பந்துல குணவர்த்தன

பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தனவின் இரண்டு கூற்றுக்களும் தவறானவை: அறிக்கையில் மாத்திரமன்றி, மொழியிலும் அவர் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.

"

பெப்ரவரியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நாசப்படுத்தியுள்ளார். அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் இன்றி விவாதத்தை தொடர்ந்து கொண்டு செல்வது தவறானது என தமிழ்த்தேச

தி ஐலன்ட் | அக்டோபர் 24, 2018

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன பின்வரும் கருத்தை தெரிவித்திருந்தார் என ஐலன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது:

பெப்ரவரி 2018 இன் ஆரம்பத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நாசப்படுத்தியுள்ளார். “அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் இன்றி அந்த விவாதத்தை தொடர்ந்து கொண்டு செல்வது தவறானது என்ற நிலைப்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருந்தது” எனவும் அந்தப் பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது அறிக்கையில் இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார். (1) பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிணை முறி ஆணைக்குழு அறிக்கையை குறிப்பிடுகின்றார். (2) பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழில் அந்த அறிக்கையை கோருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தனவின் இந்தக் கூற்றுக்கள் உண்மையானவையா?

சூழ்நிலை:
இந்த விவாதம் பெப்ரவரி, 6 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பாரிய மோசடி, ஊழல், அதிகார பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யூம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவந்த ஒரு மாத காலத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்புரையுடன் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதே இதன் நோக்கமாகும்.

நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் பாராளுமன்றத்தில் எந்தவொரு விவாதமும் கொண்டுவரப்பட வேண்டும் என்றால், பிரேரணை மும்மொழிகளிலும் கிடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த விவாதத்திற்கு முன்னதாக, இந்த அறிக்கைகள் ஆங்கிலத்தில் கிடைத்தால், மும்மொழிகளிலும் மொழிபெயர்ப்புக்களுக்காக காத்திருக்காமல், பாராளுமன்றத்தில் இந்த விவாதத்தை முன்னெடுக்கலாம் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. விவாதத்தின் போது பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை ஆங்கிலத்தில் இருந்த போதும், பாரிய மோசடி, ஊழல், அதிகார பிரயோகம்இ அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யூம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது சிங்களத்தில் மாத்திரமே இருந்தது.

பெப்ரவரி 20 ஆம் திகதி  2018 ஆம் ஆண்டில் பாராளுமன்ற ஹன்சாட்டில் இந்த ஒத்திவைப்பு பிரேரணையின் விவாதம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையை ஆராய்தல்:
ஹன்சாட்டில் உள்ள தகவல்களை ஆராயும் போது, (அட்டவணை 1 மற்றும் 2 ஐ பார்க்கவூம்) பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. அந்த அறிக்கை ஆங்கிலத்தில் கிடைத்த போதும் தமிழில் கிடைக்கவில்லை. ஆனால் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது சிங்களத்தில் மாத்திரமே கிடைத்ததால், அந்த அறிக்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பங்கேற்க முடியாது என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பிணை முறி அறிக்கை குறித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தன முன்வைத்த முதலாவது குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெரிகின்றது.

பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழில் தான் வேண்டும் என பாராளுமன்றத்தில் சுமந்திரன் எந்த கோரிக்கையூம் விடுக்கவில்லை. மாறாக அந்த அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதால், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அதன் மொழிபெயர்ப்பு வேண்டுமென அவர் கேட்டிருந்தார். பிணை முறி அறிக்கை ஏற்கனவே ஆங்கிலத்தில் இருப்பதனால் அதன் மொழிபெயர்ப்பினை தாம் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழில் அந்த அறிக்கையை கோருகின்றார் என்ற குணவர்த்தனவின் இரண்டாவது குற்றச்சாட்டும் பொய்யானது என்பது இதன் மூலம் நிருபணமாகின்றது.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தனவின் இரண்டு கூற்றுக்களும் தவறானவை. பிணை முறி ஆணைக்குழு அறிக்கையின் மொழி தொடர்பாக சுமந்திரன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அதேபோன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழில் இல்லை என்பதனால் அவர் கேள்வி எழுப்பவில்லை. மாறாக அது சிங்கள மொழியில் மாத்திரமே இருப்பதனால் அதனுடைய தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பே வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவின் கூற்றினை ‘முற்றிலும் தவறானது’ என வகைப்படுத்துகின்றௌம்.

மேலும், சுமந்திரனின் கருத்துக்களின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியெல்லவின் தலையீட்டினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து இந்த விவாதத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டனர்.

ஐலன்ட் பத்திரிகையின் செய்திக்கு, தயவுசெய்து பார்க்கவும்:

http://www.island.lk/index.php…

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 20, பெப்ரவரி ஹன்சாட்டின் ஒரு பகுதி

அட்டவணை 2: 20, பெப்ரவரி ஹன்சாட்டின் ஒரு பகுதி



மூலம்

இலங்கை பாராளுமன்றம், ஹன்சாட் பெப்ரவரி 20, 2018: பக்கம் 501 – பக்கம் 505): http://www.parliament.lk/uploads/documents/hansard/1519296250017564.pdf

பிணை முறி ஆணைக்குழு அறிக்கை: http://www.presidentsoffice.gov.lk/…

பாரிய மோசடி, ஊழல், அதிகார துபிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துபிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யூம் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: http://www.presidentsoffice.gov.lk/…/PCI%20Final%20Report%2…

நிலையியற் கட்டளைகள்: http://www.parliament.lk/files/pdf/standing-orders-en.pdf