பாட்டலி சம்பிக்க ரணவக்க
எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்
(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.
டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024
Posted on: 7 நவம்பர், 2024

False
அரச உத்தியோகத்தர்களின் குறைந்த சம்பளத்திற்கு பெறுமதிசேர் வரிச் சலுகைகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க காரணம் காட்டுகின்றார்
பெறுமதிசேர் வரி (VAT) சலுகையை வழங்காவிட்டிருந்தால், அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை மாதாந்தம் 30,000 ரூபாவால் அதிகரித்திருக்கலாம். அதுதான் உண்மை
பாட்டளி சம்பிக ரணவக்கவின் ஃபேஸ்புக் | ஜூலை 10, 2024
Posted on: 10 செப்டம்பர், 2024

True
பாட்டலி – இலங்கையின் சௌகரியமற்ற சமநிலையைச் சரியாகக் குறிப்பிடுகிறார், எனினும் எரிபொருள் கட்டணச் சேமிப்பைத் தவறாகக் குறிப்பிடுகிறார்
”...நாட்டின் தற்போதைய நிலை குறைந்த அளவிலான சமநிலையில் உள்ளது. இது ஒரு சௌகரியமற்ற சமநிலை… எங்களின் சாதாரண (மாதாந்த) எரிபொருள் கட்டணம் ஐ.அ.டொ 550 மில்லியனாக இருந்தது. இது தற்போது ஐ.அ.டொ 200 மில்லியனாகக் குறைந்துள்ளது…”
Daily Mirror | ஜனவரி 12, 2023
Posted on: 13 பிப்ரவரி, 2023

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க இலங்கையின் கடனில் மறைக்கப்பட்ட ஒரு அம்சத்தை குறிப்பிடுகிறார்
பொதுத்துறைக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 109.7% என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமானது. பன்னாட்டு முறிகளை அரசாங்கம் குறைமதிப்பிட்டதை நாங்கள் புறக்கணித்தால் இந்தப் பெறுமதி மொ.உ.உற்பத்தியின் 113 சதவீதத்தைத் தாண்டும்.
தினமின | ஜூன் 2, 2021
Posted on: 5 ஆகஸ்ட், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க: இலங்கையின் சீனி மற்றும் கொழுப்பு (இறக்குமதி) உயர்ந்துள்ளதை சரியாகக் குறிப்பிடுகின்றார்.
2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனி இறக்குமதி 38 சதவீதத்தினாலும், எண்ணெய் மற்றும் கொழுப்புக்களின் இறக்குமதி 237 சதவீதத்தினாலும் உயர்ந்துள்ளன.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 11, 2021
Posted on: 1 ஏப்ரல், 2021

True
நாணயம் அச்சிடல்: பணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரையில் ரூ.130 பில்லியன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அருண | நவம்பர் 12, 2021
Posted on: 21 ஜனவரி, 2021

True
ஜப்பானின் கடன் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே தெரிவிக்கின்றார்.
ஒரு நாடாக, ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்கியுள்ளது
அருண | ஜூன் 16, 2020
Posted on: 8 ஜூலை, 2020

True
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வருமான வளர்ச்சியினை பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்துகின்றார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, அரச வருமானம் 1.05 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டது. எமது அரசாங்கம் 5 ஆண்டுகளில் இந்த வருமானத்தை 2.1 ட்ரில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்கியது.
லங்காதீப | பிப்ரவரி 6, 2020
Posted on: 29 ஏப்ரல், 2020

Partly True
விமான நிறுவனங்களின் கடன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவினால் நாட்டிலுள்ள நபர்கள் ஒவ்வொருவரும் 12,500 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
திவயின | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 4 பிப்ரவரி, 2020

False
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க: வருமானம் மற்றும் தரவரிசை தொடர்பில் தெரிவித்துள்ளவை தவறு.
இன்று, இலங்கை நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடு என்பதுடன் தனிநபர் வருமானம் 13,000 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
டெய்லி நியூஸ் | அக்டோபர் 3, 2018
Posted on: 19 அக்டோபர், 2018

False