எம்.ஏ. சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகுதியளவு சரியாகத் தெரிவித்துள்ளார்: 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் அவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவில்லை.

"

(கடந்த 20 வருடங்களில்) 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மவ்பிம | அக்டோபர் 25, 2018

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்புக்கான கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு பூர்த்தியின் போது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களை மவ்பிம பத்திரிகை 25 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. சிங்களத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட அவரது கூற்று பின்வருமாறு அமைகின்றது:

“நான் சரியாக நினைவுபடுத்தினால், (கடந்த 20 வருடங்களில்) 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்”

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தக் கூற்று சரியானதா?

அவருடைய இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு, நாங்கள் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் (CPJ) இணையத்தளத்தினை ஆராய்ந்தோம். அவர்களுடைய தரவுகளின் பிரகாரம், 1999 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக எந்த தரவும் இல்லை.

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் இணையத்தளத்தில் கிடைத்த தரவுகளின் பிரகாரம், 1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களின் இனம் மற்றும் மரணத்திற்கான காரணம் என்பவற்றை அட்டவணை 1 காட்டுகின்றது.

அட்டவணை 1 இல்  குறிப்பிட்டுள்ளவாறு, 1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட 19 ஊடகவியலாளர்களில் 14 பேர் தமிழர்கள். அவர்களில் 9 பேர் மாத்திரமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, குறிப்பிட்ட காலப்பகுதியில் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சரியாகத் தெரிவித்துள்ள போதும், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் தவறாகவே குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அவருடைய கூற்றினை நாங்கள் “பகுதியளவில் சரியானது” என வகைப்படுத்துகின்றௌம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்

  • மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் இணையத்தளத்தை பார்வையிடவூம்: https://cpj.org.