பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023
True
வரி இலக்குகள் தொடர்பில் பா.உ கொடஹேவா தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் ரூ.3,130 பில்லியன் ஆகும் (2022 ஆம் ஆண்டிலிருந்து 70% அதிகரிப்பு). இது நடைமுறையில் சாத்தியமற்றது. வரி தளம் சரியாகச் செயற்படாததால், 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்தியவர்களே இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டியேற்படும்.
அருண | அக்டோபர் 9, 2023
Posted on: 26 அக்டோபர், 2023
False
தொழில்துறை தொடர்பில் சரியாகக் குறிப்பிடும் பா.உ பெரேரா ஏற்றுமதிகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
…ஏற்றுமதிகள் 19.5 சதவீதத்தால் குறைந்துள்ளன. […] 2023 முதல் காலாண்டில் தொழில்துறை 23.4 சதவீதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்ற யூடியூப் பக்கம் | ஆகஸ்ட் 23, 2023
Posted on: 20 அக்டோபர், 2023
Partly True
பணவனுப்பல்கள் குறைவடைந்தமை தொடர்பில் பா.உ விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார், ஆனால் சமீபத்திய தகவல்களைக் குறிப்பிடவில்லை
நாங்கள் பணவனுப்பல்களைப் பார்த்தோமானால் அதிக பெறுமதியிலான பணவனுப்பல்கள் 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, 2020 மற்றும் அதற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்கள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. பணவனுப்பல்கள் சுமார் ஐ.அ.டொ 7.2 பில்லியனாக உச்சத்தில் இருந்தது. [..] (தொ))
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | செப்டம்பர் 28, 2023
Posted on: 12 அக்டோபர், 2023
Partly True
கசினோ வரிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] ஏப்ரல் 1, 2023 முதல் அமுலுக்கு வரும்வகையில் சூதாட்டம் போன்ற வணிக நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் ஐ.அ.டொ 50 கட்டணத்தை விதிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்தச் சட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் உள்ளது. (தொடர்ச்சி…)
Manthiri.lk Watch | ஆகஸ்ட் 9, 2023
Posted on: 5 அக்டோபர், 2023
Partly True
EPF உண்மையான வருமானங்கள் தொடர்பில் பா.உ ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
[…] (EPF) சட்டத்தில் 2.5% வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. […] அந்த நேரத்தில் பணவீக்கம் சுமார் 1 சதவீதமாக இருந்தது. 1958 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளை நீங்கள் பார்த்தால், பணவீக்கம் சராசரி 1 சதவீதமாக இருந்தது. […] (தொடர்...)
நியூஸ்லைன் | மே 22, 2023
Posted on: 29 செப்டம்பர், 2023
True
சிறைச்சாலைகளுக்கான செலவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
இன்றைய நிலவரப்படி, சிறைச்சாலைகளில் உள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 28,468. […] போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது. இன்றைய நிலவரப்படி, மொத்தக் கைதிகளில் 50.3 சதவீதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள். (தொடர்...)
ஏசியன் மிரர் | ஆகஸ்ட் 10, 2023
Posted on: 21 செப்டம்பர், 2023
True
சிங்களச் சனத்தொகை வீழ்ச்சியடைவது தொடர்பில் பா.உ கம்மன்பில தவறான எச்சரிக்கையை எழுப்புகிறார்
1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம், கொழும்பு நகரத்தின் சிங்கள சனத்தொகை 51 சதவீதமாகும். 2012 கணக்கெடுப்பின் பிரகாரம், கொழும்பு நகரத்தின் சிங்கள சனத்தொகை 28 சதவீதமாகும். சிங்கள சனத்தொகை பாதியளவாகக் குறைந்துள்ளது. ...
அருண | ஆகஸ்ட் 3, 2023
Posted on: 14 செப்டம்பர், 2023
False
இலங்கையின் சுகாதார சேவைகளின் தரம் குறித்து பா.உ திசாநாயக்க ஓரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், தெற்காசியாவில் இலங்கையின் சுகாதார சேவை சிறப்பாக உள்ளது.
தி லைஃவ் ட்ராவல்லர் | ஜூலை 19, 2023
Posted on: 7 செப்டம்பர், 2023
Partly True
பா.உ அமரசூரிய: பெண்கள் அதிகம் பங்களிக்கும்போதிலும் தொழிற்படையில் குறைவாகக் கணக்கிடப்படுகிறார்கள்
…தொழிற்படையில் பங்கேற்பை அளவிடும்போது சில காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை… பெண்களால் செய்யப்படும் ஊதியம் பெறப்படாத பெரும்பாலான வேலைகள் இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படுவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் முன்வைக்கப்படும் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 60 சதவீதமான பராமரிப்பு வேலைகள்,...
NPP உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் NPP ஊடக சந்திப்பு | ஜூலை 16, 2023
Posted on: 21 ஆகஸ்ட், 2023
True