சஜித் பிரேமதாச

தவறான அடிப்படையைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவறாகக் கணக்கிடுகின்றார்.

"

2020 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம், கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 40.9% ஆல் குறைந்துள்ளது.

திவயின | அக்டோபர் 7, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் கூற்றினை மதிப்பிடுவதற்கு, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகளிலுள்ள தரவுகளை FactCheck ஆராய்ந்தது.

2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் வரி வருமானம் ரூ.670.4 பில்லியன். 2019 ஆம் ஆண்டு அதே காலப்பகுதியில் வரி வருமானம் ரூ.944.4 பில்லியன். இது 29.0% குறைவாகும்.

40.9% என்ற தவறான கூற்றுக்கான அடிப்படையை புரிந்துகொள்வதற்கு FactCheck முயற்சி செய்தது. பாராளுமன்ற உறுப்பினர் கணக்கீட்டில் அல்லது அறிக்கையின் வார்த்தைகளில் பிழை செய்திருக்கலாம் என்பதை அட்டவணை 1 காட்டுகின்றது. 2020 ஆம் ஆண்டினை விட 2019 ஆம் ஆண்டில் வரி வருமானம் 40.9% அதிகம் என அவர் தனது கூற்றினை தெரிவித்திருந்தால் (2020 ஆம் ஆண்டின் குறைந்த வருமானத்தை அடிப்படையாகப் பயன்படுத்தியிருந்தால்) அது சரியானதாக இருந்திருக்கும். எனினும், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் வருமானம் குறைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று அமைந்துள்ளது. இந்நிலையில், எதிர்பார்க்கப்படும் கணக்கீட்டில் 2019 ஆம் ஆண்டின் வருமானம் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – இது 29.0% சதவீதம் குறைவையே தருகின்றது.

ஆகவே, நாங்கள் அவரது கூற்றினை “தவறானது” என வகைப்படுத்துகின்றோம்.

குறிப்பு: ஆய்வின் திசையைப் பொறுத்து சதவீத மாற்றங்கள் வித்தியாசப்படும் சிக்கலைத் தவிர்க்க, பொருளாதார நிபுணர்கள் சில சமயங்களில் இரண்டு எண்களின் நடுப்புள்ளியினை ஒப்பிடுவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்துவது உண்டு (இடைநிலை சூத்திரம்). இந்த சூத்திரத்தினை பயன்படுத்தினால் 33.9 சதவீத மாற்றத்தினைத் தரும் – இதுவும் அவர் குறிப்பிடும் 40.9 சதவீதத்தை விட மிகக் குறைவாகும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் (02 ஒக்டோபர் 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20201002_e.pdf [Last accessed: 03 November 2020]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன