரி 7, 2024
Posted on: 28 மார்ச், 2024

True
வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிக்கான முக்கிய காரணத்தை இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2022 ஆம் ஆண்டில், இந்த நாடு எப்போதும் சந்தித்திராத மோசமான வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்தபோது, அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய பணவனுப்பல்கள் காணப்பட்டன. அதற்கு அடுத்ததாக சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் காணப்பட்டது.
பாராளுமன்றம் | நவம்பர் 21, 2023
Posted on: 21 மார்ச், 2024

Partly True
வெளிநாட்டுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்ஹ குறிப்பிடுகிறார்
நமது நாட்டிலிருந்து நாளாந்தம் 500 பேர் வெளிநாடு செல்கிறார்கள். அண்மைக் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 180,000 – 200,000 நபர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். இந்த நாட்டில் வாழ்வது கடினம் என்பதே அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான காரணம் ஆகும்.
தினமின | டிசம்பர் 21, 2023
Posted on: 14 மார்ச், 2024

Partly True
பா.உ வீரவங்ச செல்வத்திலுள்ள சமத்துவமின்மையை வருமான சமத்துவமின்மையாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையிலுள்ள 1% செல்வந்தர்கள் தேசிய வருமானத்தில் 31 % ஐ அனுபவிக்கிறார்கள். அதேபோன்று அந்த 1% உட்பட, சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ள 10 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தின் 64 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள் […]. அதன் பிறகு கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தின் 4 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள்.
விமல் வீரவங்சவின் யூடியூப் சேனல் | ஜனவரி 30, 2024
Posted on: 7 மார்ச், 2024

Partly True
ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி உதவி ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்
“[…] கடந்த ஆண்டின் இறுதியில் ஒதுக்குகளை 4.4 பில்லியனாக எங்களால் அதிகரிக்க முடிந்தது.”
இலங்கை மத்திய வங்கியின் 2024 இன் 01 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு | ஜனவரி 23, 2024
Posted on: 29 பிப்ரவரி, 2024

Partly True
இலங்கையின் கடவுச்சீட்டு தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஓரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை கடவுச்சீட்டு… உலகளவில் 97 ஆவது இடத்தில் உள்ளது… இதன் அர்த்தம் என்ன? அதாவது… 40 நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் செல்லலாம். வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது, வருகையின்போது விசா பெறுவதற்கான அணுகல் இலங்கைக்குக் குறைவாக உள்ளது. (தொடர்ச்சி)
இரான் விக்ரமரத்னவின் யூடியூப் பக்கம் | டிசம்பர் 8, 2023
Posted on: 22 பிப்ரவரி, 2024

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
நமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 18 ஆம் திகதிக்கும் அக்டோபர் 18 ஆம் திகதிக்கும் இடையே நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
உதய கம்மன்பிலவின் யூடியூப் சேனல் | ஜனவரி 8, 2024
Posted on: 15 பிப்ரவரி, 2024

True
அரசாங்கத்தால் மாதாந்தக் கொடுப்பனவு பெறும் 4 மில்லியன் மக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய குறிப்பிடுகிறார்
4 மில்லியன் மக்கள் (குழு) அரசாங்கத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களில் 2 மில்லியன் ஊதியங்களில் உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒய்வூதியக்காரர்கள். மீதமுள்ள 2 மில்லியன் மக்கள் அஸ்வெசும ஊடாக சமூக நலன்புரித் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்.
ரன்ஜித் சியம்பலாபிடிய ஃபேஸ்புக் பக்கம் | நவம்பர் 8, 2023
Posted on: 8 பிப்ரவரி, 2024

True