அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி திசாநாயக்க எரிபொருள் விலை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்

"

“சந்தையில் எண்ணெய் விலை 1 ஐ.அ.டொலரால் அதிகரித்தால் எங்கள் சந்தையில் அது தாக்கம் செலுத்தி, எண்ணெயின் விலையை 2 ரூபாவால் அதிகரிக்கச் செய்யும்”

பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 20, 2026

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

எரிபொருள் விலையில் ஏற்பட்ட சமீபத்திய அதிகரிப்புக்கு மத்தியில், உலகச் சந்தையில் எரிபொருளின் விலை ஒரு பீப்பாய்க்கு 1 ஐ.அ.டொலரால் அதிகரித்தால் உள்நாட்டில் 2 ரூபாவால் அதிகரிக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, நிதி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தை FactCheck.lk ஆராய்ந்தது. இது வெரிட்டே ரிசேர்ச்சால் வெளியிடப்படும் எரிபொருள் விலை கண்காணிப்பானால் மாதாந்தம் மதிப்பிடப்படுகின்றது.

அட்டவணை 1 இல் காட்டப்பட்டது போன்று, ஒரு பீப்பாயின் விலை ஐ.அ.டொ 90 இல் இருந்து ஐ.அ.டொ 91 ஆக அதிகரிக்கின்றது என கற்பனை செய்தால், சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட உள்நாட்டு விலை ரூ.313.16 என்னும் நாணய மாற்று வீதத்தில் ரூ.2.43 ஆல் அதிகரிக்கும்.

எனினும், ரூ.0.42 என்னும் இந்த அதிகரிப்பு விலைச் சூத்திரத்தின் கீழ் செலுத்த வேண்டிய வரியினால் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பெறுமதி சேர் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி என்பன செலவின் சதவீதமாகக் கணக்கிடப்படுவதுடன் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது அதிகரிக்கின்றன. எனவே விலையின் இந்தப் பகுதி அடிப்படை எரிபொருள் செலவில் ஏற்படும் அதிகரிப்பைப் பிரதிபலிக்காது.

இதன் காரணமாக, பீப்பாயின் விலை 1 ஐ.அ.டொலரால் அதிகரிக்கும்போது சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட விலை கணக்கீடு ரூ.2.43 ஆல் அதிகரித்தாலும், உண்மையான அடிப்படை விலை/எரிபொருள் விநியோகச் செலவு ரூ.2.01 ஆல் மட்டுமே அதிகரிக்கின்றது. இது ஜனாதிபதி குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகின்றது.

எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டேFactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளைFactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: உலகச் சந்தையில் எரிபொருளின் விலை 1 ஐ.அ.டொலரால் அதிகரிக்கும்போது உள்நாட்டில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம்

மேலதிகக் குறிப்பு 1: வெரிட்டே ரிசேர்ச்சின் எரிபொருள் விலை கண்காணிப்பானில் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. பார்வையிட: https://veriteit.github.io/FuelPriceTracker/data/Fuel-Price-Methodology.pdf



மூலம்

Fuel Price Tracker, Verité Research, https://dashboards.publicfinance.lk/fuel-price-tracker/

March 20, 2026, Parliament YouTube Page, https://www.youtube.com/watch?v=pfSLMgETOOw&t=9464s

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன