சுனில் ஹந்துன்நெத்தி

பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துநெட்டியின் நகரமயமாக்கல் தொடர்பிலான தரவு: சரியாக மேற்கோள் காட்டப்பட்ட போதும், விளக்கம் தவறானது.

"

இலங்கையின் 74 சதவீதமான சனத்தொகை கிராமப்புறங்களில் வாழ்கின்றது.

திவயின | அக்டோபர் 15, 2018

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஒக்டோபர் 15 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்த பின்வரும் கூற்றை திவயின பத்திரிகை வெளியிட்டிருந்தது: இலங்கையின் 74 சதவீதமான மக்கள் கிராமப்புறங்களில் அல்லது கிராமிய அமைப்பில் வாழ்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்று சரியானதா?

இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆம் ஆண்டின் (2012 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவூகளை அடிப்படையாகக் கொண்டது) தரவுகளுக்கு அமைய, கிராமப்புறங்களில் வாழும் சனத்தொகை 77.4 வீதமாக பதிவாகியுள்ளது.

ஹந்துன்நெத்தி தனது கூற்றில் குறிப்பிட்ட சதவீதமானது இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையுடன் ஒரளவூ ஒத்துப்போகின்றது. எனினும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தப் புள்ளிவிபரங்களை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட “கிராமம்” மற்றும் “நகரம்” என்ற வரைவிலக்கணம், “கிராமப்புறம்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் சதவீதத்தையே குறிக்கின்றது. இந்த வகைப்படுத்தலில் காணப்பட்ட அசாதாரணம் காரணமாக இலங்கையில் கிராமப்புறங்களில் அல்லது கிராமிய அமைப்ப்பில் வாழ்வதாக கருத முடியாது. வகைப்படுத்தலில் காணப்பட்ட அசாதாரணம் காரணமாக இலங்கையில் கிராமப்புறங்களில் அல்லது கிராமிய அமைப்ப்பில் வாழ்வதாக கருத முடியாது. நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வகைப்படுத்தல் முற்று முழுதாக வரலாற்று நிர்வாக அடையாளங்களிலேயே  தங்கியுள்ளது, (கீழே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது) எனினும் இவை துறைகளின் இன்றைய நிலையை உணர்த்தவல்லாமல் உண்மைக்கு புறம்பாக அமைந்துள்ளன. இதன் காரணமாக, ஹந்துநெட்டி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்விட அமைப்பு குறித்து பேசுவதற்கு  இத்தகவல்களை பயன்படுத்துவது தவறானது.

முடிவூ: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மிகவூம் தவறான புள்ளிவிபரத்தினை ஹந்துநெட்டி சரியாக (ஓரளவேனும்) மேற்கோள் காட்டியுள்ளார். எனினும் ஹந்துநெட்டி அதற்கான விளக்கத்தினை சரியாக அளிக்கவில்லை. ஏனென்றால் உண்மையில் கிராமங்களில் அல்லது கிராமிய அமைப்புக்களில் வாழும் மக்களின் உண்மையான சதவீதத்தினை அது வெளிக்காட்டவில்லை. எனவே அவருடைய கூற்றினை நாங்கள் “பகுதியளவில் சரியானது” என வகைப்படுகின்றோம். கிராமப் புறங்களில் வாழும் சனத்தொகையானது உண்மையில் 56.2 வீதமாகும். முற்றாக 74 சதவீதம் அல்ல.

ஹந்துநெட்டியின் தவறான கூற்றுக்கான ஆதாரம்

2012 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பு மற்றும் வீடமைப்பு  கணக்கெடுப்பு அறிக்கையில் ‘நகரம்’ மற்றும் ‘கிராமம்’ என்பதற்கான வரைவிலக்கணம் கீழ்வருமாறு வழங்கப்படுகின்றது.

நகர்ப்புறம் – மாநகரசபை மற்றும் நகரசபைகளினால் நிர்வகிக்கப்படும் அனைத்துப் பகுதிகளும் நகர்ப்புறத்தின் கீழ் வருகின்றன.

தோட்டப்புறம் – 20 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட தோட்டங்கள் இந்த பிரிவுக்குள் அடங்குகின்றன.

கிராமப்புறம் – நகர்ப்புறம் மற்றும் தோட்டப்புறத்திற்குள் அடங்காத இலங்கையின் மற்றைய அனைத்துப் பகுதிகளும் இந்தப் பிரிவூக்குள் அடங்குகின்றன.

(முழுமையான அறிக்கைக்கு பார்வையிடவூம்: http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php….

இந்த வரைவிலக்கணங்கள் அனைத்தும் 1987 ஆம் ஆண்டில் வகைப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்களை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டது. நாட்டின் தற்போதைய உண்மை நிலையை இவை பிரதிபலிக்கவில்லை. உதாரணமாக, களனி மற்றும் ஹோமாகம ஆகிய இரண்டும் பிரதேச சபைகளினால் நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றின் வரைவிலக்கணக்கத்தின் பிரகாரம் இவை கிராமப்புறத்திற்குள் அடங்குகின்ற போதும், நகரமயமாக்கலில் அவை இரண்டும் முக்கிய நிலையங்களாக உள்ளன. இதன் காரணமாக, கிராமபுரத்திற்கான வரைவிலக்கணத்தை உண்மையில் கிராமங்களின் அல்லது கிராமிய வாழ்க்கைத் தரத்துடன் அர்த்தமுள்ளதாக இனி ஒன்று சேர்க்க முடியாது.

தொகை மதிப்பு கணக்கெடுப்பின் பிரதான தேடல்களுக்கான அறிக்கையே என்ன குறிப்பிடுகின்றது என்றால் “நகரமயமாக்களின் அளவூ அளவு அதன் வரைவிலக்கணத்திலேயே தங்கியுள்ளது. ஜ…ஸ எனவே, நிர்வாக அமைப்புக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல் மக்களின் பண்புகளை கருத்தில் கொண்டு நகர்ப்புறம் என்பதற்கான யதார்த்தமான வரைவிலக்கணத்தை அறிமுகம் செய்யவேண்டியது அவசியம்.”
(முழுமையான அறிக்கையை பார்வையிட: http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php….)

மேலும் சரியான கணக்கெடுப்புக்கான மூலம்:
நகர்ப்புறம் என்பதற்கான மாற்று வரைவிலக்கணத்தை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் முன்மொழிகின்றது:

ஒரு கிராம சேவகர் பிரிவு குறைந்த பட்சம் 750 பேரைக் கொண்ட சனத்தொகையைக் கொண்டிருந்தால், ஒரு சதுர கிலோமீற்றருக்கு 500 பேரைக்கொண்ட சனத்தொகை அடர்த்தியைக் கொண்டிருந்தால், விறகு அடுப்பில் தங்கியிருக்கக்கூடிய வீடுகள் 95 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், நீரின் தேவைகளுக்காக கிணறுகளில் மாத்திரம் தங்கியிருக்கக் கூடிய வீடுகள் 95 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் அவ்வாறான கிராம சேவகர் பிரிவை நகர்ப்புறம் என வரையறுக்க முடியும்.

இதனை அடிப்படையாகக் கொண்டால், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் 56.2 சதவீதமாகும். இது நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வரைவிலக்கணத்தை பயன்படுத்தி கணக்கெடுக்கப்பட்டதை விடக் குறைவாகும்.

(கொள்கை ஆய்வூகளுக்கான நிறுவனத்தின் அறிக்கையை பார்வையிட: http://www.ips.lk/…/uplo…/2017/01/Redefining-Urban-Areas.pdf.)

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்